அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!
நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறேன். இவைதவிர நான் எழுதும் பதிவுகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் மட்டுமே சமூகத் தளங்களை பயன்படுத்தியிருக்கிறேன். அண்மையில் பலரின் முகநூல் கணக்குகளை அதன் புனை பெயர் காரணமாக முடக்கப்பட்டும் அல்லது ஆவணங்களைக் காட்டி இயற்பெயரில் பதிவிடுமாறும் முகநூல் நிர்வாகம் வற்புறுத்தியது. இவ்வாறான ஒருநிலை எனக்கு ஏற்பட்டால் முகநூல் கணக்கிலிருந்து விலகி விடுவது என முடிவெடுத்திருந்தேன். அப்படியான நிலையில், பழைய பதிவுகளை, அதாவது முகநூலில் மட்டுமே இட்டிருக்கும் பதிவுகளை ஆவணப்படுத்துவது என எண்ணி தேடினால் முகநூலில் அதற்கு எளிய தேடும் வழி இருப்பதாக தெரியவில்லை. எனவே, அப்படியான ஒரு முடக்கத்தை சந்திக்கும் முன்னர் இயன்றவரை பதிவிட்டு விடுவது என்ற எண்ணத்திலும், பெரும்பாலான சமூக நடப்புகளுக்கு ஏற்ற எதிர்வினையை கட்டுரைகள் வடிவில் நான் செய்வதில்லை – வெகு சொற்பமான அளவில் மட்டுமே செய்கிறேன் – என்பதாலும் இப்படி ஒரு ஏற்பாட்டை தொடங்கியுள்ளேன். ஆதாவது மாதம் ஒருமுறை அந்த மாதத்தில் முகநூலில் பதிவுடும் குறுந்தகவல்களை ‘முகநூல் நறுக்குகள்’ என்ற பெயரில் தொகுத்துக் கொடுப்பது எனும் எண்ணத்தின் விளைவே இப்பகுதி. இது குறித்த உங்களின் ஆலோசனைகளும், விமர்சனங்களும் வரவேற்கப் படுகின்றன.
முகநூல் நறுக்குகள் 1-6
*****************************************************
இந்தப் படத்துக்கு வசனம் தேவையில்லை என்று முன்பெல்லாம் நாளிதழ்களில் சிரிப்புப் படம் போடுவார்கள். அதேபோல இந்த வசனத்துக்கு விளக்கம் தேவையில்லை என்று போட்டு விடலாம். அந்த அளவுக்கு இது ஊடகங்களை செவிட்டில் அறைகிறது.
“என்னிடம் பெற்ற உதவிகளை மறந்துவிடாதீர்கள்; அவை ஆவணபடுத்தப்பட்டிருக்கின்றன”
ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் மல்லையா.
****************************************************
எனக்கு ஒண்ணு புரியவே மாட்டேங்குதுங்க.. ..
விசயகாந்து பொது இடத்துல தூ.. .. ன்னு துப்பினா [அது சரியான விமர்சனம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும்]
அதை பெரிய பிரச்சனையாக்குனாங்க. கட்சிக்காரவுங்கள அடிச்சாரு, திட்டினாரு, நாக்க துருத்தினாருன்னு .. .. .. அவருக்கு ஒரு பைத்தியக்கார பிம்பத்தை திறமையா ஒட்ட வச்சுட்டாங்க.
ஆனா நம்ம சீமான் அண்ணாச்சி நேத்து பேரா. அருணனை லூசுன்னு கைய நீட்டி ஏக வசனத்துல திட்டினாரு. ஏற்கனவே, அவரு போன்ல பீப் ல்லாம் பேசிருக்காரு.
ஆனா, விசயகாந்து மாதிரி பட்டம் கொடுக்கலாம்னு பாத்தா.. .. தம்பிமார்கள்லாம் ரெம்ப சூடா இருக்காங்களே ஏன்?
என்ன இருந்தாலும், ம.ந.கூ வை விட ஓட்டு கூட வாங்கலைன்னா கட்சிய கலைச்சிடுவேன்னு சவால் விட்டாரு பாருங்க .. .. அங்க நிக்குறாருங்க நம்ம சீமான்.
நமக்கு சந்தோசம் தாங்க .. தேர்தலுக்கு பின்னால ஒரு கட்சி முழுசா காணாம போகப் போகுதுண்ணு உறுதியா தெரிஞ்சப்புறமும் சந்தோசப்படாம இருக்க முடியுங்களா?
******************************************************
பெரியாரிய செயல்பாட்டாளரான தமிழச்சியின் மீது ததஜ வினரின் அராஜக ஆபாச வசைபாடல்கள் வக்கிரமானவை. கடைந்தெடுத்த ஆணாதிக்க பொறுக்கிகளின் மொழியாடல். ஆர்.எஸ்.எஸ் வானரங்களைப் போலவே இவர்களும் பாஸிச கோரப் பற்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் அல்லாவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை போலவே இவர்கள் மீதும் மூடத்தனமான நம்பிக்கையை வைத்துக் கொண்டிருக்கும் முஸ்லீம்களை பார்த்துத் தான் பரிதாபமாக இருக்கிறது.
இப்படி தனக்கு எதிராக கருத்து கொண்டிருப்பவர்களை எந்த குரான் ஹதீஸ் அடிப்படையில் விபச்சாரப் பட்டம் கட்டுகிறார்கள்?
இப்படி விருப்பம் போல் பொய்களை இட்டுக் கட்டிக் கூறுவதற்கு அல்லா இவர்களுக்கு வஹீ இறக்கினானா?
இப்படி கேள்வி கேட்க திராணியில்லாத தமிழ் முஸ்லீம்கள் மேலே இரண்டாவது பத்தியில் சொல்லப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள் என்றே பொருளாகும்.
http://www.tamizachi.com/articles_detail.php?id=355
****************************************************
ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாசிசங்கள் எதற்கும் தயங்க மாட்டார்கள்.
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா தேசத் துரோகி என்றார்கள். எது தேசதுரோகம் என விளக்குவது அவர்களுக்கு அவசியமில்லை.
பாகிஸ்தான் ஆதரவு கோஷம் என்றார்கள். போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோ என்று சந்தி சிரிக்கிறது.
கால்சட்டையில் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு அடித்தோம். போலீசு எங்களுக்கு துணை நின்றது என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்திருக்கிறார்கள். மோடியியும் அவரது மூடிகளும் எல்லா ஓட்டைகளையும் அடைத்துக் கொண்டு கிடக்கிறார்கள்.
எதுடா உங்க தேசபக்தி?
ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவுக்கு எதிரான எதுவும் தேச விரோதம் என்றால் .. .. ..
பாம்புக்கு பாடம் நடத்தவும் முடியாது, மகுடி வாசிக்கவும் முடியாது. போட்டு நசுக்குவது ஒன்றே வழி.
*****************************************************
காக்கைக்கு இருக்கும் மதிப்பாவது இருக்குமா மக்கள் உயிருக்கு?
முன்னாள் ராணுவத்தினர் 16 ஆயிரம் பேரை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது [பொருட்பிழை இல்லிங்கோ]. ரிலையன்ஸ் குழும நிறுவனங்களை பாதுகாக்க இந்த ராணுவப் பிரிவு பயன்படுத்தப்படும். அதாவது நாட்டின் இராணுவம் என்பதே பெரு முதலாளிகளின் நிறுவனங்களையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்காகத் தான் இருக்கிறது. ஏற்கனவே ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 200 மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ரிலையன்ஸே நேரடியாக கையாளும் இராணுவப் பிரிவு உருவாக்கப் பட்டிருக்கிறது.
காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மக்கள் இந்திய இராணுவத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசு எந்திரம் அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இராணுவம் மக்களை என்ன செய்யும்?
*******************************************************
251 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாம். நான்கு மாதம் கழித்து டெலிவரியாம்.
120 கோடி ஜனத் தொகையில் ஒரு ரெண்டு கோடி பேர் பதிவு செய்ய மாட்டாங்களா? கெடச்சது 582 கோடி
ரெண்டு கோடி பேர்கிட்ட இண்டெர்நெட் வசதியுள்ள போன் இருந்தா நாலு பெரிய கம்பனிகளுக்கு குறஞ்சது 50 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள். ஒரு வாடிக்கையாளர் ஒரு மாசத்துக்கு 200 ரூபாய்க்கு ரீசார்ச் செஞ்சா ஒரு மாசத்துக்கு 400 கோடி
சாமி இப்பவே கண்ணை கெட்டுதே.. .. ..