முகநூல் நறுக்குகள் 13-18
நிகழ்வு 1: கடந்த 31/05/2016 அன்று ராஜஸ்தானில் மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லீம் வியாபாரி ஒருவர் ‘பசு பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளால் கொடூரமாக தாக்கப்பட்டு லாரியும் தீவைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலீசு ஒருவரின் கண் முன்னாலேயே நடந்துள்ளது.
நிகழ்வு 2: திருச்சிக்கு அருகே கல்லகம் எனும் கிராமத்தில் ஆதிக்க ஜாதி பெண்ணை காதல் திருமணம் செய்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் பெண்ணின் சகோதரர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
என்ன நடக்கிறது நாட்டில்? என்று நிச்சயமாக நாம் அதிர்ச்சியடைய முடியாது. ஏனென்றால், இவை முதல் நிகழ்வுகளல்ல.
வட மாநிலங்களில் தொடக்கத்திலிருந்தே இவ்வாறு தான் நிலை இருக்கிறது. என்ன செய்வது என கை சேதப்படவும் முடியாது. ஏனென்றால், இங்கும் அண்மையில் நடந்த தேர்தலில் 2.8 விழுக்காடு ஓட்டு வாங்கியிருக்கிறது பாஜக.
அய்யோ! என்று பரிதாபப்படவோ,
அக்கிரமம்! என்று குரல் கொடுத்து ஓய்ந்து விடவோ இது நேரமல்ல.
முஸ்லீம்களே! மதத்தில் ஒடுங்கி நின்று இதை எதிர்த்து முறியடிக்க முடியும் என நம்புகிறீர்களா?
சமூக அக்கரையாளர்களே! மெய்நிகர் உலகில் இரண்டு கருத்து போடுவதன் மூலம் உங்கள் சமூகக் கடமை தீர்ந்து விடுமா?
இது கை கோர்க்கும் நேரம். ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், மக்கள் நலம் விரும்பிகள், கம்யூனிஸ்டுகள் என அனைவரும் ஒன்றாய் கை கோர்த்து எதிர்த்து முறியடிக்க வேண்டிய நேரம்.
இன்று மாடு என்றால் நாளை வேறு எதுவோ ஒன்று. இன்று காதல் திருமணம் என்றால் நாளை வேறு எதுவோ ஒன்று.
கொல்லப்படுவது வரை அமைதியாகத் தான் இருக்கப் போகிறோமா?
*****************************************
பீகாரில் நிதீஷ் குமார் முதல் கையெழுத்து பூரண மது விலக்கு.
தமிழ்நாட்டில் ஜெயா முதல் கையெழுத்து 100 யூனிட் மின்சாரம் இலவசம்.
அஸ்ஸாமில் சோனோவால் முதல் கையெழுத்து சாமியார் ராம் தேவுக்கு 3800 ஹெக்டேர் நிலம் இலவசம்.
எங்கள் நிலத்தில் எங்களை வாழ விடுங்கள் என பழங்குடிகள் கேட்டால் தோட்டாக்களின் இசையோடு ‘பசுமை வேட்டை’ சொல்லித்தரும் அதே பாசிச கும்பல் தான் இந்த பொம்பள பொறுக்கி சாமியார் பயல் நடத்தும் லேகிய விற்பனைக்கு 3800 ஹெக்டேர் நிலம் இலவசமாக கொடுக்கிறார்கள்.
இந்த அயோக்கியத் தனங்களை எது வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது .. .. .. ?
*****************************************
மல்லையா மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்களே அதன் பொருள் இது தானா?
ஒன்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி ஏப்பம் விட்டுவிட்டு மல்லையா ஹாயாக லண்டனில் ‘குடியும்’ ‘குடித்தன’முமாக இருக்கிறார். அவரும் அவரை மாதிரி கார்ப்பரேட் பெருச்சாளிகளும் திருப்பிச் செலுத்தும் எண்ணத்தில் கடன் வாங்குவதில்லை என்பது ஊருக்கே தெரியும். ஆனால், வங்கி அதிகாரிகளுக்கு தெரியாது. அவர் ஓடிப் போயிட்டார்ன்னு தெரிஞ்சதும் அவரை ராஜ்யசபா உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கி எரிந்திருக்க வேண்டும். இந்த துப்புக் கெட்ட அரசு அவராகவே ராஜினாமா செய்யும் வரை இளித்துக் கொண்டிருந்தது. இப்போ அவர் லண்டனில் இருந்து எனக்கு குண்டி கழுவ அரசு செலவில் ஆள் ஏற்பாடு செய்து தந்தால் தான் தன்னால் இந்தியா திரும்ப முடியும் என்று பேட்டியளிக்கிறார். இந்த மானம் கெட்டவங்க அதை பரிசீலிக்கவும் கூடும்.
ஆனா, இந்த அதிகாரிகள் என்கிற சூரப் புலிகள் இருக்காங்களே, அடேங்கப்பா இவங்க எவ்வளோ பெரிய அப்பாடக்கருங்க தெரியுமா? உத்திரப் பிரதேசத்துல மன்மோகன் சிங் என்கிற விவசாயி மல்லையாவுக்கு சூரிட்டி கொடுத்தாரம் அதனால் அவரோட வங்கிக் கணக்க முடக்கினாங்களாம். பாவம் அவரு, மல்லையா இனிப்பா புளிப்பான்னே எனக்கு தெரியாது அப்டீங்கிறாரு.
ஏண்டா .. .. நொண்ணைங்களா .. .. .. வாயில ஏதாவது வந்துறப் போவுது.
*****************************************
இருக்குது ஆனா இல்லை: பாசிசங்களின் காமெடி
செய்தி: உஜ்ஜயினி கும்பமேளாவில் தலைமை பதவிக்காக சாதுக்கள் துப்பாக்கிகளுடன் மோதல்: 14 பேர் படுகாயம்.
குண்டு வெடிப்பு குற்றவாளிகளான சாது(!)க்கள் விடுதலை – தேசத்தின் கூட்டு மனசாட்சி அவர்களின் விடுதலையை விரும்பியது.
துப்பாக்கியோடு மோதும் சாது(!)க்கள் மீது வழக்கே இல்லை – நீதிபதிகளின் கூட்டு மனசாட்சிக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.
பல்லாண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லீம்கள் – ஐயோ தீ.. .. ..
இருங்கடா .. .. .. எங்க கூட்டு மனசாட்சியை காட்டுறோம்.
*****************************************
இந்தியாவுக்கு இறையாண்மை, நேபாளம் என்றால் தக்காளி சட்னியா?
செய்தி: நேபாள அரசியலமைப்பு சட்டம் குறித்து இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.
காஷ்மீரிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் இந்திய இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினாலே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. டேஷ் புக்காக்கள் (தேச பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்) ஆத்திரம் பொங்கி பாகிஸ்தானுக்கு போ என்று பத்வா கொடுக்கிறார்கள்.
நேபாள மாவோயிஸ்டுகளை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் மன்னரை விலக்கி ஏற்படுத்திய அரசில் அவர்களை இராணுவத்தில் சேர்க்க விடாமல் அகங்காரமாக மூக்கை நுழைத்தது இந்தியா.
இனி நேபாளம் இந்து நாடல்ல என அறிவித்த போது அதற்கு எதிராக பல முட்டுக்கட்டைகள் போட்டு நைச்சியமாக மூக்கை நுழைத்தது இந்தியா.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது உதவுகிறேன் என்று கேமிராக்கள் மூலம் அசிங்கமாக தன் மூக்குச் சளியை ஓடவிட்டு அம்பலப்பட்டு நாறியது இந்தியா.
இன்று நேபாளத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் விடுபட்ட பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்போம் என்று இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறன.
எங்க நாட்டின் பிரச்சனைகளுக்குள் மூக்கை நுழைப்பதற்கு நீங்கள் யாருடா? என்று நேபாளிகள் கேட்கிறார்கள்.
எங்கப்பா அந்த டேஷ் புக்கா குஞ்சாமணிகள்?
என்னடா உங்க பதில்?
*****************************************
மதத்தை விட வர்க்கமே மேலானது – சௌதி அரசு அறிவிப்பு.
செய்தி: சௌதியில் மதக் காவலர்களுக்கு கட்டுப்பாடு
சௌதியில் அண்மையில் நடைபெற்றுவரும் மாற்றங்கள் மத வியாபாரிகளுக்கு உவப்பானதாக இல்லை. தமிழ் இணையப் பரப்பில் ‘இஸ்லாமிய புல்லரிப்பு’களைச் செய்து வரும் எந்தப் பதிவரும் தாயிப் நகரில் நூற்றுக் கணக்கான குரான்கள் சாக்கடையில் வீசப்பட்டுக் கிடந்ததற்கு இதுவரை விளக்கம் கூறியதில்லை. மக்களிடமிருந்து வரும் இது போன்ற குறியீடுகளுக்கு மதவியாபாரிகளால் பதில் கூற முடியாது என்பது ஒரு புறமிருந்தாலும், இஸ்லாம் பிறந்த இடம் இஸ்லாமியர்களுக்கு உவப்பான கொள்கைகளை மட்டுமே செயல்படுத்தும் என கூறமுடியாதல்லவா? மதம் மதம் தான் வர்க்கம் வர்க்கம் தான்.
அண்மையில், குஜராத்தில் முஸ்லீம்களை வேட்டையாடிய மோடிக்கு சௌதியின் உயரிய விருது வழங்கப்பட்டது. இப்போது முத்தவ்வாக்களுக்கு (மத போலீஸ்) கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவைகள் மதம் எனும் அடிப்படையிலிருந்து கொண்டுவரப்பட்டவைகள் அல்ல என்பது வெளிப்படையானது தான். ஆனால் தன்னை மதக் காவலராக முன்னிருத்திக் கொள்ளும் ஒரு அரசு ஏன் இதைச் செய்ய வேண்டும்?
ஏற்கனவே தம்மாம் அராம்கோவில் (பல பத்தாண்டுகளுக்கு முன்பிலிருந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கும் சௌதியின் சிறப்பு பொருளாதார மண்டலம்) புர்கா அணியாமல் சென்ற அமெரிக்க பெண்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள் என்பதற்காக சில முத்தவாக்களை சிறையில் தள்ளியது சௌதி அரசு. என்றாலும் பிற பொது இடங்களில் இது போன்ற கட்டுப்பாடுகளால் உழைக்கும் மக்கள் துன்பட்டே வந்தார்கள். ஆனால், மானிய வெட்டு உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு பிறகு சௌதிகள் அதிக அளவில் வேலை செய்ய பொது இடங்களில் தாரளமாக புழங்க வேண்டியதாகிறது. தவிரவும் பன்னாட்டளவில் ஒப்பந்தங்களும் திட்டங்களும் சௌதிக்குள் தாராளமாக அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்காக இது போன்ற மத கட்டுப்பொட்டித் தனங்களை கொஞ்சம் கொஞ்சமாகவேனும் தளர்த்த வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது.
ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக என்றாலும், மதத்தை விட வர்க்கம் முக்கியமானது என்பதை உணர்த்தியதற்காக இதை வரவேற்கலாம். மட்டுமல்லாது, இந்தியாவில் அரசியல் வியாபாரிகள் கொடுக்கும் தேர்தல் வாக்குறுதிகள் போலியானவை என்பது மக்கள் மத்தியில் எவ்வாறு அம்பலப்பட்டிருக்கிறதோ அதுபோல சௌதி ஆட்சியாளர்களின் மதப்பற்றும் போலியானவை தான் என்பதை சௌதி மக்களை உணரச் செய்யும் நடவடிக்கை என்பதாலும் இதை வரவேற்கலாம்.