அறுகதையற்றதை காட்டும் மழை

kada flo

பெருமழை! கன மழை!

மாதம் மும்மாரி பொழிகிறதா?

கேள்வி மாறி விட்டது.

ஏசி காரில்,

கண்ணாடியும் இறக்காமல்

மூன்று மாத மழை மூன்று நாளில்.

கேள்வி மட்டுமா?

மழையும் மாறிவிட்டது.

அம்மா வந்த சாலையில்

தேங்கவே இல்லையே மழை நீர்.

 

எல்லாருமே நடிகர்கள் தாம்.

முட்டிவரை ரப்பர் செருப்பில் ஒரு நடிகர்

தொடைவரை மடித்துக் கட்டி ஒரு நடிகர்

வாக்காளப் பெருங்குடி மக்களே என்றொரு நடிகர்

இந்த துன்பியல் நாடகத்தில்

மக்களுக்கு மட்டுமே சோகம்.

 

சில நீர் தள்ளும் பம்புகள்

வெள்ளை வேட்டியில் சில அமைச்சர்கள்

உணவுப் பொட்டலத்துடன் கொஞ்சம் இளிப்பு

இதன் பெயர் போர்க்கால நடவடிக்கை.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

என்று யாரோ சொல்லி விட்டார்களாம்.

அவசர அவசரமாய் அகராதியில்

பொருள் தேடிக் கொண்டிருக்கிறது அரசு.

 

எல்லாம் நனைந்த மக்களிடம்

மைக்கை நீட்டி அதை

விளம்பரங்களிடையே இடம் தேடிச் செருகி

பரபரப்பாய் பணம் பண்ணும் ஊடகங்கள்.

 

ஏரிகளில் ஆழமில்லை

பாதிக் கொள்ளளவில் நிரம்பி வழியுது.

ஆறுகளைக் காணோமென்று

வெள்ள நீர் தேடி அலையுது.

குளங்கள் எனக்குள் அடக்கமென

கமுக்கமாய் சிரிக்கின்றன கட்டடங்கள்.

ஆனாலும்,

இயற்கைச் சீற்றம் என்று தான் சொல்லுவோம்.

 

இன்று மட்டுமா இந்த

வரலாறு காணாத வெள்ளம்.

ஒவ்வொரு முறை வரும் போதும்

வரலாறும் காண மறுக்கிறது,

வாறுகின்ற வழியும் தெரிய மறுக்கிறது.

 

இந்த ஆட்சியில் தூர் வாறாததே குற்றம்,

அந்த ஆட்சியில் குளம் வெட்டாததே குற்றம்.

எந்த ஆட்சியிலும்

எதுவும் நடக்கப் போவதில்லை.

ஓட்டு போட்டது தான்

மக்களின் பாரிய குற்றம்.

 

விவசாயத்துக்கு நீரில்லை திறந்து விடுங்கள்

கெஞ்சிய விவசாயிகள்

கிள்ளுக் கீரையானார்கள் அரசிடம்

மழை வந்த போது

இரக்கமே இல்லாமல் ஏரியை திறந்ததால்

மடிந்து போன மக்கள்

வாக்குச் சீட்டுக்கு துருப்புச் சீட்டானார்கள்.

 

ஆற்று மணலை

ஒட்டச் சுரண்டும் அரசு

ஆக்கிரமிப்பை அகற்றாத காரணம் என்ன?

ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் தரும்

நன்கொடைகளை விடவா

மக்கள் முக்கியமாகி விடுவார்கள்.

 

நிலத்தடி நீரை

கோலாவுக்கு விற்கும் அரசு

ஏரி கால்வாய்களை தூர்வாராத மர்மம் என்ன?

பன்னாட்டு எஜமானர்களின் பின்வாய்

உத்தரவுகளை விடவா

மக்களின் முன்வாய் முக்கியம்.

 

சாராயம் ஊற்றிக் கொடுக்க

திட்டம் போட்டு இலக்கு வைக்கும் அரசு

பெருமழைக்கு திட்டமிடாத நோக்கம் என்ன?

மக்களை போதை ஏற்றி

தள்ளாட வைக்கும் தேவையை விடவா

அவர்கள் நல்வாழ்வு முக்கியமாகி விடும்.

 

ஆறுகள் திருடப்படும்

ஏரி குளங்கள் காணாமல் போகும்

வளங்கள் கொள்ளையிடப்படும்

கனிமங்களும் உறிஞ்சப்படும்

ஏன்

விதை நெல்லையும் விட்டுவைக்க மாட்டார்கள்.

பட்டினியால் செத்தால் கூட

பத்துகாசு நிவாரணம் மட்டுமே மதிப்பு

ஏனென்றால்

இது முதலாளிகளின் அதிகாரம்.

 

இன்றே நாம்

மக்கள் அதிகாரத்துக்காக போராடாவிட்டால்

நாளை

கோமண நூலும் கூட

மிஞ்சப் போவதில்லை.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பூங்கொத்தை விட மலிவான மனித உயிர்கள்

மந்திரி தந்திரி! – 30

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பரபரப்பு கூடியிருந்த நேரம். தே.மு.தி.க., இடதுசாரிகள் எல்லாம் சேர்ந்து அ.தி.மு.க தலைமையில் ‘மெகா கூட்டணி’ உருவாகியிருந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகி, கூட்டணிக் கட்சிகள் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகள் அரண்டுபோயின. தமிழகத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இப்படி நடந்தது இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல், கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்த…  ‘ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது’ என அறிவித்தார்கள். ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் அ.தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அந்த அப்பாடக்கர் யார் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

வேட்பாளர் பட்டியல் மட்டுமா தெரியாமல் ரிலீஸ் ஆனது? ‘எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடப் போனார்கள்’ என அறிக்கைவிட்டு மீடியாவை மிரளவைத்தார். ‘ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை’ எனச் சொல்லி, நீதிமன்றத்தையே கிடுகிடுக்கவைத்தார். ‘சசிகலாவோடு இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை’ என அதிரடி செய்வார். ஆனால், அடுத்த சில மாதங்களில் மொத்த மன்னார்குடி குழுவினரும் கார்டனில் கோலோச்சுவார்கள். மந்திரிகளைப் பந்தாடுவார்; அமைச்சரவையைக் கலைத்துப்போட்டு ரம்மி ஆடுவார்; கார்டனில் அமர்ந்துகொண்டு கோட்டையை இயக்குவார்; கொடநாட்டில் இருந்தபடி தமிழ்நாட்டைத் தெறிக்கவிடுவார்; கட்சிக்காரர்களை ‘எப்போது பதவி பறிபோகுமோ?’ என்ற பதற்றத்திலேயே வைத்திருப்பார்… இதுதான் ஜெயலலிதா; இவர்தான் ஜெயலலிதா!

‘நடிகை நாடாள முடியுமா?’ என எதிரணியினர் முழங்கிக்கொண்டிருந்தபோது, அதை மெய்ப்பித்துக்காட்டியவர். நடிகை, கொள்கைபரப்புச் செயலாளர், எம்.பி., சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கட்சியின் பொதுச் செயலாளர், முதலமைச்சர்… என ஜெயலலிதாவின் பயணம் நீண்ட நெடியது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதற்கு ஒரே காரணம் ஜெயலலிதா மட்டும்தான்.

1991, 2001, 2002, 2011, 2015 என… ஜெயலலிதா முதல்வர் அரியணையில் அமர்ந்திருப்பது இது ஐந்தாவது முறை. இடையில் சொத்துக்குவிப்பு வழக்கினால் சுமார் எட்டு மாத காலம் ஓ.பி.எஸ். தமிழக முதல்வராக இருந்தார். அப்போதும் ‘மக்கள்’ முதல்வராக ஜெயலலிதாதான் இருந்தார். இந்த நான்கு ஆண்டு காலத்தில் முதல்வராக ஜெயலலிதா சாதித்தது என்ன? காவல் துறைக்கு அமைச்சராக, ஒட்டுமொத்தத் துறைகளுக்கும் தலைமை நிர்வாகியாக ஜெயலலிதா சாதித்தாரா… சறுக்கினாரா?

விதி 110… அறிவிப்புகள் 181

‘பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர், சபாநாயகரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம். அந்த அறிக்கையின் மீது அப்போது எந்தவித விவாதமும் இருத்தல் கூடாது’ – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 இப்படித்தான் விவரிக்கிறது. ஆனால், எந்தப் பொது முக்கியத்துவமும் இல்லாத, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் மட்டுமே 110-ன் கீழ் வெளியிடப்படு கின்றன. இந்த நான்கு ஆண்டு காலத்தில்

181 அறிவிப்புகளை 110-ன் கீழ் வெளியிட்டிருக்கிறார் ஜெயலலிதா. 110 என்ற விதியை கடைக்கோடி தமிழன் வரை பிரபலப்படுத்தியதில் ஜெயலலிதாவின் பங்கு மகத்தானது. ஆனால், அந்த அறிவிப்புகள் ஏதாவது செயல்வடிவம் பெறுகின்றனவா?

