கொழுப்பெடுத்து உலவும் விலங்குகள்

காணொளியில் புதியது 35

காவல் துறையை ஏவல் துறை என்பதெல்லாம் ரெம்ப பழைய வழக்கம். ரவுடிகள், வெறிநாய்கள், யூனிபார்ம் போட்ட பிச்சைக்காரர்கள் என்று பலவாறாக அழைத்துப் பார்த்தும் போதவில்லை. ஒவ்வொரு கணமும் புதுப்புது சொல்லை கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது அந்தத் துறை.

 

அண்மையில் நடந்த இவ்வாறான காவல் துறையின் மிருகத்தனமான சில நடவடிக்கைகளைத் தொகுத்து காணொளியாக்கி, காவல்துறை யாருக்கு நண்பன்? எனும் கேள்வியை எழுப்பியிருக்கிறது ஆனந்த விகடனின் இந்த காணொளி.

 

பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்களை ஈ காக்கையைப் போல் கொன்று குவித்ததையும், டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதையும், திருநாள் கொண்டசேரியில் ஒரு ஒடுக்கப்பட்ட முதியவரின் உடலை தனிப்பாதையில் தானே கொண்டு சென்று புதைத்ததையும், தேசியக் கொடியை எரித்ததற்காக திலீபனின் கையை உடைத்ததையும் இன்னும் இது போன்ற பலவற்றையும் எடுத்துக் காட்டலாம். காட்டக் காட்ட முடிவற்று நீண்டு கொண்டே செல்லும்.

 

எந்தப் பிரச்சனையானாலும் அதை சட்டம் ஒழுங்கு எனும் ஒன்றுக்குள் இழுத்து வைத்து பார்ப்பதே காவல்துறையின் வழக்கமாக இருக்கிறது. அதாவது ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின, ஏழை மக்கள் எந்தப் பிரச்சனை என்று வந்தாலும் அடிப்படை உரிமைகளை கோரினாலும் கூட அங்கு சட்டம் ஒழுங்கு திடீரென்று முளைத்து விடும்.

 

இப்படி கொழுப்பெடுத்த விலங்குகளாய் உலவும் இந்த காவல் துறையை என்ன செய்வது? யாரிடமும் மனுக் கொடுத்தோ வழக்கு தொடுத்தோ ஆகப்போவது ஒன்றுமில்லை. இனி மக்களுக்கு ஒரே வழிதான் இருக்கிறது.

2 thoughts on “கொழுப்பெடுத்து உலவும் விலங்குகள்

 1. police violence is more in north india. as we have seen in many cases
  in tamilnadu police has not been most brutal…. i still feel
  how could you control when a section of people sit in the highway road blocking traffic throwing stones….
  do you expect police to garland them….
  people also have responsibility man

 2. நண்பர் சந்திரா,

  ஒப்பீட்டளவில் காவல்துறை அத்துமீறல்கள் வட இந்தியாவில் அதிகம் என்பதால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா? பல ஆண்டுகளாக தங்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ருவதற்காக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்திவிட்டு வேறு வழியில்லாமல் தான் மக்கள் சாலையை மறிக்கிறார்கள். சாலையை மறிக்கிறார்கள் என்ற ஒன்றை மட்டும் வைத்து நாயைப் போல் அவர்களை அடித்து விரட்டும் அதிகாரம் காவல்துறைக்கு எப்படி வந்தது? தொடர்பே இல்லாத இடங்களில் காவல் துறையின் கொடுமைகள் குறித்து உங்கள் கருத்து என்ன? ஐயா பூமாலையெல்லாம் போட வேண்டாம். ஏழை மக்களை மனிதர்களாக மதிக்கத் தெரியுமா காவல் துறைக்கு?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s