ஜாதி மத ஒழிப்பில் முதல் எட்டு வைக்க விருப்பமா?

கண்களில் பொறி பறப்பதை வெறுங்கண்ணால் காண முடிகிற அளவுக்கு ஜாதி வெறி பிடித்து அலையும் மிருகங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெற்ற மகளையே எந்த சஞ்சலமும் இல்லாமல் ஒரு ஆட்டுக் குட்டியை அறுக்கும் நிதானத்துடன் அறுத்து வீசி விட்டு அதற்கு கௌரவக் கொலை என்று பெயர் சூட்டும் வன்மங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை ‘வன்மையாக கண்டிக்கும்’ யாரும் தன் சுய ஜாதி அபிமானத்தை விட்டொழிக்க தயாராக இருக்கிறார்களா? என்பது முக்கியமானது. சுயஜாதி அபிமானத்தை பேணி பாதுகாத்துக் … ஜாதி மத ஒழிப்பில் முதல் எட்டு வைக்க விருப்பமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதிமுக வெற்றி மக்கள் முடிவா?

பாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?  திரு. மணி கேள்வி பதில் பகுதியில் நண்பர் மணி, பாராளுமன்ற முறை மீது வைக்கப்படும் விமர்சனங்கள், தோற்கப் போவது மக்கள் தாம் என்பதெல்லாம் நாங்கள் கூறுபவை என்பதைத் தாண்டி அவை சமூகத்தில் நிலவும் யதார்த்தம் … அதிமுக வெற்றி மக்கள் முடிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!

அன்பார்ந்த பெரியோர்களே ! தாய்மார்களே ! இளைஞர்களே ! வணக்கம். ஒட்டுப்போடும் முன் சற்றுச் சிந்தியுங்கள். ஒட்டுப்போடுவதன் மூலம் அரசாங்கத்தை ஆளும் கட்சியை மாற்றலாம். ஆட்சியாளர்களை மாற்றலாம். வேற என்ன மாற்றங்களைச் செய்து விட முடியும்? தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை, பேரழிவுகளை திரும்பிப் பாருங்கள். காஞ்சி சங்கரராமன் பட்டப்பகலில் கோவில் வாசலிலேயே கொடுரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் விடுதலை ஆனார்கள். உரிய நீதி ஏன் கிடைக்கவில்லை? சாதி மாறி காதலித்ததால் … அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!-ஐ படிப்பதைத் தொடரவும்.

குருதிச்சூடான வரலாற்றின் சொந்தங்களே!

இன்று மேதினம். ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் அனைவருமே ஒரு நாள் வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு வரையறை செய்வதற்கு தொழிலாளர்கள் செய்த போராட்டங்கள், தியாகங்கள் பற்றி தெரிந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். மட்டுமல்லாமல் அவ்வாறு போராடி, தியாகங்கள் செய்து பெற்ற பல உரிமைகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. மேதினத்தின் வரலாறு தெரியாததால் தான் உரிமைகள் பறிக்கப்படும் போது நாமென்ன செய்ய முடியும் எனும் … குருதிச்சூடான வரலாற்றின் சொந்தங்களே!-ஐ படிப்பதைத் தொடரவும்.