‘வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 2,160 கோடி ரூபாய் செலவில் 311 ஏக்கரில் சென்னை திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும்’ என 2011-ம் ஆண்டில் அறிவித்தார். இதுவரை எந்தத் துணைக்கோள் நகரத்தையும் காணவில்லை. இந்தத் திட்டத்துக்கு வரைபடம் தயாரிக்கும் பணியே இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் ‘கேளம்பாக்கம் அருகில் துணை நகரம் அமைக்கப்படும்’ என கருணாநிதி அறிவித்தார். உடனே ஜெயலலிதா காட்டமாக அறிக்கைவிட்டார். ‘கருணாநிதி வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகள், பேரன் பேத்திகள், மறைந்த முதல் மனைவியின் உறவினர்கள், அவர்கள் வழி வந்த உறவினர்கள், இருக்கும் மனைவியின் உறவினர்கள் ஆகியோர் முதலில் கோபாலபுரத்தைவிட்டும், சி.ஐ.டி காலனியைவிட்டும் வெளியேறி ஜனநெருக்கத்தைக் குறைத்தாலே, துணை நகரத்துக்கு அவசியம் இல்லாமல்போய்விடும்’ என்றார். பிறகு அவரே திருமழிசை துணை நகரத் திட்டத்தை அறிவித்து, அதுவும் தூங்கிக்கொண்டிருக்கிறது.

‘மதுரை விமான நிலையத்துக்கு அருகில் 586 ஏக்கரில் அனைத்து வசதிகளுடனும்கூடிய ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும்’ என்பது 110-ன் கீழான இன்னோர் அறிவிப்பு. இதுவரை வரைபடம் தயாரிக்கும் பணிகூட முடியவில்லை.  ‘தமிழகத்தின் தென்பகுதி நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும்’ என்றார். நிலம் கையகப்படுத்துவதற்கான வழிகளைக்கூட இப்போதுதான் ஆராயத் தொடங்கியிருக்கிறது சி.எம்.டி.ஏ.

ஓடாத மோனோ ரயில்!

கருணாநிதி மெட்ரோ ரயிலுக்கு அடிக்கல் நாட்டியபோது, ‘மெட்ரோ ரயிலைவிட மோனோ ரயில்தான் பெஸ்ட்’ என பக்கம் பக்கமாக அறிக்கைவிட்டு மட்டம் தட்டினார் ஜெயலலிதா. ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சொந்தம் கொண்டாடினார். ‘சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். கிழக்கு தாம்பரம் வழியாக வண்டலூரில் இருந்து வேளச்சேரி வரையிலும், போரூர் வழியாக பூந்தமல்லியில் இருந்து கத்திப்பாரா வரையிலும், வளசரவாக்கம் வழியாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலும் செல்லக்கூடிய மூன்று வழித்தடங்கள் கொண்டதாக மோனோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது’ என 2011-ம் ஆண்டில் அறிவித்தார் ஜெயலலிதா. அத்துடன் ‘மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்’ என ஜிகினாக்களைத் தொங்கவிட்டார். எல்லாமே பஞ்சர்தான்.

நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 35 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் ஆறு பணிகள்தான் முடிக்கப்பட்டிருக்கின்றன. ‘மாமல்லபுரத்தில் 10 கோடி ரூபாய் செலவில் பல ஏக்கர் பரப்பில் நீர்மூழ்கிக் கப்பலுடன்கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என 2012-ம் ஆண்டில் அறிவித்தார். அதுவும் அப்படியே இருக்கிறது. ‘திட்டம் சாத்தியமா?’ என்கிற சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்துவிட்டு திட்டத்தை அறிவிப்பதுதான் நடைமுறை. ஆனால், இவர்கள் ரிவர்ஸில் பயணிக்கிறார்கள். இந்த உண்மை இப்படி இருக்க… 110 விதி அறிவிப்புகளை எல்லாம் சேர்த்து ‘விதியை மாற்றிய விதி’ என்ற தலைப்பில் புத்தகமாகப் போட்டிருக்கிறது அரசு.

மின்சார வெட்டு வாரியம்?

தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு மக்கள், அ.தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்த மின்வெட்டு ஒரு முக்கியக் காரணி.  ஆட்சிக்கு வந்த பிறகு 2011-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த தொழில் கூட்டமைப்பினரின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15,140 மெகாவாட் அனல் மின்சாரம், 5,000 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் என மொத்த மின் உற்பத்தித்திறன் 23,140 மெகாவாட் அளவுக்கு உயரும்’ என பந்தக்கால் போட்டார். ‘தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம்’ என்றார். எதுவும் நடக்கவில்லை.

‘2013-14ம் ஆண்டில் வெளி மார்க்கெட்டில் மின்சாரம் வாங்க செலவழிக்கப்பட்ட தொகை 30,529 கோடி ரூபாய். இரண்டு ஆண்டுகள் இப்படி வெளிச்சந்தையில் வாங்கும் தொகையை மின் திட்டங்களில் முதலீடு செய்திருந்தாலே 8,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கும்’ என்கிறார்கள் எதிர்க் கட்சியினர். இப்போது கிடைத்திருப்பதோ, கடன் சுமை மட்டும்தான். தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

‘தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழலுக்குத்தான் வழிவகுக்கும்’ என எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட்டும் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை அரசு. ‘அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு புதிய மின் திட்டம்கூட உருவாக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள திட்டங்கள்கூட தாமதப்படுத்தப்படுகின்றன’ எனக் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. டெண்டர் கேட்பதில் தாமதம், அதைத் திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், டெண்டர் மீது முடிவெடுப்பதில் தாமதம் என அனைத்துக் கட்டங்களிலும் மெத்தனம்.

உடன்குடி மின்திட்டம் நிறைவேற்றுவதில் நடந்த குளறுபடிகள் ஊர் அறிந்தவை. 2007-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடந்திருந்தால் 2012-ம் ஆண்டில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கும். ஆனால் எட்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, தொடங்கிய புள்ளிக்கே வந்து நிற்கிறது. இதற்காக மக்களின் வரிப்பணம் 80 கோடி ரூபாய் வீணானதுதான் மிச்சம்.

கேபினெட் கலைப்புகள்!

இந்தியாவிலேயே முன்னாள் அமைச்சர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். அதன் முழுப் பெருமிதமும் ஜெயலலிதாவையே சேரும். நான்கரை ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ‘முன்னாள்’கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24 முறை அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கிறது. நிர்வாக வசதிக்காக அமைச்சர்களை முதலமைச்சர் மாற்றலாம். அது அவரது அதிகாரம். ஆனால், அந்த அதிகாரத்தை சகட்டுமேனிக்குப் பயன்படுத்துகிறார் ஜெயலலிதா. அமைச்சரவையைப் பந்தாடுவது ஜெயலலிதாவின் விளையாட்டுக்களில் ஒன்று.  2011-ம் ஆண்டில் ஜெயலலிதாவோடு 34 பேர் பதவி ஏற்றனர். அவர்களில் 11 பேர் மட்டுமே இதுவரை முழுமையாக அமைச்சர் பதவியில் நீடிக்கின்றனர். ஊழல், நிர்வாகத் திறமையின்மை ஆகிய காரணங்களால் அவர்கள் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்களில் சிலருக்கு மீண்டும் பதவி கொடுப்பதற்கு என்ன பெயர்? ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, பி.வி.ரமணா, ஆனந்தன் என நீக்கப்பட்டு, மீண்டும் அமைச்சர் ஆனவர்கள் பலர். பள்ளி கல்வித் துறைக்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சிவபதி, வைகைச் செல்வன், பழனியப்பன், கே.சி.வீரமணி என ஆறு பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். பெண் புகாரில் சிக்கி பதவி இழந்த ஆனந்தன், மூன்றே மாதங்களில் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கேபினெட்டை வைத்து இப்படி பல்லாங்குழி ஆடுவது இல்லை.

ஆலோசகர்களா… அதிகார மையங்களா?

முக்கியப் பதவியில் இருப்பவர்களை டம்மியாக்கிவிட்டு ‘ஆலோசகர்கள்’ என்ற பெயரில் இன்னோர் அதிகார மையத்தை உருவாக்கினார். தலைமைச் செயலாளர், காவல் துறை டி.ஜி.பி என உயர் பதவிகளுக்கும் ‘ஆலோசகர்கள்’ நியமிக்கப்பட்டனர். தலைமைச் செயலாளராக இருந்த தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெற்ற அடுத்த நாளே ‘ஆலோசகர்’ என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். அவருக்குப் பிறகு தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற ஷீலா பாலகிருஷ்ணனும் ஓய்வுக்குப் பிறகு ஆலோசகர் ஆக்கப்பட்டார். காவல் துறை தலைமை இயக்குநராகப் பணி நீட்டிப்பில் இருந்து ஓய்வுபெற்ற ராமானுஜம், அரசின் ஆலோசகராக அமர்த்தப் பட்டார். வெங்கடரமணன், ஷீலா ப்ரியா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகும் முதலமைச்சரின் செயலாளர்கள் ஆக்கப்பட்டனர்.

இந்த ஆலோசகர்கள் பதவியும் பதவி நீட்டிப்புகளும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை டம்மி ஆக்கியதோடு, சீனியாரிட்டியைக் குலைத்து பதவி உயர்வுகளையும் தடுத்து நிறுத்தியது. தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்குத் திறமை இல்லை என்பதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்குப் பதவி கொடுத்து அனைத்து அரசு சலுகைகளையும் அதிகாரத்தையும் தொடர்ந்து அனுபவிக்க வகைசெய்து கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

ஏட்டிக்குப் போட்டி!

சென்னைத் துறைமுகத்தில் இருந்து, மதுரவாயல் வரையில் பறக்கும் சாலைத் திட்டம் கடந்த தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. 30 சதவிகிதப் பணிகள் முடிந்திருந்த நிலையில், ‘கூவம் ஆற்றில் நீர் தடைபடும்’ எனச் சொல்லி திட்டத்தை நிறுத்தினார் ஜெயலலிதா. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சென்னையின் புறவழிச் சாலையில் இருந்து துறைமுகத்துக்கு எளிதாக சரக்குகளைக் கொண்டுபோயிருக்க முடியும். கார் தொழிற்சாலைகளில் இருந்து துறைமுகத்துக்கு கார்களை அனுப்புவதில் பிரச்னை தீர்ந்திருக்கும். இப்படி முதலீட்டுக்கான எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதுதான் கொடுமை.

ஜெயலலிதாவின் ஏட்டிக்குப் போட்டி அரசியலின் இன்னொரு முகம், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது. கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் முறைகேடு எனச் சொல்லி நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார் ஜெயலலிதா. நான்கரை ஆண்டுகள் முடியப்போகிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. ரகுபதி கமிஷனுக்காக 1.53 கோடி ரூபாய் செலவானதுதான் மிச்சம். ‘கருணாநிதி கட்டிய அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போகிறேன்’ என ஜெயலலிதா சொன்னதும் நீதிமன்றம் குட்டு வைத்தது. அதனால் நூலகம் காப்பாற்றப்பட்டபோதும், அந்த நூலகத்தை முடக்குவதுபோல புதிய புத்தகங்கள் வாங்காமலும், அடிப்படை வசதிகளைச் செய்யாமலும் அரங்கத்தைப் பூட்டிவைத்தும் பழிதீர்த்தார் ஜெயலலிதா.

காவல் துறையா… ஏவல் துறையா?

காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா, அதைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்பதற்கு சந்திசிரிக்கும் சட்டம் – ஒழுங்கே சாட்சி. ‘பார்வையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்’ எனப் போராடிய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை காக்கிகள் நடத்திய விதம் மனசாட்சியுள்ள அத்தனை பேரையும் முகம் சுளிக்கவைத்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியான யுவராஜ், போலீஸுக்கு தண்ணிகாட்டியதை மறக்க முடியுமா? இந்திய வரலாற்றிலேயே தேதியும் இடமும் குறித்து போலீஸில் சரண்டர் ஆனது யுவராஜ் மட்டும்தான்.

‘ஸ்காட்லாந்து யார்டு’ என மார்தட்டிக்கொண்டிருந்த தமிழ்நாடு காவல் துறை ‘டாஸ்மாக் கார்டாக’ மாறி ஒயின் ஷாப்களை காவல் காத்தது காக்கிகள் வரலாற்றில் கரும்புள்ளி. முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து விசாரித்து ஒரு துரும்பையும் கண்டுபிடிக்கவில்லை. சி.பி.ஐ விசாரணை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் கால அவகாசம் கேட்பதற்குத்தான் காக்கிகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

‘உ.பி., மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக அளவில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். சிவகங்கையில் ஒரு சிறுமி மீது காவல் துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை மறக்க முடியுமா? தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் இன்னொரு முகம் கௌரவக் கொலைகள். சிவகங்கை, உசிலம்பட்டி, சாத்தூர், சீவலப்பேரி… என வரிசையாக கௌரவக் கொலைகள் அரங்கேறின. இந்தக் குற்றங்களைத் தடுப்பதைவிட மறைப்பதில்தான் அதிக அக்கறை காட்டியது காவல் துறை.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்தது. அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அரசுப் பேருந்தை காஞ்சிபுரத்தில் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க-வினர், தீயிட்டு எரித்தனர். விளாத்திகுளத்திலும் விருதுநகர் காரியாப்பட்டியிலும் பஸ்கள் எரிக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களும் அலுவலகங்களும் தப்பவில்லை. இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்தது போலீஸ். ‘மரக்காணம் வன்முறையில் சேதமான சொத்துக்களுக்கு பா.ம.க 100 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும்’ எனக் கூறி, அதை வசூலித்துத் தருவதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் தனி அமைப்பை ஜெயலலிதா ஏற்படுத்தினார். ஆனால், அ.தி.மு.க நடத்திய வன்முறைகளுக்கு எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ‘அ.தி.மு.க-வின் நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் 9,000 கொலைகளும் 88,500 கொள்ளைகளும் நடந்திருக்கின்றன’ என்கிறார் ராமதாஸ். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் குற்றங்கள் மற்றும் பதிவுசெய்யப்படும் வழக்கு விவரங்களை காவல் துறை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அந்தத் தகவல்கள் வெளியாவதை நிறுத்திவிட்டார்கள்.

தமிழ்நாடு போலீஸ் சம்பாதித்துவைத்திருக்கும் இன்னொரு பெயர் ‘வேடிக்கை போலீஸ்’. சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஆரம்பித்த இந்த வேடிக்கை, இப்போது வரை தொடர்கிறது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயலலிதாவை விமர்சித்தபோது தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க-வினர் இளங்கோவன் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர். அதற்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ், அ.தி.மு.க-வினர் சத்தியமூர்த்தி பவனை ஷிஃப்ட் போட்டு அடித்து நொறுக்கியபோது, கைகட்டி வேடிக்கை பார்த்தது. வேறு எதையும் உருப்படியாகச் செய்யவே இல்லையா? ஏன் இல்லை… சேலம் மேற்குச் சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கணேசன், காலில் அடிபட்டதாகக் கூறி10 நாட்கள் லீவு போட்டுவிட்டு, ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் கரைவேட்டி கட்டிக்கொண்டு களத்தில் நின்றார். அவர் கரை வேட்டி கட்டி செய்த வேலையை மற்றவர்கள் காக்கியை அணிந்துகொண்டு செய்கிறார்கள், அவ்வளவுதான்!

ஒளிரும் டாஸ்மாக்… மிளிரும் மிடாஸ்!

படிக்கவைக்கவேண்டிய அரசு, குடிக்கவைக்கும் அவலத்தைக் கண்டித்து போராடிய சசிபெருமாள் செல்போன் கோபுரத்தில் ஏறி, தன் உயிரையே இழக்க நேர்ந்தது. ‘மூடு… டாஸ்மாக்கை மூடு…’, ‘ஊருக்கு ஊரு சாராயம், தள்ளாடுது தமிழகம்…’ என பாடல்கள் பாடிய கோவன், தேசத் துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

‘பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலத்துக்கு ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராயப் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கொள்கை’ எனச் சொல்லி டாஸ்மாக் கடைபரப்பி மக்களின் சமூகப் பொருளாதார நலனை(!) மேம்படுத்தும் ஆட்சியை இந்தியாவில் வேறு எங்குமே பார்க்க முடியாது. ‘மதுவை விற்று மக்களைக் கொல்லும் அதிகாரம் சமூக விரோதிகளுக்கு இல்லை. எங்களுக்கு மட்டுமே உண்டு’ என்பதை உரக்கச் சொன்னது ஜெயலலிதாவின் ஆட்சிதான்.

சரக்கு விற்றே ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ‘கல்லா’ கட்டும் அளவுக்கு கரன்சி இங்கே புரள்கிறது. ‘சமூக விரோதிகளிடம் பணம் குவிந்துவிடக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு மிடாஸும் எலைட்டும் எஸ்.என்.ஜெ-வும்தான் மஞ்சள் குளிக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் நான்கு புதிய மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. முந்தைய தி.மு.க ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் டாஸ்மாக் வருவாய் உயர்ந்தது. ஜெயலலிதா ஆட்சியின் கடின உழைப்பால், ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உயர்ந்துகொண்டிருக்கிறது.

மொத்தம் 19 நிறுவனங்கள் டாஸ்மாக்குக்கு சரக்கு சப்ளை செய்கின்றன. டாஸ்மாக் கொள்முதலில் மிடாஸுக்குத்தான் முதல் இடம். இது யாருடைய நிறுவனம் என்பது ஊரறிந்த செய்தி. மது வருவாய் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, போலி மதுபானம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க 10581 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகளைச் சொல்வதற்கு எந்த ஓர் இலவச டோல்ஃப்ரீ நம்பரையும் காணோம்.

‘அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் 2011-ம் ஆண்டு முதல் கள்ளச்சாராய சாவுகளே இல்லை’ எனப் பெருமைப்பட்டுக்கொள்கிறது அரசு. சாலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள், குடும்பத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுதல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு… இவற்றை எந்தக் கணக்கில் சேர்ப்பது? உங்களின் டாஸ்மாக் சரக்கை அருந்திவிட்டுதானே திருவள்ளூர் சோழவரம் அம்பேத்கர் நகர், கிருஷ்ணகிரி தொட்டமஞ்சி ஊராட்சி தொடகரை கிராமம்… என சிறுமிகள் சீரழிக்கப்பட்டனர்? டாஸ்மாக் மதுவால்தானே கிருஷ்ணகிரி கல்லூரி மாணவி கூட்டாக வன்புணர்ச்சி செய்யப்பட்டார்?

முறைகேடுகள், ஊழல் புகார்கள்!

முட்டையில் தொடங்கி தியேட்டர் வரை முறைகேடு புகார்கள் வகைதொகை இல்லாமல் அணிவகுக்கின்றன. ‘டாப் 10 ஊழல் பெருச்சாளிகள்’ என பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள் சினிமா போல டிரெய்லர்  வெளியிடுகிறார்கள். ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கரன்சி வெறிக்கு உயிரையே விலையாகக் கொடுத்தார் முத்துக்குமாரசாமி. டிரைவர் வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டதில் பணம் வாங்கித் தரச் சொல்லி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் அவரது ஆட்களும் காட்டிய அடாவடியில்தான் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக பலரும் பேசினார்கள். அடிமட்டத்தில் அல்ல, அமைச்சரவைக்குள்ளேயே புகார்கள் புரையோடிப்போனபோதும் ஜெயலலிதா பக்கத்து மாநிலத்தில் நடந்த விவகாரம்போல கண்டும்காணாமலும் இருந்தார். எதிர்க்கட்சிகளும் மீடியாவும் விவகாரத்தை வெளிச்சம் ஆக்கியபோதுதான் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நீக்கினார்.

முட்டையில் பூஜ்ஜியம்!

தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவாக 68 லட்சம் பேர் பயன்பெறும் பெரிய திட்டமான சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவதில் ஏகப்பட்ட கோல்மால்கள். வாரத்துக்கு மூன்றரைக் கோடி முட்டைகளை கொள்முதல் செய்கிறது அரசு. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக டெண்டர்கள் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட வரையில் பிரச்னை இல்லை. திடீரென்று இந்தக் கொள்முதல் முறை மாற்றப்பட்டது. தமிழ்நாடு முழுக்க ஒட்டு மொத்தமாக டெண்டர் விடும் முறையைக் கொண்டுவந்தனர். ‘ஏழு வருடங்கள் முட்டை அல்லது இதர உணவுப்பொருள் வழங்குவதில் அனுபவம் இருக்கவேண்டும். அரசிடம் 90 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும்’ என விதிமுறைகள் மாற்றப்பட்டன. ‘இவை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு’ என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பினாலும் அரசுத் தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.

சில்லறை விற்பனையில் குறைந்த விலைக்குக்  கிடைக்கும் முட்டைகளை, அதைவிட அதிக விலை கொடுத்து வாங்கும் கொடுமையும் நடந்தது. ‘ ‘கிறிஸ்டி ஃபிரைடுகிராம் இண்டஸ்ட்ரி’ என்ற நிறுவனம் கர்நாடகத்தில் குழந்தைகள், கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று தரமற்ற, பூச்சிகள் நெளியும் உணவுப்பொருளை வழங்கியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனம். அந்த நிறுவனம்தான் தமிழக அரசுக்கு முட்டை சப்ளை செய்கிறது’ என விலாவாரியாக எடுத்துவைத்தும் ஜெயலலிதா அசரவில்லை.

ஆவின் கபளீகரம்!

ஆவின் நிர்வாகத்தில் நடந்த மிகப் பெரிய முறைகேடு, பால் கலப்பட விவகாரம். தென் சென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன்தான் இந்த முறைகேட்டின் சூத்திரதாரி. ஆவின் பாலை டேங்கர் லாரிகளில் கொண்டுவரும்போது, வழியில் நிறுத்தி பாலைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்யப்பட்டுவந்தது. இப்படிப் பல ஆயிரம் லிட்டர் பால் தினம்தோறும் கொள்ளைபோனது. அதிக அளவில் தண்ணீர் கலந்ததை மறைக்க பல்வேறு ரசாயனப் பொருட்களைக் கலந்து, தரமற்றப் பாலை பொது மக்களுக்கு விநியோகித்தார்கள்.

ஆவின் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்த வைத்தியநாதன், டேங்கர் லாரி கான்ட்ராக்ட் எடுத்து  பல வாகனங்களுக்கு அதிபராகி பெரும் செல்வந்தராக மாறினார். விவகாரம் வெடித்து வேறு வழி இல்லாமல் வைத்தியநாதனை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார் ஜெயலலிதா. ‘ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்படாவிட்டால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியிருக்கும்’ என சென்னை உயர் நீதிமன்றமே எச்சரிக்கும் அளவுக்குப்போனது நிலைமை.

கோகோ கோலா கோல்மால்!

‘எங்கோ ஓர் ஆலையின் சங்கு ஒலிக்கும்போது ஒரு கிராமத்தின் அழிவு ஆரம்பமாகிறது’ என்பார்கள். ‘ஓர் ஆலை உருவாகிறது என்றால், பலருடைய பாக்கெட் நிரம்பப்போகிறது’ எனப் புரியவைத்துவிட்டது கோகோ கோலா விவகாரம். அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் அடாவடி அத்துமீறலுக்கு நேரடி சாட்சி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை கோகோ கோலா ஆலை விவகாரம். சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா ஆலை அமைக்க, பல சலுகைகளை வழங்கி ஒப்பந்தம் போட்டது அரசு. கடையடைப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம்… என ஆலைக்கு எதிராக பெரிய கொந்தளிப்புகள் நடந்தன. ‘கோகோ கோலா நிறுவனத்துக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை’ என சட்டமன்றத்தில் சொன்னார் வெங்கடாசலம். ஆதாரத்தை

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அள்ளிப்போட்டதும் அமைச்சரின் பொய் அம்பலம் ஏறியது. ‘இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சரா… இல்லை கோகோ கோலா நிறுவனத்துக்கு முகவரா?’ என போர்க்கொடி தூக்கினார் இளங்கோவன். வேறு வழி இல்லாமல் கோகோ கோலா தொழிற்சாலைக்குத் தடை விதித்தது தமிழ்நாடு அரசு.

பகாசுர கிரானைட் கொள்ளை!

16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளையைக் கண்டுபிடித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பினார் மதுரை கலெக்டராக இருந்த சகாயம். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக சகாயத்தைப் பந்தாடினார் ஜெயலலிதா. சகாயம் அறிக்கை மீடியாவில் வெளியானபோதுதான் கிரானைட் கொள்ளையின் முகம் ஊருக்குத் தெரிந்தது. கிரானைட் முறைகேட்டை விசாரிக்க சகாயத்தை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம். ஆனால் ஜெயலலிதா அரசு, நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தவில்லை. அரசை எச்சரித்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பிறகுதான், விசாரணைக்கு ஒப்புக்கொண்டது அரசு. ஒப்புக்கொண்டார்களே தவிர, இப்போது வரை ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் ‘எலும்புக்கூடுகளைக் களவாடிவிடுவார்கள்’ என தமிழ்நாடு போலீஸ் மீது நம்பிக்கை இழந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் சுடுகாட்டில் படுத்துக் கிடந்தார்.

கிரானைட் கொள்ளை யால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. மோசடிக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே குறியாக இருக்கிறது அரசு. கிரானைட் விவகாரத்தில் அரசு காட்டும் சண்டித்தனம் சந்தேக அதிர்வலைகளை உண்டாக்குகிறது.

பருப்பு கொள்முதல் ஊழல்

பருப்பு கொள்முதல் முறைகேடு, உணவுத் துறையில் நடக்கும் ஊழலுக்கு ஒரு சாம்பிள். ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட பருப்பில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. ‘வெளிச்சந்தையில் குறைந்த விலையில் பருப்பு வகைகள் கிடைக்கும் நிலையில், உளுத்தம் பருப்பும் துவரம் பருப்பும் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டால், அரசுக்கு  730 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டுக்கான பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்வதால், சந்தையில் பருப்பு விலை குறையும்போது அரசுக்குக் கூடுதல் இழப்பு ஏற்படும். பருப்பு கொள்முதலில் மட்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசுக்கு 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். ஏதோ ஒரு நன்றிக் கடனுக்காக குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் ஆர்டர் வழங்கப்படுவது ஏன்?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பினார் டாக்டர் ராமதாஸ்.

தாது மணல் கொள்ளை!

தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் அள்ளுவதற்காக வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக மணல் வெட்டி எடுக்கப்பட்டு, கடத்தப்படுவதாக புகார் எழ… ‘சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்’ என அப்போதைய தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், அரசுக்குப் பரிந்துரை செய்தார். இதனால் தாது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த அப்போதைய வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ‘அந்த ஆய்வு அறிக்கையை ஏன் இதுவரை வெளியிடவில்லை?’ என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியும் கண்டுகொள்ளப்படவில்லை. 71 தனியார் குவாரிகளிலும் தாது மணல் வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை நீடிக்கும் நிலையில் வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ் வேர்ல்ட் கார்னெட் ஆகிய இரு நிறுவனங்களுக்குச் சொந்தமான குவாரிகளில் மட்டும் தாது மணல் வெட்டி எடுக்க நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டிருக்கிறது.

ரேஷன் அரிசி கடத்தல்

‘தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது’ என அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை. 2011-12ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.32 லட்சம் டன் அரிசியில் 3.76 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டதாகச் சொன்னது அந்த அறிக்கை. இதன் மதிப்பு 610 கோடி ரூபாய்.

கர்நாடகாவுக்காகக் கள்ள மௌனம்!

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு… என தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னைகளில் துணிவான சட்டப் போராட்டம் நடத்துவதில் ஜெயலலிதா முன் நின்றார். காவிரியின் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவைத்தார். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என சுற்றியிருக்கும் மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிக்கும்போது எல்லாம் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் அனல் பறக்கும். இவை எல்லாம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான 2014-ம் ஆண்டு செப்டம்பர் வரையில்தான். நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு, ஜெயலலிதாவின் குணம் மாறிப்போனது.

கர்நாடகா மேக்கேதாட்டூவில் அணை கட்டும் விவகாரம் பற்றி எரிந்தபோது, ஜெயலலிதாவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. விவசாயிகள் ஒன்று திரண்டு பந்த் நடத்தியபோது அதற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கவில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் கர்நாடகாவைக் கண்டிக்கும் வாசகங்கள் இல்லை. இலங்கையைக் கண்டித்து தீர்மானங்கள் போட முடிந்தவர்களால் கர்நாடகாவைக் கண்டிக்க முடியாமல்போனதற்குக் காரணம், கர்நாடகாவில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கு அல்லாமல் வேறு என்ன?

பரணில் தூங்கும் விருதுகள்!

சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்… என தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த விருதுகளை 2009-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரையில் ஆறு ஆண்டுகளாக வழங்காமல் வைத்திருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருது, திரைப்படங்களுக்கு அரசு மானியம், சின்னத்திரை விருதுகளும்கூட நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

சினிமா விருதுகளுடன் வழங்கப்படும் அறிஞர் அண்ணா, கலைவாணர், ராஜா சாண்டோ, எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன், சிவாஜி கணேசன், தியாகராஜ பாகவதர் பெயர்களிலான விருதுகளையும் பரணில் கட்டிவைத்துவிட்டார்கள்.

விரயமாகும் மக்கள் பணம்!

விளம்பரத்தால் திரைப்படங்களை ஓட்டலாம்… அரசாங்கத்தை ஓட்ட முடியுமா? முடியும் என்பதற்கு ஜெயலலிதா ஆட்சிதான் முன்னுதாரணம். ‘நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் சாதனை விளம்பரங்களுக்கு கோடிகளில் கரன்சிகள் கொட்டப்பட்டன. முதல் ஆண்டு சாதனைக்கு 29 கோடி ரூபாய் தொடங்கி, இப்போது நான்கு ஆண்டு சாதனைக்கு 20 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டிருக்கிறது.

கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதால் 76.04 கோடி ரூபாய் கூடுதல் செலவு. இப்படி மாற்றப்பட்ட மருத்துவமனையை நேரில் போய் திறக்காமல் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்தான் ஜெயலலிதா திறந்துவைத்தார். இந்தத் திறப்பு விழா விளம்பரச் செலவு மட்டும் 1.74 கோடி ரூபாய்!

100 நாள் சாதனை மலர், ஓராண்டு சாதனை, ஈராண்டு சாதனை என ஆண்டுக்கு ஒரு மலர், ‘அம்மாவின் எழுச்சிமிகு உரைகள்’, ‘அம்மாவின் அமுத மொழிகள்’, ‘அம்மாவின் முத்தான கதைகள்’ போன்ற தலைப்புகளில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் புகழ் பாடின. அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பில் வெளியிடப்படவேண்டிய இந்தப் புத்தகங்களை எல்லாம் அரசு சார்பில் வெளியிட்டு மக்கள் பணத்தை வீணடித்தார்.

மீடியா தொடர்பு!

2011-ம் ஆண்டு தேர்தலில் வென்ற குஷியில் இருந்த ஜெயலலிதா, பத்திரிகையாளர்களிடம், ‘நமக்குள் ஓர் ஒப்பந்தம் வைத்துக்கொள்வோம். போகும்போது வரும்போது எல்லாம் என்னிடம் பேட்டி கேட்காதீர்கள். வாரத்துக்கு ஒரு முறை அதாவது செவ்வாய்க்கிழமை தோறும் உங்களைச் சந்திக்கிறேன்’ எனச் சொன்னார். சொன்னதுபோல அடுத்த செய்வாய்க்கிழமை சந்தித்தார். அதன் பிறகு மீடியாவை டீலில் விட்டார். இந்த நான்கு ஆண்டு காலத்தில் நடந்த அதிகாரபூர்வ பிரஸ்மீட்களின் எண்ணிக்கை ஐந்து மட்டும்தான். ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னைக்காக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு, டெல்லியில் நடந்த பிரஸ்மீட்கள், எம்.பி தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோது ஒரு சந்திப்பு… அவ்வளவுதான். திட்டமிடப்படாத மீடியா சந்திப்புகளும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றன. மீடியாவோடு தொடர்பு இல்லாமல் ஒரு முதலமைச்சர் இந்தியாவில் இருக்க முடியாது. அந்தச் சாதனையையும் படைத்துவிட்டார் ஜெயலலிதா.

விஷன்… இல்லை மிஷன்!

‘தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப்போகிறேன்’ – ஜெயலலிதா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள் இவை. அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்போவதாகச் சொல்லி ‘தொலைநோக்குத் திட்டம் – 2023’-ஐ (விஷன்-2023) 2012-ம் ஆண்டில் வெளியிட்டார். இரண்டு வருடங்கள் கடந்து 2014-ம் ஆண்டில் அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். உடனே அமைச்சர்கள் கனவே நனவாகிவிட்டதுபோல வார்த்தை மாலைகளைக் கட்டித் தொங்கவிட்டார்கள். ஆனால், 15 லட்சம் கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகள், செங்கல்பட்டு – தூத்துக்குடி, தூத்துக்குடி –  கோவை, கோவை – செங்கல்பட்டு இடையே 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முக்கோண ஆறு வழி மற்றும் எட்டு வழிச் சாலைகள், 25 ஆயிரம் கோடி ரூபாயில் விமான நிலைய விரிவாக்கத் திட்டம், 1,60,985 கோடி ரூபாயில் தொழில் துறைத் திட்டங்கள், 25,000 கோடி ரூபாயில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகள்… என, காட்டப்பட்ட கலர் மத்தாப்புகள் எப்போது எரியும் என்பது அம்மாவுக்குத்தான் வெளிச்சம்.

‘மாணவன் ஒருவன் தேர்வு எழுதிக்கொண்டிருந்தான். கேள்வித்தாளில் ‘தென்னை மரத்தைப் பற்றி 30 வரிகளில் கட்டுரை ஒன்று எழுதுக!’ என இருந்தது. அந்த மாணவனோ அரைகுறைப் பேர்வழி. ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதும் இல்லை; நன்றாகப் படிப்பதும் இல்லை. தென்னை மரத்தைப் பற்றி, அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பசுவைப் பற்றி அரைகுறையாகப் படித்துவைத்திருந்தான். ஆகவே அவன் எழுதினான்… ‘பசு இருக்கிறதே பசு, அதற்கு நான்கு கால்கள் உண்டு, இரண்டு கொம்புகள் உண்டு, ஒரு வால் உண்டு. அது புல்லைத் தின்னும்…’ இப்படியே 29 வரிகள் பசுவைப் பற்றி எழுதிவிட்டு கடைசியாக ‘இந்தப் பசுவை, தென்னை மரத்தில் கட்டுவார்கள்’ என எழுதினான். தலைப்பு ‘தென்னை மரம்’, எழுதியது பசுவைப் பற்றி! எப்படி இருக்கிறது கதை?’ ஒருமுறை ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதைதான் இதுவும். ஜெயலலிதா சொன்னது ஒன்று, செய்தது வேறு… வேறு என்ன சொல்ல! ஆனால், அவர் நம்மிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறார் மிரட்டலாக… ‘செய்வீர்களா… நீங்கள் செய்வீர்களா?’

ஓட்டு போட்டதைப் பற்றி சொல்கிறாரோ?


சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து நடந்தபோது, ‘அரசு அனுமதி கொடுத்ததில் எந்தத் தவறும் இல்லை. தனியார் நிறுவனம், விதிகளை மீறி கட்டடம் கட்டியிருக்கிறது’ எனச் சொன்னார் ஜெயலலிதா. விசாரணை கமிஷனும் இதைத்தான் வழிமொழிந்தது. ‘ஜெயலலிதாவிடம் பூங்கொத்து கொடுக்கவேண்டும் என்றால், கூடை வடிவப் பூங்கொத்துதான் தர வேண்டும்; இரண்டு அடி தள்ளி நின்று நீட்ட வேண்டும்; முதலமைச்சர் தொட்டுத் தந்து, உதவியாளர் வந்து வாங்கும் வரையில் அந்தப் பூங்கொத்தைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். போட்டோவுக்கு இந்த பொசிஷனில் இருந்துதான் போஸ் தர வேண்டும்…’ என்றெல்லாம் பூங்கொத்துத் தருபவர்களுக்கு விதிகள் போடப்படுகின்றன. ‘முதலமைச்சருக்கு அளிக்கப்படும் பூங்கொத்தில் பிசிறுகள் இருக்கிறதா… ஸ்டாப்ளர் பின் எதுவும் உள்ளதா… பூக்களில் முட்கள் இருக்கின்றனவா?’ என எல்லாவற்றையும் பரிசோதிப்பார்கள். முதலமைச்சருக்கு வழங்கப்படும் பூங்கொத்துக்கு இத்தனை ரூல்ஸ் போடுபவர்கள், விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டப்படும்போது எங்கே சென்றிருந்தனர்? பூங்கொத்தைவிட மனித உயிர்கள் மலிவாகிவிட்டனவா?

நன்றி ஆனந்த விகடன், சவுக்கு 

முகம்மதின் அல்லா யார்?

allah-muhammad-zeb

 இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 58

அல்லா எனும் அரபுச் சொல்லின் பொருள் என்ன? முகம்மது தன் கொள்கையை பரப்புரை செய்வதற்கு முன் அந்தப் பகுதி மக்களின் கருத்தியலில் அல்லா இருந்ததா? முகம்மதுவுக்கு முன் இருந்த அல்லாவுக்கும், தற்போது வழங்கப்படும் அல்லாவுக்கும் இடையில் வித்தியாசம் உண்டா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முழுமையாக புரிந்து கொண்டால் தான் இஸ்லாமியர்கள் கூறும் அல்லாவை புரிந்து கொள்ள முடியும்.

குரானில் பிரபலமான ஒரு முத்திரை வாக்கியம் உண்டு, அது “அவர்கள் அறிந்து கொண்டே மாறு செய்கிறார்களா?” என்பது. இந்த வசனம் குரானில் பல இடங்களில் வேறுபட்ட சொற்களில் திரும்பத் திரும்ப வருகிறது. அன்றைய மக்காவாசிகள் அல்லாவின் புகழையும் வல்லமையையும், அவன் அளிக்கும் தண்டனைகளையும் மிக நன்றாக அறிந்து கொண்டே அல்லாவை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அது கூறும் பொருள். இது முகம்மது பரப்புரை செய்வதற்கு முன்பிருந்த அல்லாவுக்கும், முகம்மது கூறிய அல்லாவுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதான தொனியில் வருகிறது. இதை விரிவாக குரானின் 29வது அத்தியாயமான ‘சூரத்துல் அன்கபூத்’ என்பதில் காணலாம். எடுத்துக்காட்டாக,

மேலும், நீர் இவர்களிடத்தில்  வானங்களையும் பூமியையும் படைத்து, சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியிருப்பவன் யார் என்று கேட்டால் அல்லாஹ் என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் எங்கே திருப்பப்படுகிறார்கள்? குரான் 29:61

ஆனால் இது மெய்யா? இந்த வசனத்தின் படி, முகம்மது செய்த பரப்புரையை ஏற்காதவர்களும் முகம்மது கூறிய அல்லாவை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்று குரான் கூறுவதாக பொருள்படும். தெளிவாகச் சொன்னால், ஒருவன் முஸ்லீம் என்பதற்கான அடையாளக் கடமைகளான தொழுவது, நோன்பு நோற்பது, காஅபாவை வலம் வருவது உள்ளிட்ட அனைத்தும் முகம்மதால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே நடைமுறையில் இருந்தது தான். அவைகளை முகம்மது சற்றே சீர் திருத்தியிருக்கிறார், அவ்வளவே. இன்று குரானின், ஹதீஸின் அதாவது முக்கமது பரப்புரை செய்த எந்தவித வணக்க நடைமுறைகளையும் பின்பற்றாமலேயே அல்லாவின் மீதான நம்பிக்கை என்ற ஒன்றை மட்டுமே கொண்டு முஸ்லீம்களாக அடையாளப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் அன்று இருந்தவர்களையும் முஸ்லீம்களாக கொள்ளலாம். அப்படிக் கொண்டால் தான் மேற்கண்ட வசனத்தின் பொருள் சரியாக இருக்கும். ஆனால் இதற்கு முரணாக தன் முதல் மனைவியான ஹதீஜாவைத்தான் முதல் முஸ்லீமாக அறிவிக்கிறார் முகம்மது. அப்படியானால் ஒன்று, மேற்கண்டது போன்ற குரான் வசனங்கள் தவறு என்றாகும், இரண்டு, முந்திய அல்லாவுக்கும் பிந்திய அல்லாவுக்கும் இடையே வித்தியாசம் உண்டு என்றாகும். இரண்டில் எது உண்மை?

அரபு மொழியில் அல்லா என்பதற்கு கடவுள் என்பது பொருள். தனிப்பட்ட எந்த ஒரு மதத்தையும் குறிக்காமல், பொதுவான அம்சத்தில் கடவுள் எனப் பொருள்படும் சொற்கள் உலகின் பெரும்பாலான மொழிகளில் இருக்கின்றன. [தமிழில் இல்லை. கடவுள் என்பது கடை உள் அதாவது மனதினுள் என்று பொருள் தரும் சொல். இறைவன் ஆண்டவன் என்பதெல்லாம் இது போன்ற நடைமுறை பொருள் கொண்டவையே. தெய்வம் என்பது தமிழ்ச் சொல்லில்லை] அது போல அரபு மொழியில் உள்ள சொல் தான் அல்லா என்பது. இது தனிப்பட்ட முறையில் இஸ்லாமியர்களின் கடவுளைக் குறிக்காது. குரானில் பெயர் குறிப்பிடப்படும் தெய்வங்களான லாத், மனாத், உஸ்ஸா உட்பட பல கடவுளர்களை முகம்மதுக்கு முந்திய அரேபிய மக்கள் வணங்கி வந்திருக்கிறார்கள். அனைவருக்கும் பொதுவான பெயர் அல்லா. இஸ்லாமிய அல்லாவுக்கும் கூட 99 தனிப் பெயர்கள் இருக்கின்றன. இதைத்தான் மேற்கண்ட அந்த வசனங்கள் பொதுவான கடவுள் எனும் பொருளிலான அல்லா எனும் சொல்லை இஸ்லாமிய அல்லா என்று கருத்து திரிப்பு செய்கின்றன. அப்படியானால் பொதுவான அல்லாவுக்கும், இஸ்லாமிய அல்லாவுக்கும் இடையிலான வித்தியாசம் எப்படி உருவானது? இங்கு தான் முகம்மதின் பாத்திரம் உயிரூட்டம் பெறுகிறது.

.. .. .. ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ஓதும் என்றார். அதற்கவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றார்கள்.  நபி அவர்கள் இந்நிலையைப் பின்வருமாறு விளக்கினார்கள். அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதும் என்றார். நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன் .. .. .. (இவ்வாறு மூன்று முறை நடக்கிறது) மூன்றாவது முறையும் கட்டியணைத்து விட்டுவிட்டு படைத்தவனாகிய உம்முடைய ரட்சகனின் திருப்பெயரால் ஓதும். அவனே மனிதனை அலக்கில் இருந்து படைத்தான். ஓதும் உம்முடைய ரட்சகன் கண்ணியம் மிக்கவன் என்றார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் குவைலிதின் மகள் கதீஜாவிடம் (முகம்மதின் முதல் மனைவி) நடந்த செய்தியை தெரிவித்துவிட்டு, தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகக் கூறினார்கள் .. .. .. புஹாரி 3

இது முதன் முதலில் தனக்கு வஹீ வந்ததாக தானே கூறிக் கொண்ட முகம்மது அது எப்படி இருந்தது என விவரிப்பதாக இருக்கும் ஹதீஸ். இந்த ஹதீஸை அறிவித்தவர் முகம்மதின் காதல் மனைவியான ஆய்ஷா. இது ஹீரா எனும் மலைக் குகையில் நடந்த நிகழ்ச்சி. அதற்கு முன் அந்த மலைக்குகையில் முகம்மது தனியே சென்று நாட்கணக்கில் தங்கியிருப்பது முகம்மதின் வழக்கமாக இருந்தது. இதையும் அதே ஹதீஸ் பதிவு செய்திருக்கிறது.

.. .. .. ஹீரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் அங்கே தங்கியிருந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தார்கள். அந்த நாட்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். மீண்டும் கதீஜா அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாட்களுக்குறிய உணவைக் கொண்டு செல்வார்கள் .. .. ..

வரிய நிலையிலிருந்த ஒருவர், எந்த வணிக நிறுவனத்தில் வேலை செய்தாரோ அந்த நிறுவனத்தின் முதலாளியான கதீஜாவால் விரும்பப்பட்டு மணந்ததும், அந்தப் பகுதியின் மிகப் பெரும் செல்வந்தரான இளைஞர். பல நாட்களுக்கான உணவை தம்முடன் எடுத்துக் கொண்டு தனிமையில் அதுவும் இரவிலும் கூட ஒரு மலைக் குகையில் கழிக்க வேண்டிய அவசியம் என்ன? இது ஒரு முக்கியமான கேள்வி. இந்த ஹதீஸை உருவாக்கியவர்கள் இப்படியான ஒரு கேள்வியை எதிர் கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் அதே ஹதீஸில் ஒரு சமாளிப்பு பதிலையும் வைத்திருக்கிறார்கள்.

ஆய்ஷா கூறினார். நபி அவர்களுக்கு துவக்கத்தில் இறைச் செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹீரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள் .. .. ..

ஆனால், ஹதீஸ் கூறும் இந்தத் தகவல் பொய்யானது. எவ்வாறென்றால், மெய்யாகவே முகம்மதுவுக்கு கனவுகளில் இறைச் செய்தி முதலில் வந்திருந்தது என்றால் குகையிலிருக்கும் போது வானவர் வந்து இறைச் செய்தியை கூறிய போது முகம்மது அச்சப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் அச்சப்பட்டிருக்கிறார். தனக்கு ஏதோ நேர்வதாக கருதி புலம்பியிருக்கிறார். மனைவியிடம் சென்று ஆலோசித்திருக்கிறார். கதீஜாவின் உறவினரான நவ்பல் என்பவர் தான் உனக்கு அல்லாவிடமிருந்து இறைச்செய்தி வந்திருக்கிறது என்று புரிய(!)வைக்கிறார். ஏற்கனவே கனவுகளில் கண்டு தெளிவடைந்திருக்கும் முகம்மதுக்கு பின்னர் இறைச் செய்தி வரும் போது ஏன் இந்த நிலை ஏற்படுகிறது? கனவில் இறைச் செய்தி வந்தது சரி என்றால் பின்னர் முகம்மது புலம்பியதும், நவ்பல் புரியவைத்ததும் தவறு என்றாகும். நவ்பல் புரிய வைத்தது சரி என்றால் முதலில் கனவில் இறைச் செய்தி வந்தது என்பது தவறாகும். இரண்டில் எது சரி என்று முஸ்லீம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த ஹதீஸை உருவாக்கியவர்கள் முகம்மது இயல்பாகவே தனிமையில் இருந்து சிந்திக்கும் பழக்கமுடையவர் என்பதை ஏன் மறைக்க முயல வேண்டும்?

ஏனென்றால், முகம்மதின் சிந்தனையில் தான் அந்தப் பகுதி மக்களின் பொதுவான அல்லா இஸ்லாமியர்களின் அல்லாவாக உருமாறுகிறார். முகம்மது எழுதப் படிக்கத் தெரியாதவர், முகம்மது நேர்மையாளர் என அந்த மக்களால் புகழப்பட்டிருந்தார், ஹனிபிய் எனும் ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்தும் இயக்கம் முகம்மதுவுக்கு முன்பு மக்காவில் இருந்ததை மறைப்பது, முகம்மது இயல்பாக தனிமையில் சிந்திக்கும் பழக்கமுடையவர் என்பதை மறைப்பது என்பன போன்ற இஸ்லாமியர்களால் மறைக்கப்படுபவை எல்லாம் எதிர்மறையில் முகம்மதைப் பற்றிய பிம்பங்களை ஏற்படுத்துகின்றன. வியாபாரக் குழுக்களுக்கு தலைமையேற்று சிரியா போன்ற அண்டை நாடுகளுக்கு பலமுறை பயணம் செய்து சமூக நடப்புகளை கலாச்சாரங்களை அறிந்தவராக முகம்மது இருந்திருக்கிறார். தான் விரும்பும் விசயத்தில் நல்லவற்றுக்காக பொய் சொல்வதில் தவறில்லை என கருத்துக் கொண்டவராக இருந்திருக்கிறார். தனிமையில் இருந்து சிந்திக்கும் பழக்கம் உடையவராக இருந்திருக்கிறார். முகம்மதின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் ஓரிறைக் கொள்கையான ஹனிபிய் இயக்கத்தில் இருந்திருக்கின்றனர். இவைகளையெல்லாம் நேர்மையான முறையில் பரிசீலித்துப் பார்த்தால் பெறப்படும் முடிவு என்னவாக இருக்கும்?

முகம்மது வாழ்ந்த காலத்தில் அரேபியாவும் மத்திய தரைக்கடல் பகுதிகளும் மட்டுமே உலகம் அல்ல. இந்தியா, சீனா, மங்கோலியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகள்; ரஷ்யா போன்ற ஐரோபியப் பகுதிகள்; பெரு, பிரேசில், அர்ஜண்டைனா போன்ற மயன் இன்கா மக்கள் வாழ்ந்த லத்தின் அமெரிக்க பகுதிகள்; பழங்குடிகளின் ஆஸ்திரேலியா; செவ்விந்திய மக்களின் வட அமெரிக்கப் பகுதிகள் போன்றவைகளும் இருந்திருக்கின்றன. ஆனால் இவை இருந்ததாகவோ, அம்மக்களின் கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்தோ உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது எனக் கூறப்படும் குரானிலோ ஹதீஸ்களிலோ எந்தக் கருத்தும் இடம் பெறவில்லையே ஏன்? மத்திய தரைக்கடல் பகுதி, அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்நிலை கலாச்சாரம் குறித்து மட்டுமே குரானும் ஹதீஸ்களும் பேசுவது ஏன்? சிந்திக்கும் மக்கள் இதில் என்ன முடிவுக்கு வரமுடியும்?

முகம்மது எந்தெந்தப் பகுதிகளையும் மக்களையும் பற்றி அறிந்திருந்தாரோ அவைகள் மட்டுமே இஸ்லாமிய வேதங்களில் இடம் பெற்றிருக்கின்றன. முகம்மதுவுக்கு என்னென்ன அறிதல்கள் தெளிவுகள் இருந்தனவோ அவைகள் மட்டுமே இஸ்லாமிய வேதங்களில் இடம் பெற்றிருக்கின்றன. முகம்மதின் வீட்டுக்குள் திடுமென யாரும் நுழைய வேண்டாம் என்று அற்பப் பிரச்ச்னைகளுக்கெல்லாம் வஹீ எனும் இறைச் செய்தியின் மூலம் முகம்மதுவுக்கு தீர்வை வழங்கிய அல்லா, முகம்மதின் காதல் மனைவி ஆய்ஷா பிறருடன் தொடர்பு வைத்திருந்தார் எனும் அவதூறு செய்தியில் உண்மையா பொய்யா என அறியமுடியாமல் மாதக் கணக்கில் முகம்மது வாடிய அந்த முக்கியமான அந்த பொழுதில் இறைச் செய்தி வருவது சுத்தமாக நின்று போயிருந்ததே ஏன்? இந்த குரானைத் தவிர வேறெந்த அற்புதமும் முகம்மதுவுக்கு இல்லை என குரான் கூறும் போது நிலவைப் பிளந்தது உள்ளிட்ட பல அற்புதங்களை முகம்மது செய்தது எப்படி? எந்த அல்லா இதில் முரண்பாடு இல்லை எனக் கூறுகிறாரோ அந்த குரானில் முரண்பாடுகள் இருக்கின்றன. எந்த அல்லா இதில் பிழைகள் இல்லை என்று கூறுகிறாரோ அந்த குரானில் பிழைகள் இருக்கின்றன. என்றால் முகம்மதின் அல்லா யார்?

ஐயம் ஏதுமின்றி முகம்மதுவும் முகம்மதின் அல்லாவும் ஒருவரே. அதாவது முகம்மது தன்னுடைய நோக்கத்தை அல்லது தான் வாழ்ந்த காலத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கற்பனையில் தனக்குத் தானே உருவகித்துக் கொண்டது தான் இஸ்லாமிய அல்லா. நேர்மையான மீளாய்வுக்கு ஆயத்தமாக இருக்கும் யாருக்கும் இஸ்லாமியர்கள் உட்பட இதில் ஐயம் ஏற்பட வாய்ப்பில்லை.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

57. முகம்மதின் மரணத் தருவாயில் நடந்த குழப்பங்கள்

56. முகம்மது தேன் குடித்த கதை

55. முகம்மதும் ஆய்ஷாவும்

54. முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்

53. முகம்மதின் மக்கா வாழ்வும் அவரின் புலப்பெயர்வும்

52.  தன்னுடன் தானேமுரண்பட்ட முகம்மது

51. முகம்மது நல்லவரா? கெட்டவரா?

50. முகம்மது அனுப்பிய கடிதங்கள் மதமா? ஆட்சியா?

49. முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?

48. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2

47. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

புரட்சி நாளை வரவேற்போம், சுடராய் அல்ல, சுட்டெரிக்கும் நெருப்பாய்…

நடைமுறையிலிருக்கும் முதலாளித்துவ அமைப்பு தனக்குள் இற்றுக்கொண்டிருக்கும் ஓசைகள் வெளிக்கேட்கத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. அது தன் தலை நிலமாகிய அமெரிக்காவிலேயே வங்கிகளாய், பெரு நிறுவனங்களாய் வெடித்து வீழ்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் பணம் கொட்டப்பட்டு அவை நிலைத்திருப்பதாய் காட்ட முற்பட்டாலும் படிந்துவிட்ட வெடிப்புகளின் பல்லிளிப்புகளை மறைக்க விழி பிதுங்குகிறது முதலாளியம். உள்ளே எழுந்து கிளைபரப்பி விரியும் வலியை தடுத்தாட்கொள்வதாய் நினைத்துக்கொண்டு முன்னிலும் அதிகமாய் மக்களைக் கடித்து ரத்தம் குடித்துக்கொண்டிருக்கிறது. புவியெங்கும் கறைகளாய் அதன் உமிழல்கள்.

லத்தீன் அமெரிக்க நாடுகள் அத்தனையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ அரசுகளை சீர்குலைத்து தன் பொம்மைகளை நிறுவுவதற்கு படுகொலைகளையும் இனவழிப்புகளையும் துணிந்து நடத்தியிருக்கிறது அமெரிக்கா. சிலியின் அலண்டே தொடங்கி கியூபாவின் காஸ்ட்ரோ வரை தனது நலன்களுக்கு உகந்ததாக இல்லாத எந்தத் தலைவரையும் சதிப்புரட்சி மூலம் கொலைசெய்வதிலிந்து அடுக்கடுக்காய் வாடகைக் கொலையாளிகள் மூலம் கொலை செய்ய முயற்சிப்பதுவரை அமெரிக்கா செய்யாத பாதகங்களில்லை. வெனிசூலாவின் சாவேஸை கவிழ்த்துவிட வாய்ப்புக்கிடைக்காதா என அலைவது இன்னும் நின்றுவிடவில்லை. தோல்வியுற்ற ஈக்வடார் சதிப்புரட்சியின் சூடு இன்னும் ஆறிவிடவில்லை. இவைகளெல்லாம் முழுமையாக சோசலிசத்தை செயல்படுத்தும் நாடுகளில்லை என்றாலும், சோசலிசம், கம்யூனிசம் போன்ற வார்த்தைகளை எந்தநாடும் மறந்தும் கூட உச்சரித்து விடக்கூடாது என கங்கணம் கட்டுகிறது தன்னை ஜனநாயகத்தின் காவலன் என கருதிக்கொள்ளும் அமெரிக்கா.

மத்திய தரைக்கடல் நாடுகளில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டபின் வளைகுடா நாடுகளைனைத்தும் அறிவிக்கப்படாத அமெரிக்க மாநிலங்கள் என்றே செயல்பட்டுவருகிறது அமெரிக்கா. அவைகள் மீறிவிடக்கூடாது என்பதற்காக இஸ்ரேலை ஆதரித்து உருவாக்கி வளர்த்து வருகிறது. ஈரானில் அமெரிக்கப் பொம்மையான ஷாவை நீக்கி அயதுல்லா கொமேனி வந்ததும், தன்னால் உருவாக்கப்பட்ட பாத் கட்சியின் சதாம் உசேன் மூலம் போர் தொடுத்ததும், சதாம் அடிபணிய மறுத்ததால் அபாயகரமான ஆயுதங்கள் என்று கூறி தூக்கிலிட்டதும், ஈரான் இஸ்ரேலுக்கு அணுஆயுதப் போட்டியாகி வளைகுடா நாடுகளில் தாக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதற்காக, பாகிஸ்தான் துணையுடன் ‘முஜாஹிதீன் ஹல்க்’, ‘ஜண்டுல்லாஹ்’ போன்ற இயக்கங்கள் மூலம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதும் எல்லோரும் அறிந்த ரகசியங்கள்.

ஆப்பிரிக்க நாடுகளின் கனிம வளங்கள் முதல் அனைத்தையும் மக்களை பட்டினி போட்டுக் கொன்று சுரண்டிக் கொழுக்கின்றன அமெரிக்க ஐரோப்பிய பெரு மூலதன நிறுவனங்கள். மூன்றாம் உலக நாடுகளை கடன்வலையில் சிக்கவைத்து, கடனுக்கான நிபந்தனைகளின் வாயிலாக உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளை வளைப்பதுடன் அவைகளின் உற்பத்தியை ஏற்றுமதி எனும் பெயரில் வட்டியாகக் கறந்துவிடுகின்றன. உலகின் வளங்களை கொள்ளையடித்துச் சுருட்டுவது ஒருபுறமென்றால் மறுபுறம் வளங்களையும், சுற்றுச்சூழலையும் மாசடையவைத்து சீர்கெடுப்பதும் முதலாளித்துவம் தான்.

இந்தியாவிலும் லட்சக்கணக்கான விவாசாயிகள் முதலாய், நேற்றைய நோக்கியோ அம்பிகா ஈறாய் எத்தனையெத்தனை கொலைகள், என்னென்ன கொடுமைகள். கோடிகோடியாய் முதலாளிகளுக்கு சலுகைகள் என்றாலும் உளுத்த தானியங்களைக்கூட ஏழைகளுக்கு கொடுக்கும் சாத்தியமில்லை என பிரதமரே பேசுவது, உழைப்பவனின் நரம்பை உருவி உதாரிகளுக்கு ஊஞ்சல் கட்டிப்போடும் அயோக்கியத்தனமில்லையா? இதற்கு முதலாளியத்தைத் தவிர வேறெதை நோக்கி விரல் சுட்டமுடியும்?

மக்களின் வறுமைக்கும், சுற்றுச்சூழல், இயற்கை வளங்களின் நாசத்திற்கும் ஒட்டுமொத்தக் காரணமாக இருக்கும் முதலாளித்துவத்தை மக்கள் எட்டி உதைத்திருக்க வேண்டும், ஆனால், முதலாளிய பொருளாதாரக் கொள்கைகள் முன்னேற்றமாகவும், ஏகாதிபத்திய நாடுகளை சொர்க்கமாகவும், அங்கு செல்வதை லட்சியமாகவும் கொள்ளுமளவுக்கு மக்கள் மந்தைகளாக்கப்படுகின்றனர். காரணம் உலகின் மொத்த ஊடகங்களும், கருத்துப்பரவலுக்கான கருவிகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்திருப்பதாலும் மக்களின் மனங்களை தங்களின் வசதிக்கேற்ப திருப்பியெடுக்குமான வாய்ப்பு வாய்க்கப்பெற்றிருப்பதும்தான். தாங்கள் வளர்த்துவிட்ட ஒரு சதாம் உசேன் தங்களுக்கெதிராய் திரும்ப எத்தனித்ததும் பேரளிவு ஆயுதங்கள் எனும் உலகின் மோசமான பொய்யை காரணமாகக் கூறி தூக்கிலிட்டுக் கொல்லவும், தடைகளின் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளை கொன்றொழிக்கவும் சுலபமாக முடிகிறது. இன்றுவரை ஒரு குண்டூசியைக் கூட பேரழிவு ஆயுதமாக கண்டெடுக்க முடியவில்லை என்றாலும், எந்த நாட்டாலும், எந்த அமைப்பாலும் இந்தக் கொடூரத்தை, நரவேட்டையை தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முடிந்ததில்லை. இதை கண்ணெதிரே கண்டுகொண்டிருக்கும் போதிலுமே கம்யூனிசம் மக்களை வதைத்தது, ஸ்டாலின் கோடிக்கணக்கில் கொன்றார் எனும் கடந்த காலக் கட்டுக்கதைகளை நம்ப விரும்பும் மக்கள் இருக்கிறார்கள் என்பது, முதலாளித்துவம் எந்த அளவில் மக்கள் மனங்களையும் அரித்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாய் நிற்கிறது.

இந்தக் கொடுமைகளிலிருந்தும் கொடூரங்களிலிருந்தும்; உலகைச் சீரழிப்பவர்களிடமிருந்தும், மக்களைச் சுரண்டி அவர்களை ஏழ்மையிலும் அடிமைத்தளையிலும் கட்டிவைத்திருப்பதிலிருந்தும் மக்களை விடுவிப்பது யார்? எது உலக மக்களுக்கான விடிவைத்தரும்? மதங்களா? காப்பது கிடக்கட்டும், இவைகளை சுட்டிக்காட்டி கண்டிக்கும் வீரியம் இருக்கிறதா அவைகளிடம்? செத்தபிறகு சொர்க்கமென்றும், மறுபிற‌வியில் வாழவைப்பேன் என்றும் மக்களை ஏமாற்றி இந்த சமூக அமைப்புகளைத் தக்கவைத்ததைத்தவிர மதங்கள் செய்ததென்ன? ஒன்றுமில்லை.

இந்த உலகில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்து உரிமைகளும் போராட்டத்தின் ரத்தச்சகதியிலிருந்து முளைத்து வந்தவைதான். அத்தனை உரிமைகளையும் நோகாமல் அனுபவிக்கும் நாம், நம் தோள்களில் தங்கி நகர்த்திச் செல்லவேண்டிய போராட்டக் களத்தை, சுகம் சொகுசு எனும் தனிமனித நத்தைக் கூட்டுக்குள் சுருக்கிக் கொள்வதேன்? நம் சொகுசுகளின் உறைகுளிரில் தீயைக் கிழித்துப்போட்டது ஒரு கொள்கை. இந்த உலகை வியாக்கியானம் செய்வதல்ல, அதை புரட்சிகரமாக மாற்றியமைப்பதே நம் முதல் தேவையாக இருக்கிறது என்று நம் செல்களின் தடித்தனங்களை ஊடுருவி, ஊடுருவி உரத்துச் சொன்னது அந்தக் கொள்கை. அது தான் கம்யூனிசம்.

மகிழ்ச்சி என்பது உளவியல் சார்ந்ததல்ல, அது செயல்களைச் சார்ந்தது, போராட்டத்தின் வழியே வருவது என ஒவ்வொரு மனிதனையும் உலுக்கிச் சொன்னது 1917 நவம்பர் 7. ஆம் இன்றுதான். உலகின் புரட்சிகர இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்த நாள். அந்த மகத்தான ரஷ்யப் புரட்சியின் நாள் இன்று. மக்கள் மீது சுமத்தப்படும் கொடுமைகளை, முதலாளித்துவ அநீதிகளை எதிர்த்து முறியடிக்கும் திறனை தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கும் கம்யூனிசத்தின் கீழ் அணிவகுப்போம், சுடர்களாய் அல்ல தீப்பந்தமாய்.

எழுந்து வாருங்கள் சுடர்களே,

அகல்விளக்கின் அங்கமாய்

மினுக்கிக்கொண்டிருந்தது போதும்

வெடித்துப்பேசும் நெருப்பு நாக்காய்

கொழுந்துவிட்டெரிவோம்

தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சி நாள் வாழ்த்துக்கள்

%d bloggers like this: