அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன?

தோழர் செங்கொடி,

 ஆண்டான் – அடிமை சமூகத்திற்கும் நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? அதைப்பற்றி விளக்குமாறு அன்புடன்‍ கேட்டுக்கொள்கிறேன்.

திரு பிரசன்னா கேள்வி பதில் பகுதியிலிருந்து

slavelandi

சமூக மாற்றம் என்பது அடிப்படையில் உற்பத்தி முறை மாறியதன் விளைவாக ஏற்படும் உற்பத்தி சக்திகளின் உறவு மாற்றத்தைக் குறிக்கும். ஆண்டான் அடிமை சமூகத்துக்கும், நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்றால் அதன் பொருள் அடிமை உற்பத்திமுறையில் இருந்த மக்களின் உறவுநிலைக்கும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் இருந்த மக்களின் உறவு நிலைக்கும் இடையிலான வித்தியாசம் என்று கொள்ளலாம்.

அடிமை முறை காலகட்டத்தில் கால்நடை வளர்பு, வளர்ச்சியடையாத கருவிகளைக் கொண்ட விவசாயம், கைவினைப் பொருட்களின் தொடக்கம் ஆகியவை தொழில்களாக இருந்தன. அடிமைகள் மனிதர்களாகவே மதிக்கப்படவில்லை. கால்நடைகளைப் போன்றே அடிமைகளும் ஆண்டைகளின் சொத்து. தனிப்பட்டு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆண்டைகளால் அடிமைகளைக் கொல்லவும் முடியும். தொடக்கத்தில் ஆண்டைகளும் உற்பத்தி வேலைகளில் ஈடுபட்டனர். இரும்பின் பயன்பாடு அறியப்பட்டதன் பிறகான அபரிமிதமான உற்பத்தி ஆண்டைகளை உற்பத்தி வேலைகளிலிருந்து விலக்கி வைத்தது. இதனால் உடலுழைப்பு மூளையுழைப்பு வித்தியாசம் தோன்றி உடலுழைப்பு செய்பவர்களை இழிவாக கருதும் போக்கு தொடங்கியது. உணவு மட்டுமே கொடுத்து அடிமைகள் கொடூரமாக சுரண்டப்பட்டதால் உற்பத்தியில் அவர்களுக்கிருந்த ஈடுபாடு குறைந்ததாலும், அடிமைகளின் எழுச்சியாலும் உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டது.

நிலப்பிரபுத்துவ அல்லது பண்ணையடிமை காலகட்டத்தில் மேம்பட்ட கருவிகலுடனான விவசாயமே பிரதான தொழில். நெசவு உள்ளிட்ட பிற தொழில்களும் இருந்தன. அடிமைகளோடு ஒப்பிடும் போது பண்ணையடிமைகள் ஓரளவு மேம்பட்டிருந்தார்கள். தன்க்கு பிரித்தளிக்கப்பட்ட நிலத்தில் உற்பத்தி செய்து நிலப்பிரபுக்கு விளைச்சலில் குறிப்பிட்ட பங்கை நிலப்பிரபுவுக்கு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நாளில் நிலப்பிரபுவின் நிலத்திலும் இலவசமாக வேலை செய்ய வேண்டும். பெருமளவு தேவை அடிப்படையிலான உற்பத்தியே செய்யப்பட்டது. சட்டரீதியிலான எல்லா சலுகைகளும் உயர் குடிகளுக்கு மட்டுமே உண்டு. பண்ணையடிமைகளுக்கு எழுத்துரிமை, இடம்பெயரும் உரிமை உள்ளிட்டவை சட்டப்படியே கிடையாது. பண்டமாற்றின் பரிணாம வளர்ச்சியால் உற்பத்தி பலமடங்கு அதிகரித்தது. இதனால் வணிகர் எனும் பிரிவின் செல்வாக்கு வளர்ந்தது. வரம்புக்குட்பட்ட சந்தையே இருந்ததால் உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாமல் வணிகர்களுக்கும் குறுநில மன்னர்கள், பாளையக்காரர்களுக்கும் இடையிலான முரண்பாடு முற்றியது. இந்த முரண்பாடு உற்பத்தியை பாதித்து தேக்கநிலையை உருவாக்கியது.

பொதுவாக உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களை கவனித்தால் குறிப்பான ஒரேமாதிரியான அம்சங்கள் மீண்டும்  மீண்டும் ஏற்படுவதைக் காணலாம். கருவிகளில் ஏற்படும் மாற்றம், உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க வைக்கிறது. அதிகரிக்கும் உற்பத்தியின் பலன் சீராக பகிர்ந்தளிக்கப்படாததால் உற்பத்தி உறவுகளில் முரண்பாடு தோன்றுகிறது. உற்பத்தி உறவுகளில் தோன்றும் முரண்பாடு வளர்ந்து உற்பத்தியில் தேக்கநிலையை ஏற்படுத்துகிறது. இந்த தேக்கநிலையினால் பாதிக்கப்படும் வர்க்கம் ஒரு பலாத்கார புரட்சியினால் உற்பத்தி முறையை மாற்றியமைப்பதன் மூலம் உற்பத்தி உறவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது தான் அடுத்த சமூகமாக அமைகிறது. சுருக்கமாக சொன்னால் கருவிகளில் ஏற்படும் மாற்றம் சமூக மாற்றத்தில் சென்று முடிவடைகிறது. மட்டுமல்லாது அடுத்த சமூகத்திற்கான கூறுகள் முந்திய சமூகத்திலேயே தோன்றி வளர்கின்றன.

இந்த வகையில் அடிமை சமூகத்தின் உற்பத்தி முறையில் ஏற்பட்ட தேக்க நிலையால் ஆண்டைக்கும் அடிமைக்குமான உறவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு முன்பை விட அதிக உரிமைகள் கொண்ட பண்ணையடிமை உற்பத்தி முறை தோன்றியது. இதே போல நிலப்பிரபுத்துவ சமூகத்தின் உற்பத்தி முறையில் ஏற்பட்ட தேக்க நிலையால் வணிகர்களுக்கும் உள்ளூர் நிர்வாகத்தை கையில் வைத்திருந்த நிலப்பிரபுக்களுக்கும் இடையிலான உறவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றியது. இந்த அடிப்படைகளை கைக் கொண்டால் குறிப்பிட்ட இரண்டு சமூகங்களுக்கிடையிலான வேறுபாடு என்ன என்பதை எளிதாக பார்த்து விடலாம்.

இதனடிப்படையில் ஆண்டான் அடிமை சமூகத்துக்கும், நிலப்பிரபுத்துவ சமூகத்துக்குமான வேறுபாடுகளை தொகுத்தால்,

கருவி மாற்றம் —- ஆண்டான் அடிமைக் காலத்தில் இரும்பின் பயன்பாடு, பண்ணையடிமை காலகட்டத்தில் பண்டமாற்றின் வளர்ச்சி.

இதனால் இரண்டு சமூகங்களிலும் உற்பத்தி கூடுகிறது.

நெருக்கடி —- ஆண்டான் அடிமை காலத்தில் அடிமைகளுக்கு உற்பத்தி அதிகரித்தும் உரிமைகள் எதுவும் கிடைக்காததால் ஆர்வம் குன்றுகிறது. ஆண்டைகளுக்கு ஆர்வம் குன்றிய அடிமைகளை நீர்வாகம் செய்ய அதிக கவனம் தேவைப்படுவதால் நிர்வாகச் செலவு அதிகரிக்கிறது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் வனிகர்களுக்கு உற்பத்தி அதிகரித்தும் வரம்புக்குட்பட்ட சந்தையை தாண்டிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. நிலப்பிரபுக்களுக்கோ வணிகர்களை தாண்டிச் செல்ல அனுமதித்தால் தங்களைவிட மேம்பட்டு விடுவார்கள் என்பதால் வணிகர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

இதனால் இரண்டு சமூகங்களிலும் முரண்பாடு முற்றி உற்பத்தி உறவில் மாற்றம் ஏற்படுகிறது.

உற்பத்தி உறவு மாற்றம் —- ஆண்டான் அடிமை காலத்தில் நிலத்தை பங்கிட்டு அடிமைகளுக்கு கொடுக்கப்பட்டது. நிலப்பிரபுக் காலகட்டத்தில், வரம்புக்குட்பட்ட சந்தை முறை அகற்றப்பட்டது.

முதல் சுரண்டல் வடிவமான அடிமை முறை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது, வேறு வேறு வடிவங்களில் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பண்னையடிமை முறையாக, முதலாளித்துவ காலகட்டத்தில் கூலி உழைப்பு முறையாக. ஓவ்வொரு மாற்றத்தின் போதும் முந்திய சமூகத்தைக் காட்டிலும் சீர்திருத்தங்கள் கிடைக்கின்றனவேயன்றி சம உரிமை இன்னும் கிடைக்கவில்லை.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

2 பதில்கள்

  1. வர்க்கமுள்ள – சுரண்டலை அடிப்படையாக வைத்துள்ள – பணத்தையே குறிக்கோளாக கொண்டுள்ள … ஒரு சமுதாயத்தில் ” ஆண்டான் – அடிமை என்கின்ற விஞ்ஞான விதி இருந்துதான் தீருமா …. ?

    உற்பத்தி செய்யக்கூடிய சக்திகள் உயராத — வளராத காலக்கட்டமான அன்றைய சமூக சூழலில் இந்த ஆண்டான் – அடிமை முறை தேவைப்பட்டது — மற்றும் அத்தியாவசியமாக இருந்தது என்பது தானே – உண்மை ….

    அன்றைய சமூகத்தில் ” உற்பத்திக் கருவிகளாகவும் — பேசும் இயந்திரங்களாகவும் — கருவிகளாகவும் ” இருந்த மக்களைத் தான் ” அடிமைகள் ” என்று முத்திரைக் குத்தி வைத்து இருந்தார்கள் ….

    நிலஉடைமையாளர்கள் — பிரபுக்கள் போன்றவர்கள் தங்களின் வளத்தை பெருக்கி கொள்ள — வளர்ச்சியடைய இந்த மக்கள் தேவைப்பட்டார்கள் — அவர்களை நிலப்பிரபுக்கள் மாக்களை போல நடத்தி அடிமைப்படுத்தி வைத்து இருந்தார்கள் என்பது தானே நிதர்சனம் — அவ்வாறு உழைக்கும் வர்க்கத்திடம் கட்டாயப்படுத்தி — அவர்களின் வாரிசுகளையும் எழுதி வாங்கியது அந்தக் காலம் ….

    அதுவே தற்போது பரிணாம வளர்ச்சியடைந்து ” இடைத்தரகர்கள் ” மூலம் ” கொத்தடிமைகளாக ” மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் நிலைமை — பொதுவுடைமை கொஞ்சம் தலை தூக்கியபோதும் — சிந்திக்க ஆரம்பித்தபோதும் — அம்மக்களின் கற்பும் –கண்ணீரும் — செந்நீரும் எப்படியெல்லாம் சிந்த வைக்கப்பட்டது — வைக்கப்படுகிறது என்பது இன்றுவரை மாறாத சோகம் தானே … அன்று தஞ்சை தரணியில் ” கீழ்வெண்மணியில் ” பண்ணை வேலை செய்பவர்களை அடிமைகளாக நடத்தியும் — அரைப்படி நெல்லை கூலி உயர்வாக கேட்ட மக்களை — வீட்டிற்குள் அடைத்து வைத்து குழந்தைகள் — பெண்கள் என்றும் பாராமல் உயிரோடு எரித்த சம்பவம் ஒன்று போதும் — ஆண்டான் – அடிமை என்பதற்கான விளக்கம் – —

    இன்றும் ” வர்க்கப் போராட்டம் என்பது —சாதிய போராட்டமாகவே தானே — இருக்கிறது …. விழித்தால் … விடியல் உண்டு என்பதுதான் அடிப்படை … அப்படித்தானே … ?

  2. super story

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: