‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?

Muhammad enters Mecca in December 629

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 8

உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  8.1, 8.2

இத் தொடரின் கடந்த பகுதியில் இரண்டு அம்சங்களை பின்னர் பார்க்கலாம் என்று கூறி முடித்திருந்தேன். எனவே, ஒன்பதாவது பகுதியை பார்க்கும் முன் அவைகளை விளக்கி விடலாம்.

இஸ்லாம் பின்பற்ற எளிதானது மார்க்சியம் கடினமானது. இதை ‘உணர்வு’ கும்பல் எந்த அடிப்படையிலிருந்து கூறியிருக்கிறதோ அந்த அடிப்படையிலிருந்து இதை மறுக்க வேண்டும். இஸ்லாமும் குரானும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் மார்க்சியமோ ஏழைகளுக்கு மட்டும் தான் பொருந்தும். அதுவும் ஏழைகளும் பின்பற்ற முடியாதபடி கடினமானது. இது தான் ‘உணர்வு’ கும்பல் கூறவரும் கருத்து.

அனைவருக்கும் பொதுவானது என்பதே ஒரு புரட்டல்தனமான கருத்து. ஒரு அடிமையும் சுதந்திரமானவனும் ஒருபோதும் சமமாக முடியாது என்று குரான் பல வசனங்களில் கூறுகிறது. சமகாலத்தில் வாழும் இரண்டு மனிதர்கள் சமமாக முடியாது எனும் போது, அதையும் குரானே கூறி விட்ட பிறகு அந்த குரான் அனைவருக்கும் பொதுவானதாக எப்படி இருக்க முடியும்? உலகில் வாழும் மனிதர்கள் பொருளாதாரம், சமூக மதிப்பு, உற்பத்தித் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஏற்றத் தாழ்வான நிலையில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது குரான் அனைவருக்கும் பொதுவானது என்றால் அதன் பொருள் நகைப்புக்கிடமானது. எப்படி எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான நூல் என்று ஒன்று இருக்க முடியாதோ, அதேபோல் எல்லோருக்கும் பொதுவான நூல் என்றும் எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் காலம் மாறிக் கொண்டே இருக்கிறது அதேபோல் மனிதர்களும் ஒரே தன்மையில் இருப்பதில்லை. ஆகவே, எல்லோருக்கும் பொதுவான ஒரு நூல் என்று எதுவும் இருக்க முடியாது, குரான் உட்பட. இது இன்னும் எளிதாக விளங்க வேண்டும் என்றால் ஒரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். இஸ்லாம் பரவிக் கொண்டிருந்த அன்றைய அரேபிய கலாச்சாரங்களை எடுத்துக் கொண்டால் பாலைவன உட்பகுதிகளில் வாழ்ந்த பதவி இன மக்களுக்கு வழிப்பறி என்பது ஒரு தொழில். மக்காவைச் சுற்றி வாழ்ந்த பண்டமாற்று வணிகர்களுக்கு பதவிகளின் தொழில் ஒரு தொல்லையாக இருந்தது. இந்த இரண்டு தரப்பினருக்கும் பொதுவானதாக குரானில் ஏதாவது இருக்கிறதா? மாறாக திருட்டு குற்றம் என்று ஒருபுறம் கூறி தண்டனை கொடுத்தும், தன்னுடைய வழிப்பறியை ‘கனிமத்’ பொருட்கள் என்று மறுபுறம் நியாயப்படுத்தியும் நெருக்குதல் கொடுத்து அனைவரையும் ஏற்க வைத்தது. இதை அனைவருக்கும் பொதுவானது என்று கூற முடியுமா? புதிதாக தோன்றும் எந்த ஒரு நன்நெறியும் ஒரு சாராரை சார்ந்தும் அதற்கு மாறான மறு சாராரை நிர்பந்தம் செய்தும் ஏற்க வைக்கும். இது தான் வரலாறு, இதற்கு வெளியே அனைவருக்கும் பொது என்பது மதவாதிகளின் ஜல்லியடிப்பு என்பதன்றி வேறொன்றுமில்லை.

எந்த ஒரு மதத்தை பின்பற்றுவதையும் விட கம்யூனிசத்தை பின்பற்றுவது கடினமானது தான். இதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் எளிமையானதெல்லாம் சரியானதாக இருக்க வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை. மதம் என்பது என்ன? சில வணக்க வழிமுறைகள், சில ஒழுங்குபடுத்தல்கள் அவ்வளவு தான். தனிமனித முறைமைகளைத் தாண்டி மதங்களில் என்ன இருக்கிறது? இஸ்லாத்தில் என்ன இருக்கிறது? கற்பனையான ஒரு மதத்தை பின்பற்றும் எந்த ஒரு மனிதனுக்கும் சமூகக் கடமைகள் என்று எதுவும் இல்லை. தனிமனிதனாக மதக் கடமைகளை நிறைவேற்றினால் சொர்க்கம் இல்லையென்றால் நரகம் அவ்வளவு தான். ஆனால் கம்யூனிசத்தை பின்பற்றுவது என்பது சமூகக் கடமைகளைக் கொண்டது. மக்களை ஒன்று திரட்டி நடப்பு உலகின் உற்பத்தி முறையை புரட்சிகரமான முறையில் மாற்றியமைத்து அதன் மூலம் இதுவரை சுரண்டப்பட்டு வந்த அனைவருக்கும் வாழ்வழிப்பதையும், சுரண்டிக் கொண்டிருந்த அனைவரையும் அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கான விளைவை அனுபவிப்பதற்கும் வழிவகை செய்வது. இதை ஒரு மதத்துடன் ஒப்பிடுவதே முறையற்றது.

‘உணர்வு’ கும்பல் இஸ்லாத்தை பின்பற்றுவது எளிதானது, கம்யூனிசத்தை பின்பற்றுவது கடினமானது என்கிறது. அவர்கள் எந்த அடிப்படையில் கூறினார்களோ தெரியாது. ஆனால் மேற்கண்ட அடிப்படையில் அது உண்மையானது தான். இஸ்லாத்தை பின்பற்றுவதை விட கம்யூனிசம் பின்பற்ற கடினமானது என்றாலும், கம்யூனிசத்தை தங்கள் வாழ்நெறியாகக் கொண்டு ஒழுகும் ஆயிரக் கணக்கானோரை காட்ட முடியும். அதற்கான போராட்டத்தில் உயிரையும் துச்சமெனக் கருதி மக்களுக்காக பாடுபடும் ஆயிரக் கணக்கானோரை காட்ட முடியும். இஸ்லாம் பின்பற்ற எளிதானது எனக் கூறும் ‘உணர்வு’ கும்பல் இஸ்லாத்தை முழுதாக பின்பற்றி வாழ்பவர் என்று உலகில் ஒற்றை ஒருவரையேனும் காட்ட முடியுமா? இவர்கள் விதந்து போற்றும் முகம்மதே முற்று முழுதாக பின்பற்றியவரில்லை. குரான் சில இடங்களில் முகம்மது சரியாக நடக்கவில்லை என்று கண்டித்திருக்கிறது. இந்த நிலையில் முழுதாக இஸ்லாத்தை பின்பற்றியவர்கள் யார்? ‘உணர்வு’ கும்பல் பதில் கூறுமா?

அடுத்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் நூலிலிருந்து ஒரு மேற்கோள் காட்டியிருக்கிறது ‘உணர்வு’ கும்பல். தனியொரு மனிதன் திருந்தினால் சமூகம் திருந்துமா? இது கேள்வி. இந்தக் கேள்விக்கு ‘உணர்வு’ கும்பல் அளிக்கும் பதில், ‘முகம்மது தனியொரு மனிதராக சக மனிதர்களிடம் அறிவுரை கூறி ஒவ்வொருவராக திருத்தி அதன் மூலம் அரபியாவையே திருத்தினார்’ என்பது. மார்க்ஸும் இதையே தான் கூறியிருக்கிறார் என்று – தனியொருவனை திருத்துவதன் மூலம் சமூகத்தை திருத்தி விடலாம் – அந்த பொருந்தாத, தவறான மேற்கோளை காட்டியிருக்கிறது ‘உணர்வு’ கும்பல். “தனியொருவர் பிறர் ஒருவரை சுரண்டுதல் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு ஒரு தேசம் பிரிதொன்றைச் சுரண்டுதலும் ஒழிக்கப்படும்” இதுதான் அந்த மேற்கோள். இதன் பொருளும், ‘உணர்வு’ கும்பல் சுட்டிக் காட்டும் பொருளும் ஒன்றா? மார்க்ஸிய நூல்களின் வாசிப்பனுபவம் உள்ள எவருக்கும் புரியும் ‘உணர்வு’ கும்பல் பொருந்தாத மேற்கோளைக் காட்டியிருக்கிறது என்று. அதன் பொருள் என்னவென்று பார்க்கலாம். அந்த வாக்கியத்துடன் இணைதிருக்கும் இன்னொரு வாக்கியத்தையும் சேர்த்து படித்துப் பார்த்தால் அதன் பொருளை விளங்குவதற்கு ஏதுவாக இருக்கும்.

“தனியொருவர் பிறர் ஒருவரை சுரண்டுதல் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு ஒரு தேசம் பிரிதொன்றைச் சுரண்டுதலும் ஒழிக்கப்படும். தேசத்தினுள் வர்க்கங்களுக்கிடையிலான பகைநிலை எந்த அளவுக்கு மறைகிறதோ, அதே அளவுக்கு தேசங்களுக்கிடையேயான பகைமையும் இல்லாதொழியும்”

மனிதர்கள் ஒருவருக்கொருவர் சுரண்டுவது இல்லாதொழியும் போது ஒரு நாடு இன்னொரு நாட்டை சுரண்டுவது இல்லாது ஒழியும். அதாவது இரண்டு நாடுகள் இருக்கின்றன என்று கொண்டால் இரண்டு நாடுகளிலும் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் சுரண்டுவது ஒழிந்து விட்டால் அந்த இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று சுரண்டிக் கொள்ளுமா? அதேபோல அந்த இரண்டு நாடுகளும் உள்ள பகை வர்க்கங்கள் அதாவது ஏழை பணக்காரன் எனும் முரண்பாடு மறைந்து விட்டால் தெளிவாய்ச் சொன்னால் உற்பத்தியும் பகிர்வும் சமூகமயமாகி விட்டால் அந்த இரண்டு நாடுகளுக்கு இடையில் பகைமை கொள்வதற்கான காரணிகள் இல்லாமல் போகும். இது தான் அதன் பொருள். இந்த மேற்கோளில் சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டும் என்பது வருகிறதே தவிர அந்த சுரண்டல் எந்த வழிகளில் ஒழிக்கப்பட வேண்டும் என்பது இடம்பெறவில்லை. ஆனால், ‘உணர்வு’ கும்பல் சுட்டிக் காட்டுவதோ எந்த வழியில் சமூக மாற்றம் நடைபெற வேண்டும் என்பதை. ஒவ்வொருவராக திருத்தி சமூக மாற்றம் முகம்மதால் நிகழ்த்தப்பட்டது என்று கூறிவிட்டு அதற்கு இசைவாக மார்க்ஸும் இவ்வாறு தான் கூறியிருக்கிறார் என்று அந்த மேற்கோளைக் காட்டுகிறார்கள். எவ்வளவு அயோக்கியத்தனம் இது.

ஒவ்வொருவராக திருத்தி சமூக மாற்றம் ஏற்படச் செய்வது சாத்தியமா? முகம்மது அப்படித்தான் சமூகத்தை மாற்றினாரா? என்பதைப் பார்ப்போம். மார்க்சியம் சமூக மாற்றம் மேலுருந்து கீழாக நடைபெற வேண்டும் கீழுருந்து மேலாக நடைபெற முடியாது என்கிறது. ஒரு சமூகத்தின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனை முறை, உறவு, சட்டங்கள், கோட்பாடுகள் என அனைத்தும் உற்பத்தி முறையை சார்ந்து தான் இயங்கும். ஒரு சமூகத்தின் உற்பத்தி முறை மாறும் போது இதற்கு இசைவாக மேற்கண்ட அனைத்தும் மாறும். இதற்கு மாறாக தனியொருவராக மாறி சமூகத்தை மாற்ற முடியாது. ஏனென்றால் உற்பத்தி தனியொரு மனிதனின் கையில் இல்லை, சமூகத்தின் கைகளில் இருக்கிறது. சமூகத்தின் உற்பத்தியை பல்வேறு வடிவங்களில் தனியொரு மனிதன் அபகரித்துக் கொள்வது தான் சுரண்டல். அப்படி சுரண்டிக் கொழுக்கும் மனிதர்களை மாற்றி உற்பத்தியின் பலன்களை சமூகத்துக்கு திருப்பிவிட முடியாது. ஆண்டவன் பேரைச் சொன்னாலும் ஆட்டுக் குட்டியின் பேரைச் சொன்னாலும் எந்த ஒரு மனிதனும் சமூக உற்பத்தியை சொந்தமாக அபகரிப்பதை விட்டுக் கொடுக்க மாட்டான். [தன்னிடமுள்ள ஒரு பொருளை அல்லது ஒரு சொத்தை பிறருக்கு தானமாக கொடுப்பது என்பது வேறு, சமூக உற்பத்தியை தன் சொத்தாக அபகரிப்பதை விட்டுக் கொடுப்பது என்பது வேறு] அதை பலவந்தமாகத் தான் செய்ய முடியும். அந்த பலவந்தத்தை தனியொரு மனிதன் செய்துவிட முடியாது. அதனால் தான் மார்க்சியம் புரட்சியின் வழியாக பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றி உற்பத்தி கருவிகளை பொதுவுடமைப்படுத்துவதன் மூலம் உற்பத்தி முறையில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்கிறது.

இது போன்ற சமூக மாற்றத்தை முகம்மது ஏற்படுத்தினாரா? இல்லை, முகம்மது செய்ததெல்லாம் அன்றைய ஆண்டான் அடிமைச் சமூகத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்ததும் வணிகர்களின் பிரதிநிதியாக இருந்து இல்லாதிருந்த அரசை ஏற்படுத்தியதும் தான். இதையும் அவர் ஓவ்வொருவராகச் சென்று பேசி மனம் மாற்றி செய்யவில்லை, செய்ய முடியவில்லை. அதற்கு ஆதாரம் மக்கா. மக்காவில் மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்தும் ஒன்றும் நடக்காதாதால் அவர் மக்காவை விட்டு ஓடிப் போனார். அப்படி ஓடிப் போனதே ஒவ்வொருவராக மனம் மாற்றி ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கான ஆதாரம். மக்காவில் மூன்று ஆண்டுகளாக ஒன்றும் செய்ய முடியாத முகம்மது மதீனா சென்றதும் யாரையும் பேசி மனம் மாற்றாமலேயே அரசராகி விட்டாரே அது எப்படி? ‘உணர்வு’ கும்பலால் பதில் சொல்ல முடியுமா? பொய்களுக்கு மேல் பொய்களாக அடுக்கி வைத்தால் அதன் பெயர் தான் இஸ்லாம். ஒன்றும் செய்ய முடியாமல் முகம்மது ஓடிப் போனதை கொலை செய்யப் பார்த்தார்கள், கொடுமைப் படுத்தினார்கள் அதனால் தான் ஓடிப் போனார் என்று திருப்பிப் போட்டார்கள். ‘உணர்வு’ கும்பலோ அதற்கும் மேலே சென்று ஒவ்வொருவராக மனம் மாற்றி சமூகத்தை திருத்தினார் என்று ஒரே போடாக போடுகிறார்கள். இதற்கு மார்க்ஸை வேறு துணைக்கு அழைக்கிறார்கள்.

முகம்மது மதீனாவில் உடனடியாக எப்படி ஆட்சியதிகாரம் பெற முடிந்தது? மதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ் எனும் இரண்டு குலத்தவர்கள் இருந்தார்கள். அரபுகளான இவர்களே பெரும்பான்மையாக இருந்தாலும் அங்கு சிறுபான்மையினராக இருந்த யூதர்களின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. ஏனென்றால் அவ்ஸ், கஸ்ரஜ் இனத்தவர்களிடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த மோதல்கள். நீண்ட கால மோதலால் இரு குலத்தவருமே களைத்திருந்தனர். அதே நேரம் தங்களின் ஆதிக்கத்திற்காக இருவருக்குமிடையே பகைமையை யூதர்கள் மூட்டி வந்தனர். மட்டுமல்லாது தங்களிடையே கடவுளின் தூதர் ஒருவர் தோன்றி உங்களை வெளியேற்றி விட்டு மதீனாவை எங்களுக்கு சொந்தமாக்குவார் என்றும் யூதர்கள் அரபுக்களிடம் கூறி வந்தனர். இந்த நிலையில் தான் முகம்மது தன்னை கடவுளின் தூதர் என்று கூறிக் கொண்டிருந்தது அவர்களை எட்டுகிறது. இதனால் யூதர்களை முந்திக் கொண்டு முகம்மதை அனுகுகிறார்கள். அதுமட்டுமன்றி முகம்மதுவுக்கும் கஸ்ரஜ் குலத்தினருக்குமிடையே உறவு உண்டு. முகம்மதின் பாட்டனார் அப்துல் முத்தலிபின் தந்தை ஹாஷிம் கஸ்ரஜ் குலத்திலேயே திருமணம் செய்திருந்தார். முகம்மதின் தந்தை அப்துல்லா ஒரு வியாபாரப் பயணத்தில் வழியில் மதீனா அருகே நோய் வாய்ப்பட்டு மரணமடைந்து விட யாத்ரிபின் கஸ்ரஜ் குலத்தினிடையே தான் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த அடிப்படையில் அவ்ஸ், கஸ்ரஜ் குலத்தினரிடையே ஒற்றுமையையும், யூதர்களை ஒடுக்குவதற்கும் ஒரு பொதுவான தலைமையை தேடிக் கொண்டிருந்த அவர்களுக்கு முகம்மது பொருத்தமானவராக தெரிந்தார். இது தான் முகம்மது மதீனா சென்றதும் ஆட்சியதிகாரம் பெற முடிந்ததுமான ரகசியம்.

அபூதல்ஹா என்பவர் தன்னுடைய தோட்டத்தை முகம்மது ஒரு வசனம் கூறியதும் அப்படியே விட்டுக் கொடுத்தார் என்று புழகமடைகிறது ‘உணர்வு’ கும்பல். அபூதல்ஹா மட்டுமல்ல, முகம்மதுவும் அவரது சீடர்கள் சிலரும் மக்காவை விட்டு மதீனா வந்ததும் மதீனாவசிகள் பலர் தங்களின் நிலங்களை, வீடுகளை மக்காவாசிகளுக்கு பகிர்ந்து கொடுத்தார்கள். மட்டுமல்லாது தங்களின் மனைவிகளைக் கூட விவாகரத்து செய்து மக்காவாசிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இப்படி மனைவிகளை பகிர்ந்து கொடுங்கள் என்று முகம்மது வசனம் எதையும் இறக்காத போதிலும் மதீனாவாசிகள் கொடுத்தார்களே, அது எப்படி? பதில் கூற முடியுமா ‘உணர்வு’ கும்பலால்? தங்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கப் போகிறது எனும் நம்பிக்கையல்லாது அவர்களுக்கு வேறு என்ன அதிசயம் இருந்தது குரானில்? திறனிருந்தால் ‘உணர்வு’ கும்பல் பதில் கூறிப் பார்க்கட்டும்.

மதீனாவை முகம்மது பேசிப்பேசியே[!] ஆட்சியை ஏற்படுத்தியது ஒரு பக்கம் என்றால் மக்காவில் தன் ஆட்சியை எப்படி விரிவு படுத்தினார்? முதலில் மூன்று ஆண்டுகள் முகம்மதாக பேசி சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் மதீனா போனவர், மீண்டும் மன்னர் முகம்மதாக வந்து பேசி மக்காவாசிகளின் மனதை மாற்றினாரா? போரில் வெற்றி கொண்டு மக்காவைப் பிடிக்கிறார். பிடித்தவுடன் அவரின் முதல் ஆணை என்ன தெரியுமா? காஅபா ஆலயத்துக்குள் இனி முஸ்லீம்களைத் தவிர வேறு யாரும் நுழையக் கூடாது என்று ஆணையிட்டது தான். அதன் பிறகு திடீரென அனைவரும் முஸ்லீம்களாக மாறி விட்டார்கள். [முஸ்லிம் 2587] மூன்று ஆண்டுகள் பேசிப்பேசி முடியாமல் தோல்வி கண்ட முகம்மது ஒரே நாளில் அனைவரையும் எப்படி முஸ்லீமாக மாற்றினார்? அப்படி என்ன பேசி மாற்றினார்? ‘உணர்வு’ கும்பலால் பதில் கூற முடியுமா? அவர்களால் பதில் சொல்ல முடியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், முகம்மது அவர்களை கட்டாய மதமாற்றம் செய்தார் என்பது இன்னொரு புறம் இருக்கட்டும். முகம்மது நிகழ்த்திய சமூக மாற்றம் ‘உணர்வு’ கும்பல் கூறும் முறையில் நிகழ்ந்திருக்கிறதா? அல்லது மார்க்ஸ் கூறியவாறு மேலிருந்து கீழாக அதாவது அதிகாரத்திலிருந்து மக்களுக்கு எனும் வழியாக நிகழ்ந்திருக்கிறதா? ‘உணர்வு’ கும்பல் சிந்திக்காது. அறிவு நேர்மையுள்ள முஸ்லீம்கள் சிந்திப்பார்களா?

இதில் ‘உணர்வு’ கும்பல் இன்னொரு எள்ளலையும் செய்திருக்கிறது. மார்க்சியர்கள் கம்யூனிசத்தை மக்களிடம் கொண்டு செல்ல இரகசியமாக திட்டம் தீட்டி செயல்படுகிறார்களாம். பொதுமக்கள் முன்னிலையில் அல்லது திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள் மாதிரி பொது இடங்களில் போவோர் வருவோரை எல்லாம் கூட்டி வைத்துத்தான் டி.என்.டி.ஜே தங்களின் திட்டங்களை தீட்டிக் கொள்கிறார்கள் என்று நம்பிக் கொள்வோம். ஆனால் முகம்மது இரகசியமாகத் தான் திட்டங்களை தீட்டியிருக்கிறார். ‘உணர்வு’ கும்பலுக்கு அது தெரியாது என்றால் ஆதாரங்களை தருகிறோம். போகட்டும், முகம்மதுவுக்கு இருந்த எதிர்ப்பெல்லாம் தனிமனித, குழுக்களின் எதிர்ப்பு தான். ஆனால் இன்று மார்க்ஸியர்களுக்கு இருக்கும் எதிர்ப்பு அதிகார பலம், ஊடக பலம், நாடு தழுவிய வலைப் பின்னல் நிர்வாக பலம், இராணுவ பலம், பொருளாதார பலம் என மிக பலம் பொருந்திய அரசு எனும் எதிரியுன் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இரகசிய திட்டம் தீட்டல் அவசியம் தான். இதெல்லாம் வரலாற்றறிவு உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கும். மதம் பிடித்த கும்பல்களிடம் அதை எதிர்பார்க்க முடியுமா?

இத்தொடரின் முந்திய பகுதிகள்:

1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்

2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

3.  பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே

4. வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்கள்

5. எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்

6. துரோகி முகம்மதா மார்க்ஸா டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?

7.  ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும் அறியாமையும் தான்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

15 பதில்கள்

  1. கம்யூனிசம் நோக்கி வருவது என்றால் எப்படி வருவது எங்கு வருவது நண்பரே விளக்கவும்.

  2. feroze oru pradu carful

  3. ரவி, பதில் எழுத தெரியாதுன்னா பொத்திகிட்டு இரு. சொல்ல கடமைப்பட்டவர் சொல்லுவார்.

  4. நண்பர் ஃபெரோஸே,

    இது ‘உணர்வில்’ வெளிவரும் தொடருக்கான மறுப்பு. நீங்கள் வர வேண்டுமென்றால் இஸ்லாத்தை நோக்கி எங்கு வர வேண்டும் என்று ‘உணர்வு’ கூறுகிறதோ அதற்கு எதிர்ச் சந்தில் வாருங்கள்.

  5. அய்யா செங்கொடி! விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி… இப்படி எழுதியிருப்பது நீங்கள்தான். அதற்கான வழியைச் சொல்ல கடமைப்பட்டவரும் நீங்கள்தான். தலையை சுத்தும் வேலையை விடுத்து கம்யூனிசம் நோக்கி எங்கு எப்படி வரவேண்டும் என சொன்னால் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். சொல்லுங்கள் செங்கொடி சொல்லுங்கள்.

  6. feroze மகஇகவீல் வேலை செய்வதாக கூரிக்கொன்டு கம்யுனிசம் கறக வழி தேடும் white coller pradu

  7. ஹா ஹா ஹ்ஹா ரவி யார் பிராடு என்பதை பிறகு விவாதிப்போம். முதலில் அய்யா செங்கொடி அவர்கள் கம்யூனிசம் நோக்கி வாங்க வாங்கன்னு சொன்னாரில்லையா அதற்கு எப்படி எங்கு வருதென்று விளக்கட்டும்.

  8. feroze நிங்கள் எந்த அமைப்பில் வேலை செய்வதாக கூறீக்கொண்டு திரிகிறீர்களோ அந்த சந்துக்குள் வரவேண்டும்

  9. அன்பரே ஃபெரோஸ்,

    கம்யூனிசம் நோக்கி வருவது என்றால் அதன் பொருள் எந்த இடத்துக்கு வர வேண்டும் என்று கேட்பது தான் என மிகத் துல்லியமாக புரிந்து வைத்திருக்கும் உங்களிடம் என்ன வழி சொல்வது? அதே வழி தான் முடிந்தால் வந்து காட்டுங்கள்.

  10. அழைப்பு விடுத்தவரிடம் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ரவி ஏன் நீங்க முந்திரிகொட்டையாட்டாம் எழுதிக்கொண்டிருக்கிறீர்.
    பின்குறிப்பு: நான் மகஇகவில் வேலை செய்வதாக எங்கு எப்போது கூறிக்கொண்டு திரிந்தேன்?

  11. ரவி, நான் மகஇக காரன் என்று சொல்லி உம்மிடம் பல ஆயிரத்தை வாங்கி ஏமாற்றிவிட்டேனா என்ன! உம்மைப் பற்றி எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி உமக்குத் தெரிந்திருந்தால் இந்த பிராடைப் பற்றி மகஇகவில் புகார் செய்திருக்க வேண்டியதுதானே!

  12. ரவி, நீர் என்னை பிராடு என்றதை நிரூபின்னு அல்லது அப்படி சொன்னது தவறு என்று சொல்லு.

    செங்கொடி, கம்யூனிசத்திற்கு வர வேண்டிய இடத்தின் பெயரை வெளிப்படையா சொல்ல ஏன் தயங்குகிறீர்கள்.

  13. கம்யூனிசத்தை நோக்கி வருவது என்றால், அது ஏதோ ஒரு இடத்துக்கு வருவது என்று புரிந்து வைத்திருக்கும் உங்கள் புரிதலில் பிழை இருக்கிறது என்பதை எப்போது நீங்கள் உணருவீர்களோ அப்போது நான் வெளிப்படையாக சொல்கிறேன்.

  14. பெரோஸ்,
    செங்கொடி மகஇக தான் உண்மையான கம்யூனிச அமைப்பு என்பார். தப்பித்தவறி அங்கு போய்விடாதீர்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: