டி.என்.டி.ஜே வுக்கு தெரியுமா மாப்ளா கிளர்ச்சியின் வாசம்

300px-South_Malabar_1921

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 10

உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பத்தாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  10.1, 10.2

இந்தத் தொடரின் கடந்த பகுதியை இப்படி முடிக்க்கப்பட்டிருந்தது, \\\மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்பதற்கு அல்லது இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டிலேயே நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்து விட்டது என்பதற்கு 630ல் நடந்த கேரள இஸ்லாமிய எழுச்சியில் என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்/// அதாவது, ஆறாம் நூற்றாண்டில் அல்லது ஏழாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் அடிமைமுறையையும், நிலப்பிரபுத்துவ முறையையும் ஒழித்து விட்டது. ஆனால், கார்ல் மார்க்ஸ் இதை மறைத்து 17,18 ம் நூற்றாண்டுகளில் தான் உலகில் நிலப்பிரபுத்துவ முறை ஒழிந்தது என்று பொய் சொல்கிறார். இஸ்லாமிய எழுச்சியை மறைத்து, பின்னாளில் தான் உலகில் நிலப்பிரபுத்துவ முறை ஒழிந்தது என்று கூறியதன் மூலம் மார்க்ஸ் யூதக் கைக்கூலியாகி விட்டார். இதற்கான ஆதாரம் கேரளாவில் கி.பி. 630 ல் நடந்த இஸ்லாமிய எழுச்சியில் இருக்கிறது. அது அடுத்த பகுதியில் வெளிவரும் என்பது ‘உணர்வு’ கும்பலின் அந்தத் தொடரின் ஒன்பதாவது பகுதியின் கடைசியில் கூறப்பட்டிருந்தது.

அப்படியானால், பத்தாவது பகுதியில் அந்த ஆதாரத்தை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் பத்தாவது பகுதியில் இல்லை. அதற்குப் பதிலாக 1800களில் நடந்த மாப்ளா கிளர்ச்சியைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். கூடவே, இஸ்ரேல் உருவாக்கம் குறித்தும் எழுதியிருக்கிறார்கள். அதிலும் மார்க்ஸ் யூதக் கைக்கூலி எனும் ஒப்பாரி. சரி, அதற்காவது ஆதாரம் கொடுத்திருக்கிறார்களா? என்றால், அதை அடுத்த பகுதியில் எழுதுவார்களாம். எருமை ஏரோப்பிளேன் ஓட்டுவது குறித்து வேடிக்கையாய் சிலர் கூறுவார்கள். அதற்கு நடைமுறை எடுத்துக்காட்டு ‘உணர்வு’ கும்பல் தான்.

கி.பி. 630 ல் கேரளாவில் இஸ்லாம் பரவியது என்பது எந்த ஆதாரமும் இல்லாத கட்டுக்கதை என்பது ஏற்கனவே நிருவப்பட்டிருக்கிறது. அதுபோலவே இஸ்லாம் அடிமை முறையை ஒழித்தது, நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்தது என்பதையும் பொய் என நிரூபித்திருக்கிறோம். இஸ்லாம் அடிமைமுறை, நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்தது என்பது பொய் என்பதை இன்னொரு கோணத்திலும் விளக்கலாம். அதற்கு குரானிலிருந்தே ஆதாரம் காட்ட முடியும். ஆகவே, அதை கவனித்து விட்டு பின்னர் மாப்ளா கிளர்ச்சி குறித்த ‘உணர்வு’ கும்பலின் அயோக்கியத்தனத்தை பார்க்கலாம்.

தமிழக முஸ்லீம்களைப் பொருத்தவரை, குறிப்பாக டி.என்.டி.ஜே வினரைப் பொருத்தவரை, எப்படி சிறுநீர் கழைக்க வேண்டும் என்பதற்குக் கூட இஸ்லாத்தில் வழிகாட்டுதல் இருக்கிறது என பெருமைப்பட்டுக் கொள்வார்கள். எந்த ஒன்றை செய்வதாக இருந்தாலும் அது குரானில் இருக்கிறதா? நபி வழியில் இருக்கிறதா? என ஆராய்ந்து விட்டே செய்வதாக பீற்றிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட அவர்கள் குரானில் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒன்றை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். டி.என்.டி.ஜே வின் அடி முதல் முடி வரை எவரும், ஒற்றை ஒருவர் கூட நடைமுறைப்படுத்தாத குரானின் கட்டளை ஒன்று இருக்கிறது என்றால் அது சொத்துகளை எப்படி பிரிக்க வேண்டும் என்பது குறித்த அல்லாவின் கட்டளை தான். ஏன் குரானின் கட்டளையை – குரானே எல்லாமும், அல்லாவின் கட்டளையே எக்காலத்துக்கும் பொருந்தும் என நீட்டி முழக்குபவர்களால் – பின்பற்ற முடியவில்லை? என்றால் குரான் குறிப்பிட்டிருக்கும் சொத்துடமை வடிவம் வேறு, நடப்பில் இருக்கும் சொத்துடமை வடிவம் வேறு.

இதுவரை உலகம் ஐந்து விதமான உற்பத்தி முறையை கண்டிருக்கிறது. புராதன பொதுவுடமை உற்பத்தி முறை, ஆண்டான் அடிமை உற்பத்தி முறை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை, முதலாளித்துவ உற்பத்தி முறை, சோசலிச உற்பத்தி முறை. ஒவ்வொரு உற்பத்தி முறையிலும் ஒவ்வொரு சொத்துடமை வடிவம் இருக்கும். ஒரு உற்பத்தி முறையின் சொத்துடமை வடிவம் இன்னொரு உற்பத்தி முறையின் சொத்துடமை வடிவத்துக்கு பொருந்தாது, மாற்றம் கண்டே ஆக வேண்டும். இந்த வகையில் குரான் குறிப்பிடும் சொத்துடமை வடிவம் என்பது ஆரம்ப கட்ட ஆண்டான் அடிமை உற்பத்தி முறையின் சொத்துடமை வடிவம். தெளிவாகச் சொன்னால் புராதன பொதுவுடமை சமுதாயம் என்பது சொத்துடமை இல்லாத சமுதாயம். அதாவது இருக்கும் எல்லாமும் எல்லாருக்கும் பொதுவானது. இது என்னுடையது, அது உன்னுடையது எனும் சிந்தனை முறையே அந்த காலகட்டத்தில் இல்லை. காரணம் சொத்து என்றால் என்னவென்றே அன்றைய மனிதனுக்கு தெரியாது. தெரிந்து கொள்ளும் தேவையும் அன்றைய சமூகத்தில் இல்லை. புராதன பொதுவுடமை சமுதாயத்தின் கடைசிக் காலகட்டத்தில் தான் தனிச் சொத்து முறையே தோன்றுகிறது. முகம்மது வாழ்ந்த காலம் அரேபியாவின் ஆண்டான் அடிமை காலகட்டத்தின் தொடக்க காலம். நில உற்பத்தியோ வேறு உற்பத்திகளோ பெருமளவில் இல்லாத பெரும்பாலை நிலப்பரப்பான அரேபிய பகுதியில் பெரும்பான்மை மக்களாக இருந்தது நாடோடிகள் அதாவது பதூ, பதவி என்று அழைக்கப்பட்ட பாலைவன உட்பகுதிகளில் வாழ்ந்த நாடோடிகள். ஆதிக்கம் செலுத்தியது மக்கா போன்ற பகுதிகளில் வாழ்ந்த பண்டமாற்று வணிகர்கள். இவர்களை இணைக்கும் விதமாகத்தான் குரான் குறிப்பிடும் சொத்துடமை வடிவம் என்பது பொதுவுடமை வடிவமும் விட்டுப் போகாத, தனிச் சொத்து வகைப்பட்டதான வடிவமாக சொந்தக்காரர்கள் அனைவரும்க்கும் பகிர்ந்து கொடுக்கும் படியான வடிவத்தை குரான் முன்னிருத்துகிறது.

குரான் சொத்துகளை எப்படி பிரிக்க வேண்டும் எனக் குறிப்பிடும் வசனங்களைப் படித்துப் பாருங்கள் மேற்கண்ட இந்த அம்சம் விளங்கும். ஆனால் இன்றைய நிலை என்ன? இந்தியாவைப் பொருத்தவரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை இன்னும் முழுமையாக அழிந்து போகாத நிலையில் இருக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறை காலகட்டம். இதில் சொந்தம் முழுமைக்கும் அல்ல தன்னுடைய இரத்த வாரிசுக்கு மட்டுமே தன்னுடைய சொத்து செல்ல வேண்டும் எனும் காலகட்டம். இது தான் குரானுக்கும் இன்றைய முஸ்லீம்களுக்குமான முரண்பாடு. அதனால் தான் முகம்மது பிடித்து சிறுநீர் கழித்துக் காட்டியபடி தான் நாங்களும் பிடித்து சிறுநீர் கழிப்போம் என்று கூறுபவர்கள் கூட, முகம்மது பிரித்துக் காட்டியபடி சொத்துக்களை பிரிக்க முடியாமல் தவிர்த்து விடுகிறார்கள்.

டி.என்.டி.ஜே உட்பட அனைத்து இஸ்லாமிய குழுக்களும் கூறுவது என்ன? குரானின் போதனைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை. எல்லாக் காலத்திலும் அதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள். அதன் பொருள் என்ன? ஆண்டான் அடிமைக் காலகட்டம் தான் நிலவில் இருக்க வேண்டும், அது மாறாமல் என்றென்றைக்கும் நிலைக்க வேண்டும் என்பது தானே. அப்படியென்றால் இஸ்லாம் அடிமை முறையை ஒழித்து விட்டது, நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்து விட்டது என்று கூறுவது அப்பட்டமான பொய் தானே. குரான் என்ன கூறியிருக்கிறது? அதன் பொருள் என்ன? அதன் அடிப்படை என்ன? என்பது தெரியாமல் தான் சகோ(!) பாசில் இதை எழுதுகிறாரா? இது தெரியாமல் தான் டி.என்.டி.ஜே வும் அதன் உலகமகா அறிஞர் ஒப்புதலுடன் தன் ‘உணர்வு’ வார இதழில் வெளியிடுகிறதா?

இனி ‘உணர்வு’ கும்பல் குறிப்பிடும் 630ல் நடந்த இஸ்லாமிய எழுச்சிக்கு வருவோம். 630ல் இந்தியாவில் இஸ்லாம் பரவவில்லை. பரவியதாக கூறப்படுவது கட்டுக்கதை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். 630ல் ஏதோ ஒரு எழுச்சி நடந்திருந்து அதை சுட்டிக் காட்டினால் கூட 630ல் இங்கு இஸ்லாம் பரவியிருந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டு விடும். ஆனால் ‘உணர்வு’ கும்பல் என்ன சொல்லியிருக்கிறது? 630ல் நடந்த இஸ்லாமிய எழுச்சி என்று கூறிவிட்டு 1800 களில் நடந்த மாப்ளா எழுச்சியைப் பற்றி குறிப்பிடுகிறது. மாப்ளா எழுச்சி குறித்து ‘உணர்வு’ கும்பல் குறிப்பிடுவது என்ன? 630ல் கேரளாவில் இஸ்லாம் வேகமாக பரவியது. அந்த நேரத்தில் அங்கிருந்த பிராமண ஜென்மிகள் கொடூரமான தீண்டாமைக் கொடுமையை நடத்தினார்கள். பார்த்தால் குற்றம் நடந்தால் குற்றம் என கொடுமைகளுக்கு மத்தியில் ஆண்டாண்டு காலமாக பிராமணர்களுக்கும், நம்பூதிரிகளுக்கும், நாயர்களுக்கும், மேனன்களுக்கும் அடிமைகளாக வாழ்ந்து வந்தார்கள். இந்த காலகட்டத்தில் இஸ்லாம் பரவியதன் மூலம் குரானின் எந்த மனிதனும் இன்னொரு மனிதனுக்கு அடிமையில்லை அவனே உங்களை வாழவைத்தான் போன்ற வசனங்களில் கூறப்பட்டிருப்பதைக் கேட்டு இஸ்லாத்துக்கு மாறி அதுவரை அடிமையாய் இருந்தவர்கள் ஒருதாய் மக்களாக ஒன்றுபட்டனர். இதுவரை அடிமைகளாக இருந்து சேவகம் செய்தவர்கள் இன்று நம்மை எதிர்த்து நிற்கிறார்களே, அவர்களைத் தண்டித்தால் அனைத்து முஸ்லீம்களும் ஒன்று திரள்கிறார்களே என்று நம்பூதிரிகள் உள்ளிட்டவர்கள் திகைத்து நின்றார்களாம். இஸ்லாமியர்களுக்கு நம்பூதிரி உள்ளிட்ட பிராமணர்களுக்கும் இருந்த பகை தான் 1836 ல் மாப்ளா எழுச்சியாக மாறியது. இது தான் ‘உணர்வு’ கும்பல் கூறியிருப்பதன் சுருக்கம். மாப்ளா எழுச்சியில் எண்ணற்ற முஸ்லீம்கள் தங்கள் போராட்டங்களின் மூலம் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒருசேர கொச்சைப்படுத்துகிறது ‘உணர்வு’ கும்பல். இதைவிட அவர்களை வேறு எவரும் கேவலப்படுத்திவிட முடியாது.

முதலாவதாக, தீண்டாமை என்பது தனிமனிதக் குற்றமல்ல, அது ஒரு சமூகக் கொடுமை. ஒருவன் பிறப்பைச் சொல்லி இழிவுபடுத்தப்படுகிறான் என்றால் அதன் பொருள் அதற்கு ஆட்படுமாறு, ஆதிக்க வெறிக்கு கீழ்படியுமாறு சமூகமே அவனை நிர்ப்பந்திக்கிறது என்பதே. பல ஆயிரம் ஆண்டுகளாக அந்த சமூக அமைப்பை விட்டு வெளியேற முடியாமல் அழுந்திக் கிடக்கும் மக்கள் குரானின் ஓரிரு வசனங்களைக் கேட்டு விட்டு வீறு கொண்டு எழுந்தார்கள் என்று எழுதினால் அதை எப்படி புரிந்து கொள்வது? தீண்டாமை என்றால் என்னவென்றே எழுதியவருக்கு தெரியவில்லை என்று தான் புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக, தீண்டாமை என்பதும் அடிமை முறை என்பதும் வேறு வேறு. அடிமை முறையின் எச்சமாக நிலவியது தான் தீண்டாமை. ஒப்பீட்டளவில் தீண்டாமையை விட கொடூரமானது அடிமை முறை. அடிமை முறையை இஸ்லாம் ஒழித்தது என்று கூறிவருவதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவில் தீண்டாமைக்குள் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை இஸ்லாம் விடுவித்தது என்று எழுதிக் கொண்டு செல்கிறது ‘உணர்வு’ கும்பல். அப்படி என்றால் ‘உணர்வு’ கும்பலின் கூற்றுப்படியே இந்தியாவில் இஸ்லாம் வருவதற்கு முன்பே அடிமை முறை ஒழிந்து விட்டது. அதனால் தான் இஸ்லாம் தீண்டாமையை ஒழித்ததா? என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல், எப்படி எழுதுகிறோம் என்று தெரியாமல் கீழ்த்தரமான முறையில் சென்று கொண்டிருக்கிறது ‘உணர்வு’ கும்பல் எழுதும் அந்தத் தொடர். ஏன் ‘கீழ்த்தரமான முறையில்’ என்று குறிப்பிடுகிறேன் என்றால், படிக்கப்போகும் வாசகர்களின் சிந்தனையை தூண்டும் விதமாக எழுதுவது தான் சரியான எழுத்து. மாறாக, படிக்கப் போகும் வாசகர்கள் அடிமுட்டாள்கள், எதை எழுதினாலும் அதை கேள்வியின்றி படித்து ரசிப்பார்கள் என எண்ணி எழுதினால் அதை கீழ்த்தரமான எழுத்து என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவது? டி.என்.டி.ஜே விலிருக்கும் சிந்திக்கும் திறனுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவதாக, 630 லிருந்தே முஸ்லீமாக மாறிய ஒடுக்கப்பட்டவர்கள் ‘உணர்வு’ கும்பல் குறிப்பிடும் இஸ்லாமிய எழுச்சியை நடத்த 1836 வரை காத்திருந்ததேன்? அல்லது 630 க்கும் 1836 க்கும் இடைப்பட்ட காலத்தில் இஸ்லாம் வேலை செய்ய வில்லையா? 630 லிருந்தே ஒடுக்கப்பட்டவர்கள் இஸ்லாமுக்கு வந்து விட்டார்கள் என்றால், 1836 வரை இஸ்லாமியர்களாக இருந்தும் ஏற்படாத எழுச்சி 1836 ல் ஏற்பட்டிருக்கிறது என்றால் 1200 ஆண்டுகளாக இல்லாத ஒன்று 1800 களில் ஏற்பட்டிருக்கிறது என்பது தானே சரியாக இருக்க முடியும்? ஆகவே, 1836ல் நடந்த எழுச்சிக்கு இஸ்லாம் காரணம் அல்ல.

ஆக, தீண்டாமை என்றால் என்னவென்றே தெரியாமல், வாசகர்கள் குறித்த கீழ்த்தரமான எண்ணத்தில் இருக்கும் சகோ(!) பாசில் தான் மாப்ளா எழுச்சியைக் குறித்து எழுதியிருக்கிறார். அது சரியான வரலாறாக இருக்க முடியுமா? மாப்ளா எழுச்சி என்பது இந்திய நிலப்பிரபுக்களுக்கு எதிராக, அவர்களை ஆதரிக்கும் வெள்ளை அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய ஆயுதம் தாங்கிய எழுச்சி. அது தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தொடங்கியதல்ல. ஆனால், தன்னுடைய போக்கில் தீண்டாமைக்கு எதிராகவும் போராடியது. இதோ, 1836 முதல் 1921 வரை நடந்த மாப்ளா எழுச்சியின் வரலாறு.

கேரளாவின் மலபார் மாவட்டதில் ஜன்மி எனப்படும் ஜமீந்தார்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. பெரும்பாலான நிலங்கள் ஜமீந்தார்களுக்கு சொந்தமாக இருந்தன. அவைகளில் குத்தகை தாரர்களாக விவசாயிகள் இருந்தனர். ஜமீந்தார்களில் பெரும்பாலானோர் உயர்ஜாதி இந்துக்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் நம்பூதிரிகள், நாயர்கள். விவசாயிகளில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். அதேநேரம் இஸ்லாமியர்களும் ஜமீந்தார்களாக இருந்தனர். அன்றைக்கு இருந்த 511 ஜமீந்தார்களில் 12 பேர் இஸ்லாமியர்கள்.

விளை நிலங்கள் நீண்டகால குத்தகை, குறுகிய கால குத்தகை என இருவகையாக குத்தகைக்கு விடப்பட்டன. விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே விவசாயிக்கு சொந்தம். மீதமுள்ள இரண்டு பங்கில் ஒரு பங்கு ஜமீந்தாருக்கும், இன்னொரு பங்கு வெள்ளை அரசாங்கத்துக்கும் வரியாக செலுத்தப்பட்டது. வரி செலுத்தத தவறினாலோ அல்லது குறைந்தாலோ விவசாயிகள் வலுக்கட்டாயமாக நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இவ்வாறு வரியை குறைத்து கட்டினார்கள் என்று காரணம் காட்டி 1813 ம் ஆண்டு நீதி மன்ற நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே 203 மாப்ளா விவசாயிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் உள்ள கணக்கு, நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு ஜமீந்தார்கள் நேரடியாக மிரட்டி பிடுங்கியது கணக்கில் அடங்காதது. 1813 லிருந்து 1821 க்குள் வரி கட்ட முடியாது, நம் சொத்து பறிபோய்விடும் என அஞ்சி தங்கள் நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றவர்களின் எண்ணிக்கை 1225. இதுவும் அரசாங்கக் கணக்கு மட்டும் தான். 1821ல் மட்டும் மலபார் மாவட்டத்தில் விவசாய வரியின் மூலம் கிடைத்த வருவாய் நாட்டிலேயே அதிக அளவாக 94,749 ரூபாய். ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவு தானே என எண்ணுபவர்கள் அது வசூலிக்கப்பட்ட ஆண்டு 1821 என்பதையும் இணைத்துப் பாருங்கள். அது எவ்வளவு பெரிய தொகை என்பது புரியும்.

இப்படி கொடூரமாக சுரண்டப்பட்ட நிலையில் தான் இதற்கு எதிராக குத்தகை விவசாயிகளான மாப்ளா விவசாயிகள் கொதித் தெழுந்தனர். பொதுவாக 1836 என்று சொல்லப்பட்டாலும், சரியாகச் சொன்னால் 1837 ஏப்ரல் 15ஆம் தேதி எரநாடு தாலுகாவிலுள்ள செங்கர ஜமீன்தாராய் இருந்த ஒரு நம்பூதிரிப் பார்ப்பனரைக் கொன்றதில் இருந்து தொடங்குகிறது மாப்ளா எழுச்சி. பார்ப்பன ஜமீந்தார்களை மட்டுமல்ல, மாப்ளா எழுச்சிக்கு எதிராக சட்டம் போட்ட, மாவட்ட நீதிபதியாக இருந்த ஹெச்.வி கனோல்லி எனும் வெள்ளைக்காரனையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இவ்வாறான மோதல்களில் அடையப்போகும் மரணத்தை வீர மரணமாகவும், அவ்வாறு அந்தக் கொடூரர்களை அழித்து விட்டு மாண்டு போனால் அது தம் சொர்க்கத்தை உறுதி செய்யும் என்றும் மாப்ளா முஸ்லிம் விவசாயிகள் நம்பினர். அவ்வாறு முடிவு செய்து மோதலுக்குக் கிளம்பும் முன் தன்னைச் சார்ந்துள்ள மனைவியை மணவிலக்கம் செய்துவிட்டு, யாரைக் கொல்லப் போகிறோம் என்பதையும் பகிரங்கமாக அறிவித்து விட்டு கிளம்பிய அந்த நெஞ்சுறுதி ‘உணர்வு’ கும்பலைப் போன்ற மத வியாபாரிகளுக்கு தெரியாது, புரியவும் போவதில்லை.

தனி மனித அழித்தொழிப்பாக கிளம்பிய மாப்ளா எழுச்சி 1919 க்கு பிறகு வேறு வடிவத்தை எடுத்தது.

வரியங்குன்னத்து குன்ஹாமது ஹாஜி,

காலத்திங்ஙள் முகம்மது,

சித்திகோயா தங்ஙள் 

இம்பிச்சிக்கோயா தங்ஙள்

ஆகியோர் நிலப்பிரபுக்களிடம் இருந்தும், ஆங்கிலேயே அரசிலிருந்தும் விடுவிக்கப்பட்ட சுதந்திர நிலப்பரப்பை ஏற்படுத்தி, அதற்குத் தலைமை ஏற்று கட்டுப்பாடான நிர்வாகத்தை செய்யத் தொடங்கினர். வெள்ளை அரசிடம் இருந்து நாட்டை மீட்டு, மக்கள் அரசை கட்டி எழுப்ப மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனுடைய தொடர்ச்சியாகத் தான் கடையநல்லூர், மேலப்பாளையம் போன்ற முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இடங்களில் கேரள தங்கள் வழிபாட்டுமுறை தோன்றி, இன்றும் வழக்கில் இருந்து கொண்டிருக்கிறது. மாப்ளா எழுச்சியை நினைவு கூறும் வடிவம் மாறிய அந்த வழிபாட்டு முறையத் தான் இஸ்லாத்துக்கு விரோதமானது என்று கூறி ‘உணர்வு’ கும்பல் போன்ற இஸ்லாமிய மீட்டுருவாக்க குழுக்கள் துடைத்தழிக்க முயல்கின்றன.

Moplah_prisoners

இதன் பிறகு 1921 ல் வெள்ளை இராணுவம் மலபார் மாவட்ட வீதிகளில் இரத்த ஆற்றை ஓடவிட்டு மாப்ளா எழுச்சியை முடிவுக்கு கொண்டு வருகிறது. மாப்ளா எழுச்சியை புரட்சி எனும் அளவுக்கு உயர்த்த முடியாது என்றாலும், அது பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, ஆதிக்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஆயுதம் தாங்கிய விவசாயிகள் போராட்டம். இந்த எழுச்சி மிக்க வீர வரலாற்றைத் தான் ‘உணர்வு’ கும்பல் மதவாத சகதிக்குள் அழுத்தி வைக்க முனைந்திருக்கிறது. என்ன ஒற்றுமை பாருங்கள். மாப்ளா எழுச்சியை ஆர்.எஸ்.எஸ் கும்பலும் அது மதவாத கலகம் என்று மதச்சாயம் பூசி கேவலப்படுத்த முயற்சிக்கிறது, அதே வேலையைத் தான் ‘உணர்வு’ கும்பலும் செய்கிறது. அவர்கள் பார்ப்பன மதத்தின் டி.என்.டி.ஜே என்றால், இவர்கள் இஸ்லாமிய மதத்தின் ஆர்.எஸ்.எஸ். வரலாற்றை திருத்தி தங்கள் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை இருவரும் தங்கள் வழிமுறையாக வைத்திருக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியுமா? முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

வெறும் தனிநபர் அழித்தொழிப்பாக இருந்த மாப்ளா எழுச்சி, 1919க்கு பிறகு ஒரு மக்கள் அரசை அமைக்கும் முயற்சியாக உருமாறியது எப்படி எனும் கேள்வி முக்கியமானது. 1917 ல் நடந்த ரஷ்யப் புரட்சி உலகெங்கிலும் பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. பல நாடுகளில் மக்கள் நல அரசுகள் தோன்றின. கம்யூனிச இயக்கத்தை உலகெங்கிலும் பரவச் செய்தது. பலமாக இருந்த முதலாளித்துவ அரசுகள் கூட சீர்திருத்தங்களைச் செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. உலகெங்கிலும் நிகழ்ந்த இந்தப் போக்கு, நவம்பர் புரட்சியின் தாக்கம் மாப்ளா எழுச்சியிலும் இருந்ததா எனும் கேள்விக்கு ஆய்வாளர்கள் விடை காண முயல வேண்டும். என்றாலும் ‘உணர்வு’ கும்பல் மதவாதச் சகதியில் புரட்டியெடுத்து சித்தரிக்கும் மாப்ளா எழுச்சி அடிப்படையற்று கூறுப்படும் பொய் என்பது உறுதி. இதற்கு வரலாற்றின் பக்கங்களில் உறுதியான சான்று இருக்கிறது.

கான் பஹதூர் ஷேக் குட்டி,

இத்தூரு ஹாஜி,

அட்டன்

இஸ்மாயில்

கம்முண்ணி ஹாஜி

மம்மூ

குன்ஹம்மூ ஷேக்

கயிசேரி மொயிதீன்

காக்கப்ப வீரன் ஹாஜி

காரேத்து குஞ்ஞிகோயா

இந்தப் பட்டியல் மாப்ளா எழுச்சியில் தண்டிக்கப்பட்ட, கொல்லப்பட்ட முஸ்லீம்களின் பட்டியல். ‘உணர்வு’ கும்பலின் வரலாற்றுப் புரட்டு உண்மையானால் மேற்கண்ட முஸ்லீம்கள் ஏன் தண்டிக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள்? பதில் கூறுமா ‘உணர்வு’ கும்பல்?

அவர்கள் பதில் கூறவோ, பரிசீலிக்கவோ மாட்டார்கள். தேவநாதன்கள் கோவில் கருவறைக்குள் கலவி செய்ய வெட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? ஆனால், முஸ்லீம்கள் பரிசீலிக்க வேண்டும். அடிப்படையற்று பொய்களையும், வரலாற்று புரட்டல்களையும் எழுதிக் குவிப்பதன் நோக்கம் என்ன என்பதை தமிழக முஸ்லீம்கள் பரிசீலிக்க வேண்டும். பார்ப்பனிய பயங்கரவாதத்துக்கும், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கும் இடையே சிக்கி சிதைந்து கொண்டிருக்கும் மக்கள் இயல்பாகவே அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்று வருகிறார்கள். அதனூடாக கம்யூனிசம் அவர்களுக்குள் அறிமுகமாகிறது. இதைத் தடுத்து, அரசுக்கு எதிரான கோபங்களை மடைமாற்றி திருப்பி விடுவதைத் தவிர, – அமெரிக்கா பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தையான இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தைக் கைக் கொண்டிருக்கும் ‘உணர்வு’ கும்பல் போன்ற குழுக்களுக்கு – வேறென்ன நோக்கம் இருந்துவிட முடியும்?

பின்குறிப்பு 1: அவர்களின் தொடர் பத்தாவது பகுதியில் இஸ்ரேல் உருவாகிய வரலாறு குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. பதினோராவது பகுதியிலும் அது தொடர்ந்து இருப்பதால் அடுத்த பகுதியில் அதைக் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பின்குறிப்பு 2: ‘உணர்வு’ கும்பல் எழுதிவரும் அந்தத் தொடரின் பகுதிகள் கிடைப்பதில் பிரச்சனை இருந்து வருகிறது. என்னைத் தெரிந்த இஸ்லாமியர்கள் உணர்வின் பழைய இதழ்களை தர மறுக்கிறார்கள். உணர்வு இதழை இணையத்தில் வெளியிடும் தளத்திலோ அந்த தொடரின் சில பகுதிகள் இடம் பெறவில்லை. அதாவது உணர்வு இதழ் 30 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் வெளியிடுவதோ 20 அல்லது 25 பக்கங்களைத்தான். எனவே, பிற்பகுதியில் இடம்பெறும் பகுதிகளை இணையத்திலிருந்து பெற முடியவில்லை. மற்றும், முகநூலில் இஸ்லாத்துக்கு வா தொடரின் ஆசிரியர் எனும் அறிமுகத்துடன் ஒரு முகநூல் பக்கம் காணக் கிடைத்தது. உடனே அந்த முகநூல் பக்கத்தில் அவருக்கு தொடர் கிடைப்பதின் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு நீங்கள் அதை அனுப்பித்தர இயலுமா? எனக் கேட்டேன். பதில் இல்லை. மீண்டும் தரவிருப்பமில்லை என்றால் விருப்பமில்லை என்றாவது பதில் அனுப்புங்கள் என்று மீண்டும் ஒரு செய்தி அனுப்பினேன். அதற்கும் இன்றுவரை பதிலில்லை. என்னே இவர்களின் நேர்மை.

இத்தொடரின் முந்திய பகுதிகள்:

1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்

2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

3.  பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே

4. வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்கள்

5. எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்

6. துரோகி முகம்மதா மார்க்ஸா டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?

7.  ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும் அறியாமையும் தான்

8. உணர்வு கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?

9. மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

Advertisements

4 பதில்கள்

  1. great…very great…you are the real history and philosophy professor. I want to meet you one day….carry on and keep continue your exploration and debate.

  2. Many history is agianst hindus, be careful

  3. /***கி.பி. 630 ல் கேரளாவில் இஸ்லாம் பரவியது என்பது எந்த ஆதாரமும் இல்லாத கட்டுக்கதை என்பது ஏற்கனவே நிருவப்பட்டிருக்கிறது. **/

    முதல் பொய் …கேரளாவில் சேரமான் பெருமாள் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியவர் …அவர் கட்டிய பள்ளி கேரளாவில் உள்ளது ….அவர் 630 வாழ்ந்தவர்

    /**ஒருவர் கூட நடைமுறைப்படுத்தாத குரானின் கட்டளை ஒன்று இருக்கிறது என்றால் அது சொத்துகளை எப்படி பிரிக்க வேண்டும் என்பது குறித்த அல்லாவின் கட்டளை தான். ஏன் குரானின் கட்டளையை – குரானே எல்லாமும், அல்லாவின் கட்டளையே எக்காலத்துக்கும் பொருந்தும் என நீட்டி முழக்குபவர்களால் – பின்பற்ற முடியவில்லை? என்றால் குரான் குறிப்பிட்டிருக்கும் சொத்துடமை வடிவம் வேறு, நடப்பில் இருக்கும் சொத்துடமை வடிவம் வேறு.**/

    இரண்டாம் பொய் ….முஸ்லிம்கள் குரான் ஹதீஸ் படிதான் சொத்துக்களை இன்றளவும் பிரிகிறார்கள்….மூதேவி உனக்கு தெரிலான அப்டி நடக்கலைனு ஆகிடுமா இல்ல எவனாவது பெயர் தங்கி முஸ்லீம் அப்டி பொன்னாலான அது இல்லனு ஆகிடுமா…

    /**தெளிவாகச் சொன்னால் புராதன பொதுவுடமை சமுதாயம் என்பது சொத்துடமை இல்லாத சமுதாயம். அதாவது இருக்கும் எல்லாமும் எல்லாருக்கும் பொதுவானது. இது என்னுடையது, அது உன்னுடையது எனும் சிந்தனை முறையே அந்த காலகட்டத்தில் இல்லை. காரணம் சொத்து என்றால் என்னவென்றே அன்றைய மனிதனுக்கு தெரியாது. தெரிந்து கொள்ளும் தேவையும் அன்றைய சமூகத்தில் இல்லை. **/

    மூன்றாம் பொய் ….

    ஹா ஹா பத்திரிகை எழுதவே தகுதி இல்லை …நபிகள் குறித்து சிறுத்தும் தெரியாத நீ இஸ்லாம் குறித்தும் குரான் குறித்தும் விமர்சிக்கிறாய் …நபிகள் பல இடங்களில் உங்கள் வாரிசுகளை கை ஏந்துபவர்களாக விட்டு செல்லாதீர்கள் என்று சொல்லி இருகிறார்கள் அப்படி என்றல் கொஞ்சம் உங்க குடும்பத்துக்காக சேது வைங்க னு அர்த்தம் …

    /**குரானின் போதனைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை. எல்லாக் காலத்திலும் அதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள். அதன் பொருள் என்ன? ஆண்டான் அடிமைக் காலகட்டம் தான் நிலவில் இருக்க வேண்டும், அது மாறாமல் என்றென்றைக்கும் நிலைக்க வேண்டும் என்பது தானே. அப்படியென்றால் இஸ்லாம் அடிமை முறையை ஒழித்து விட்டது, நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்து விட்டது என்று கூறுவது அப்பட்டமான பொய் தானே.**/

    அட அடி முட்டாளே குரான் சட்டம் குறித்து பேசுகிறது நீ காலம் குறித்து பேசுகிறாய் …சட்டம் எல்லா காலத்துக்கும் பொருந்தும் என்றல் என்ன அர்த்தம் காலம் கண்டிப்பாக மாற கூடியது என்று அர்த்தம் இவன் சொல்றான் சட்டம் மாரதுனா அடிமையும் மாறலானு தான அர்த்தமாம்

    ithukku mela padicha naa muttal aaiduven thayavu senji nadunilai yalargal ingu vanthu padipathai kai vidungal

  4. அறிவாளி சித்திக் அல்லது சீதேவி சித்திக் அவர்களுக்கு,

    முதல் உண்மையாக நீங்கள் எழுதிய பொய்யினை மறுத்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நீங்கள் அறிவாளியாக இருந்தால் பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் வேண்டாம் கட்டாயம் ஒன்றுமில்லை.
    https://senkodi.wordpress.com/2016/03/29/unarvu-9/

    உங்களின் இரண்டாம் உண்மையை நிருவ வேண்டுமென்றால் குரான் கூறியபடி தன் சொத்தை சொந்தக் காரர்கள் அனைவருக்கும் பிரித்தளித்த தமிழக முஸ்லீம்களின் பட்டியலை வெளியிட வேண்டும். எங்கே எல்லோரும் ஒருமுறை கைதட்டுங்கள். நண்பர் சித்திக் அவர்கள் இல்லாத ஒரு பட்டியலை வெளியிடப் போகிறார்.

    உங்களின் மூன்றாம் உண்மைக்கும் அதன் பிறகுமான விளக்கங்களுக்கும் ஏற்கனவே இந்தக் கட்டுரையில் விளக்கங்கள் இருக்கின்றன. விளங்கவில்லை என்றால் சொல்லுங்கள் (உங்களுக்கு விளங்கிவிடும் என்று எதிர்பார்க்கவும் முடியாது தானே) மீண்டும் ஒரு முறை எடுத்துக் காட்டுகிறேன்.

    எனவே, நண்பர் சித்திக் மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை கொண்டுவந்து இங்கு எழுதாமல் சொந்த மூளையை பயன்படுத்தி பதில் எழுத அழைக்கப்படுகிறார்கள். (ஓடி விட மாட்டீர்கள் தானே)

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: