இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே .. பகுதி 58
அல்லா எனும் அரபுச் சொல்லின் பொருள் என்ன? முகம்மது தன் கொள்கையை பரப்புரை செய்வதற்கு முன் அந்தப் பகுதி மக்களின் கருத்தியலில் அல்லா இருந்ததா? முகம்மதுவுக்கு முன் இருந்த அல்லாவுக்கும், தற்போது வழங்கப்படும் அல்லாவுக்கும் இடையில் வித்தியாசம் உண்டா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முழுமையாக புரிந்து கொண்டால் தான் இஸ்லாமியர்கள் கூறும் அல்லாவை புரிந்து கொள்ள முடியும்.
குரானில் பிரபலமான ஒரு முத்திரை வாக்கியம் உண்டு, அது “அவர்கள் அறிந்து கொண்டே மாறு செய்கிறார்களா?” என்பது. இந்த வசனம் குரானில் பல இடங்களில் வேறுபட்ட சொற்களில் திரும்பத் திரும்ப வருகிறது. அன்றைய மக்காவாசிகள் அல்லாவின் புகழையும் வல்லமையையும், அவன் அளிக்கும் தண்டனைகளையும் மிக நன்றாக அறிந்து கொண்டே அல்லாவை மறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அது கூறும் பொருள். இது முகம்மது பரப்புரை செய்வதற்கு முன்பிருந்த அல்லாவுக்கும், முகம்மது கூறிய அல்லாவுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதான தொனியில் வருகிறது. இதை விரிவாக குரானின் 29வது அத்தியாயமான ‘சூரத்துல் அன்கபூத்’ என்பதில் காணலாம். எடுத்துக்காட்டாக,
மேலும், நீர் இவர்களிடத்தில் வானங்களையும் பூமியையும் படைத்து, சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியிருப்பவன் யார் என்று கேட்டால் அல்லாஹ் என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் எங்கே திருப்பப்படுகிறார்கள்? குரான் 29:61
ஆனால் இது மெய்யா? இந்த வசனத்தின் படி, முகம்மது செய்த பரப்புரையை ஏற்காதவர்களும் முகம்மது கூறிய அல்லாவை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்று குரான் கூறுவதாக பொருள்படும். தெளிவாகச் சொன்னால், ஒருவன் முஸ்லீம் என்பதற்கான அடையாளக் கடமைகளான தொழுவது, நோன்பு நோற்பது, காஅபாவை வலம் வருவது உள்ளிட்ட அனைத்தும் முகம்மதால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே நடைமுறையில் இருந்தது தான். அவைகளை முகம்மது சற்றே சீர் திருத்தியிருக்கிறார், அவ்வளவே. இன்று குரானின், ஹதீஸின் அதாவது முக்கமது பரப்புரை செய்த எந்தவித வணக்க நடைமுறைகளையும் பின்பற்றாமலேயே அல்லாவின் மீதான நம்பிக்கை என்ற ஒன்றை மட்டுமே கொண்டு முஸ்லீம்களாக அடையாளப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் அன்று இருந்தவர்களையும் முஸ்லீம்களாக கொள்ளலாம். அப்படிக் கொண்டால் தான் மேற்கண்ட வசனத்தின் பொருள் சரியாக இருக்கும். ஆனால் இதற்கு முரணாக தன் முதல் மனைவியான ஹதீஜாவைத்தான் முதல் முஸ்லீமாக அறிவிக்கிறார் முகம்மது. அப்படியானால் ஒன்று, மேற்கண்டது போன்ற குரான் வசனங்கள் தவறு என்றாகும், இரண்டு, முந்திய அல்லாவுக்கும் பிந்திய அல்லாவுக்கும் இடையே வித்தியாசம் உண்டு என்றாகும். இரண்டில் எது உண்மை?
அரபு மொழியில் அல்லா என்பதற்கு கடவுள் என்பது பொருள். தனிப்பட்ட எந்த ஒரு மதத்தையும் குறிக்காமல், பொதுவான அம்சத்தில் கடவுள் எனப் பொருள்படும் சொற்கள் உலகின் பெரும்பாலான மொழிகளில் இருக்கின்றன. [தமிழில் இல்லை. கடவுள் என்பது கடை உள் அதாவது மனதினுள் என்று பொருள் தரும் சொல். இறைவன் ஆண்டவன் என்பதெல்லாம் இது போன்ற நடைமுறை பொருள் கொண்டவையே. தெய்வம் என்பது தமிழ்ச் சொல்லில்லை] அது போல அரபு மொழியில் உள்ள சொல் தான் அல்லா என்பது. இது தனிப்பட்ட முறையில் இஸ்லாமியர்களின் கடவுளைக் குறிக்காது. குரானில் பெயர் குறிப்பிடப்படும் தெய்வங்களான லாத், மனாத், உஸ்ஸா உட்பட பல கடவுளர்களை முகம்மதுக்கு முந்திய அரேபிய மக்கள் வணங்கி வந்திருக்கிறார்கள். அனைவருக்கும் பொதுவான பெயர் அல்லா. இஸ்லாமிய அல்லாவுக்கும் கூட 99 தனிப் பெயர்கள் இருக்கின்றன. இதைத்தான் மேற்கண்ட அந்த வசனங்கள் பொதுவான கடவுள் எனும் பொருளிலான அல்லா எனும் சொல்லை இஸ்லாமிய அல்லா என்று கருத்து திரிப்பு செய்கின்றன. அப்படியானால் பொதுவான அல்லாவுக்கும், இஸ்லாமிய அல்லாவுக்கும் இடையிலான வித்தியாசம் எப்படி உருவானது? இங்கு தான் முகம்மதின் பாத்திரம் உயிரூட்டம் பெறுகிறது.
.. .. .. ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ஓதும் என்றார். அதற்கவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றார்கள். நபி அவர்கள் இந்நிலையைப் பின்வருமாறு விளக்கினார்கள். அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதும் என்றார். நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன் .. .. .. (இவ்வாறு மூன்று முறை நடக்கிறது) மூன்றாவது முறையும் கட்டியணைத்து விட்டுவிட்டு படைத்தவனாகிய உம்முடைய ரட்சகனின் திருப்பெயரால் ஓதும். அவனே மனிதனை அலக்கில் இருந்து படைத்தான். ஓதும் உம்முடைய ரட்சகன் கண்ணியம் மிக்கவன் என்றார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் குவைலிதின் மகள் கதீஜாவிடம் (முகம்மதின் முதல் மனைவி) நடந்த செய்தியை தெரிவித்துவிட்டு, தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகக் கூறினார்கள் .. .. .. புஹாரி 3
இது முதன் முதலில் தனக்கு வஹீ வந்ததாக தானே கூறிக் கொண்ட முகம்மது அது எப்படி இருந்தது என விவரிப்பதாக இருக்கும் ஹதீஸ். இந்த ஹதீஸை அறிவித்தவர் முகம்மதின் காதல் மனைவியான ஆய்ஷா. இது ஹீரா எனும் மலைக் குகையில் நடந்த நிகழ்ச்சி. அதற்கு முன் அந்த மலைக்குகையில் முகம்மது தனியே சென்று நாட்கணக்கில் தங்கியிருப்பது முகம்மதின் வழக்கமாக இருந்தது. இதையும் அதே ஹதீஸ் பதிவு செய்திருக்கிறது.
.. .. .. ஹீரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் அங்கே தங்கியிருந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்திருந்தார்கள். அந்த நாட்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். மீண்டும் கதீஜா அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாட்களுக்குறிய உணவைக் கொண்டு செல்வார்கள் .. .. ..
வரிய நிலையிலிருந்த ஒருவர், எந்த வணிக நிறுவனத்தில் வேலை செய்தாரோ அந்த நிறுவனத்தின் முதலாளியான கதீஜாவால் விரும்பப்பட்டு மணந்ததும், அந்தப் பகுதியின் மிகப் பெரும் செல்வந்தரான இளைஞர். பல நாட்களுக்கான உணவை தம்முடன் எடுத்துக் கொண்டு தனிமையில் அதுவும் இரவிலும் கூட ஒரு மலைக் குகையில் கழிக்க வேண்டிய அவசியம் என்ன? இது ஒரு முக்கியமான கேள்வி. இந்த ஹதீஸை உருவாக்கியவர்கள் இப்படியான ஒரு கேள்வியை எதிர் கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் அதே ஹதீஸில் ஒரு சமாளிப்பு பதிலையும் வைத்திருக்கிறார்கள்.
ஆய்ஷா கூறினார். நபி அவர்களுக்கு துவக்கத்தில் இறைச் செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹீரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள் .. .. ..
ஆனால், ஹதீஸ் கூறும் இந்தத் தகவல் பொய்யானது. எவ்வாறென்றால், மெய்யாகவே முகம்மதுவுக்கு கனவுகளில் இறைச் செய்தி முதலில் வந்திருந்தது என்றால் குகையிலிருக்கும் போது வானவர் வந்து இறைச் செய்தியை கூறிய போது முகம்மது அச்சப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் அச்சப்பட்டிருக்கிறார். தனக்கு ஏதோ நேர்வதாக கருதி புலம்பியிருக்கிறார். மனைவியிடம் சென்று ஆலோசித்திருக்கிறார். கதீஜாவின் உறவினரான நவ்பல் என்பவர் தான் உனக்கு அல்லாவிடமிருந்து இறைச்செய்தி வந்திருக்கிறது என்று புரிய(!)வைக்கிறார். ஏற்கனவே கனவுகளில் கண்டு தெளிவடைந்திருக்கும் முகம்மதுக்கு பின்னர் இறைச் செய்தி வரும் போது ஏன் இந்த நிலை ஏற்படுகிறது? கனவில் இறைச் செய்தி வந்தது சரி என்றால் பின்னர் முகம்மது புலம்பியதும், நவ்பல் புரியவைத்ததும் தவறு என்றாகும். நவ்பல் புரிய வைத்தது சரி என்றால் முதலில் கனவில் இறைச் செய்தி வந்தது என்பது தவறாகும். இரண்டில் எது சரி என்று முஸ்லீம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த ஹதீஸை உருவாக்கியவர்கள் முகம்மது இயல்பாகவே தனிமையில் இருந்து சிந்திக்கும் பழக்கமுடையவர் என்பதை ஏன் மறைக்க முயல வேண்டும்?
ஏனென்றால், முகம்மதின் சிந்தனையில் தான் அந்தப் பகுதி மக்களின் பொதுவான அல்லா இஸ்லாமியர்களின் அல்லாவாக உருமாறுகிறார். முகம்மது எழுதப் படிக்கத் தெரியாதவர், முகம்மது நேர்மையாளர் என அந்த மக்களால் புகழப்பட்டிருந்தார், ஹனிபிய் எனும் ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்தும் இயக்கம் முகம்மதுவுக்கு முன்பு மக்காவில் இருந்ததை மறைப்பது, முகம்மது இயல்பாக தனிமையில் சிந்திக்கும் பழக்கமுடையவர் என்பதை மறைப்பது என்பன போன்ற இஸ்லாமியர்களால் மறைக்கப்படுபவை எல்லாம் எதிர்மறையில் முகம்மதைப் பற்றிய பிம்பங்களை ஏற்படுத்துகின்றன. வியாபாரக் குழுக்களுக்கு தலைமையேற்று சிரியா போன்ற அண்டை நாடுகளுக்கு பலமுறை பயணம் செய்து சமூக நடப்புகளை கலாச்சாரங்களை அறிந்தவராக முகம்மது இருந்திருக்கிறார். தான் விரும்பும் விசயத்தில் நல்லவற்றுக்காக பொய் சொல்வதில் தவறில்லை என கருத்துக் கொண்டவராக இருந்திருக்கிறார். தனிமையில் இருந்து சிந்திக்கும் பழக்கம் உடையவராக இருந்திருக்கிறார். முகம்மதின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் ஓரிறைக் கொள்கையான ஹனிபிய் இயக்கத்தில் இருந்திருக்கின்றனர். இவைகளையெல்லாம் நேர்மையான முறையில் பரிசீலித்துப் பார்த்தால் பெறப்படும் முடிவு என்னவாக இருக்கும்?
முகம்மது வாழ்ந்த காலத்தில் அரேபியாவும் மத்திய தரைக்கடல் பகுதிகளும் மட்டுமே உலகம் அல்ல. இந்தியா, சீனா, மங்கோலியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகள்; ரஷ்யா போன்ற ஐரோபியப் பகுதிகள்; பெரு, பிரேசில், அர்ஜண்டைனா போன்ற மயன் இன்கா மக்கள் வாழ்ந்த லத்தின் அமெரிக்க பகுதிகள்; பழங்குடிகளின் ஆஸ்திரேலியா; செவ்விந்திய மக்களின் வட அமெரிக்கப் பகுதிகள் போன்றவைகளும் இருந்திருக்கின்றன. ஆனால் இவை இருந்ததாகவோ, அம்மக்களின் கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்தோ உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது எனக் கூறப்படும் குரானிலோ ஹதீஸ்களிலோ எந்தக் கருத்தும் இடம் பெறவில்லையே ஏன்? மத்திய தரைக்கடல் பகுதி, அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்நிலை கலாச்சாரம் குறித்து மட்டுமே குரானும் ஹதீஸ்களும் பேசுவது ஏன்? சிந்திக்கும் மக்கள் இதில் என்ன முடிவுக்கு வரமுடியும்?
முகம்மது எந்தெந்தப் பகுதிகளையும் மக்களையும் பற்றி அறிந்திருந்தாரோ அவைகள் மட்டுமே இஸ்லாமிய வேதங்களில் இடம் பெற்றிருக்கின்றன. முகம்மதுவுக்கு என்னென்ன அறிதல்கள் தெளிவுகள் இருந்தனவோ அவைகள் மட்டுமே இஸ்லாமிய வேதங்களில் இடம் பெற்றிருக்கின்றன. முகம்மதின் வீட்டுக்குள் திடுமென யாரும் நுழைய வேண்டாம் என்று அற்பப் பிரச்ச்னைகளுக்கெல்லாம் வஹீ எனும் இறைச் செய்தியின் மூலம் முகம்மதுவுக்கு தீர்வை வழங்கிய அல்லா, முகம்மதின் காதல் மனைவி ஆய்ஷா பிறருடன் தொடர்பு வைத்திருந்தார் எனும் அவதூறு செய்தியில் உண்மையா பொய்யா என அறியமுடியாமல் மாதக் கணக்கில் முகம்மது வாடிய அந்த முக்கியமான அந்த பொழுதில் இறைச் செய்தி வருவது சுத்தமாக நின்று போயிருந்ததே ஏன்? இந்த குரானைத் தவிர வேறெந்த அற்புதமும் முகம்மதுவுக்கு இல்லை என குரான் கூறும் போது நிலவைப் பிளந்தது உள்ளிட்ட பல அற்புதங்களை முகம்மது செய்தது எப்படி? எந்த அல்லா இதில் முரண்பாடு இல்லை எனக் கூறுகிறாரோ அந்த குரானில் முரண்பாடுகள் இருக்கின்றன. எந்த அல்லா இதில் பிழைகள் இல்லை என்று கூறுகிறாரோ அந்த குரானில் பிழைகள் இருக்கின்றன. என்றால் முகம்மதின் அல்லா யார்?
ஐயம் ஏதுமின்றி முகம்மதுவும் முகம்மதின் அல்லாவும் ஒருவரே. அதாவது முகம்மது தன்னுடைய நோக்கத்தை அல்லது தான் வாழ்ந்த காலத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கற்பனையில் தனக்குத் தானே உருவகித்துக் கொண்டது தான் இஸ்லாமிய அல்லா. நேர்மையான மீளாய்வுக்கு ஆயத்தமாக இருக்கும் யாருக்கும் இஸ்லாமியர்கள் உட்பட இதில் ஐயம் ஏற்பட வாய்ப்பில்லை.
இத்தொடரின் முந்தைய பகுதிகள்
57. முகம்மதின் மரணத் தருவாயில் நடந்த குழப்பங்கள்
54. முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்
53. முகம்மதின் மக்கா வாழ்வும் அவரின் புலப்பெயர்வும்
52. தன்னுடன் தானேமுரண்பட்ட முகம்மது
51. முகம்மது நல்லவரா? கெட்டவரா?
50. முகம்மது அனுப்பிய கடிதங்கள் மதமா? ஆட்சியா?
49. முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?
48. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2
47. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1
46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை
45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்
44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்
43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3
42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2
41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1
40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்
39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை
38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து
37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை
36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா
35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4
34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3
33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2
32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1
31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்
30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்
29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா
28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?
27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்
26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்
25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா
24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?
23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா
21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?
20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?
19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?
18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்
17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்
15. விந்து குறித்த குரானின் விந்தைகள்
14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்
13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்
12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.
11. குரானின் மலையியல் மயக்கங்கள்
10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?
8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்
7. குரான் கூறுவது அறிவியலாகுமா?
6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.
5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.
4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?
2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்
1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….
உங்கள் தெளிவான,உதாரணங்கள் காட்டிய பதிவை நிதானமாக படித்தேன், கடைசியாக முஹமது நபி அவர்கள் தன்னுடைய விருப்ப மனைவிகளில் ஆயீஷ வும் ஒருவர், அவர்மேல் பழி ஏற்பட்டதால்,மன வேதனையில் நபிகளார் இருந்தார்கள் என்று படித்து இருக்கிறேன் உங்கள் பதிவும் அதே தான் சொல்லுது, அந்த நேரத்தில் வஹி ஏன் வரவில்லை என்பது உங்கள் வாதம், ஒரு வேளை அல்லா அதை கூட சோதித்து இருப்பானோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது??? காரணம் ஒரு சாதாரண மனிதனுக்கு தனுடைய மனைவி
மேல் சந்தேகம் வந்தால் படிப்பறிவு இல்லாதவன் கொலை செய்வான், படித்தவன் கொஞ்சம் அலசி ஆராயயுவான்!!! பலகீன மனது இருப்பவன் தற்கொலை செய்வான் ,ஆனால் அல்லாவுடைய தூதர் இந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் அவரே முடிவு எடுப்பாரா? இல்லை தன்னிடம் வருவாரா என்பதை ? பார்பதற்காக அல்லா ஒரு மதம் கால அவகாசம் கொடுத்து இருப்பானோ ????
வணக்கம் தோழர்,
.திரு முகமதுக்கு முதல் வஹி வரும் போது(பொ.ஆ 610) திருமதி ஆயிஷா பிறக்கவில்லை.பிறப்பு 613/614.
திருமதி கதிஜா சொன்ன ஹதிதுகள் ஏதேனும் இருக்கிறதா?
நன்றி
முகம்மதின் முதல் மனிவியான கதீஜா ஹதீஸ்கள் எதையும் அறிவிக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.