தலை ஒட்டிய கடவுளும் தலை வெட்டும் வெறியர்களும்

vinayakar

ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். தொடக்கத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை, வெள்ளையனுக்கு எதிரான போராட்ட உணர்வை ஊட்டிய, மராட்டியத்தில் திலகர் தொடங்கிய பிள்ளையார் விழா இன்று கலவரங்களை உருவாக்குவதாய் மாறிவிட்டது என்று வருத்தப்பட்டார்.

கடந்த ஒன்றாம் தேதி (01/09/2016) தமிழ் இந்துவில் சில காவல்துறை அதிகாரிகளின் செவ்விகளை உள்ளடக்கி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. சுவாதி, சோனாலி, பிரான்சினா ஆகிய மூவரும் ஒருதலைக் காதலினால் கொல்லப்பட்டதாக சொல்வது தான் அதன் உள்ளடக்கம். சோனாலி, பிரான்சினா சரிதான். ஆனால், சுவாதி .. .. ?

மூன்று கொலைகளும் பொது இடங்களில் பலர் பார்த்திருக்க நடந்திருக்கின்றன என்பதற்கு வெளியே பெரிதாக ஒன்றுமைகள் எதுவுமில்லை. சுவாதி கொலையில் காவல்துறை விசாரணைக்கு எதிராக பல்வேறு ஐயங்கள் கிளப்பப் பட்டிருக்கின்றன. அவை எவற்றுக்கும் காவல் துறையிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. தவிரவும், அந்தக் கொலையை ராம்குமார் செய்திருப்பதற்கான சாத்தியங்களும் குறைவாகவே உள்ளன. மாறாக, இந்தக் கொலையை இந்து முஸ்லீம் விரோத மனப்பான்மையை வளர்ப்பதற்கு, கலவரம் நடத்துவதற்கு ஒரு கருவியைப் போல பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது என்பது தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் மூலம் தெளிவாகிறது.

இப்படியான நிலையில் மூன்று கொலைகளையும் ஒரே தன்மையில் நோக்கி, அதிலும் காவல்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் கருத்தைக் கேட்டு வெளியிட்டிருப்பது என்பது தமிழ் இந்து செய்திருக்கும் அயோக்கியத்தனம்.. சுவாதி கொலையைப் பொருத்தவரை தொடக்கத்திலிருந்து காவல்துறை இது ஒருதலைக் காதலால் நடந்த கொலை என திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறது. அந்த திசையில் மட்டுமே விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது. ராம்குமாரை கொலையாளியாக நிருவி விட வேண்டும் என்று அதற்கான சான்றுகளை முனைந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் வெகுமக்கள் வெளியில் திலீபன் மகேந்திரன், தமிழச்சி போன்றோர் தொடர் முயற்சிகளின் மூலம் உண்மைகளை கேள்விகள் வாயிலாக வெளிக் கொண்டு வந்திருக்கின்றனர். குறிப்பாக, ராம்குமார் முகநூல் பக்கத்தில் நட்பு வட்டத்திலோ, உரையாடல்களிலோ சுவாதி எனும் பெயரே இடம்பெறவில்லை என்பது, சுவாதியின் தோழி ஒருவரின் பேச்சு என்பனவற்றை சொல்லலாம். இன்னும் காவல்துறை விசாரணையில் இருக்கும் முரண்பாடுகள் குளறுபடிகள் என மக்களிடம் பலத்த ஐயம் இருக்கிறது. இவை எவற்றையும் துளியும் மதிக்காத காவல்துறை ஒருதலைக் காதல் என்று பொருளற்று மந்திரம் போல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் இதன் பின்னிருக்கும் பார்ப்பனியச் சதியை மூடி மறைக்க எல்லாவற்றையும் செய்ய காவல்துறை உறுதியாக இருக்கிறது என்பது வெளிப்படையாகிறது. இதற்கு தமிழ் இந்து களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

அதாவது, தன்னுடைய மேலாண்மைக்காக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி, சிறுபான்மையினருக்கு எதிராக ஏவி விடுவது, அதை மறைக்க ஒருதலைக் காதல் கொலைகளுக்கு எதிராக பேசுவது போல், பொதுநலனுக்காக பேசுவது போல் காட்டிக் கொள்வது. இந்த வடிவம் தான் அன்றிலிருந்து இன்றுவரை செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று பிள்ளையார் விழா நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதையும் தொடங்கும் போது பிள்ளையார் சுழி இட வேண்டும் எனும் வழக்கு இங்கு திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது போன்ற அயோக்கியத்தனங்களுக்கு பிள்ளையார் சுழி இட்டதே இந்த பிள்லையார் விழா தான்.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிள்ளையார் என்றொரு கடவுளே தமிழர்களுக்கு அறிமுகமாகி இருக்கவில்லை. பார்ப்பனர்களின் உள்வாங்கும் சூழ்ச்சியால் தமிழ்கடவுள் முருகன் பார்வதி மகன் கந்தனாகி, கணபதி எனும் பிள்ளையார் முருகனின் அண்ணனாக அறிமுகமாகிறார். மராத்தியத்துக்கு வெளியே பிள்ளையார் ஒரு ‘சைடு ஆக்டர்’ போல ஒரு துணைக் கடவுள் தான். மராத்தியத்தில் மட்டும் அதிலும் குறிப்பாக பேஷ்வா மன்னர் பரம்பரையினருக்கு மட்டுமே பிள்ளையார் மெயின் ஹீரோ. அதாவது அவருக்கு மேல் ஹீரோவே இல்லாத வி நாயகர். இவர்கள் மட்டுமே பிள்ளையார் விழாவை அரண்மனை விழாவாக கொண்டாடிக் கொண்டிருந்தனர். அதுவும் வெள்ளையர்கள் பேஷ்வாக்களின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டதுடன் முடிந்து போயிற்று. இதற்கு அரை நூற்றாண்டுக்குப் பிறகு மராட்டியத்தில் ஜோதிராவ் பூலே பகுத்தறிவு இயக்கத்தைத் தொடங்குகிறார். சத்ய சோதக் எனும் அந்த இயக்கம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுகிறது. பார்ப்பனர்களின் பண்டிகைகளையும், அவர்களின் தீண்டாமை கொடுமைகளையும் நோக்கி கூர்மையான கேள்விகளை எழுப்புகிறது. மறுபக்கம் மூடநம்பிகளின் உருவகமாக தங்களையே காயப்படுத்திக் கொண்டு அதனை தியாகம் எனும் பெயரால் வழிமொழியும் இஸ்லாமியர்களின் முகர்ரம் பண்டிகை. இவை இரண்டுக்கும் எதிராகத் தான் திலகர் பிள்ளையார் விழாவை உருவாக்கினார். பேஷ்வாகளின் அரண்மனையில் கவிதை எழுதியும் பரிசு வழங்கியும் சொரிந்து விட்டுக் கொண்டிருந்த இடையில் நின்று போயிருந்த பிள்ளையார் விழாவை வீதிக்கு இழுத்து வருகிறார் திலகர். சத்ய சோதக் கிற்கு எதிராக பத்து நாட்கள் பஜனை பாடவைத்து முகர்ரமுக்கு எதிராக அதனை வீதி உலாவாக இழுத்து வரவைக்கும் வடிவத்தில் உருமாற்றுகிறார். ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என அனைவரையும் இணைத்து முழுமுதற் கடவுளாக பிள்ளையாரை முன்வைக்கிறார். கூடவே வெள்ளை அரசு மத விழாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்பதால் பேச்சில் இடையிடையே மானே தேனே பொன்மானே போடுவது போல் சுதந்திரக் கருத்துகளும் சேர்த்து விடுவதுண்டு. இதைத்தான் இந்து முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்கியது என்றும் வெள்ளையனுக்கு எதிராக போராட்ட உணர்வை ஊட்டியது என்றும் சரடு விட்டு வெறியில்லாத வெறும் பக்தர்களைக் கூட நம்ப வைத்திருக்கிறார்கள்.

கோவிலில் உள்ளே நுழைந்து சாமியை பார்த்தாலே தீட்டாகி விடும், கோவில் அசுத்தமாகி விடும் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் தொட்டு வடம் இழுத்தால் சாமி நகராது என்றும், சேரிகளுக்குள் சாமியா நினைத்துப் பார்க்கக் கூட முடியாது என்றும் ஆண்டு முழுவதும் ஒதுக்கினாலும் இந்த பத்து நாட்களில் மட்டும் மூத்திரச் சந்தில் கூட அமர்ந்து விடுகிறார் பிள்ளையார். திருவிழாக்களின் சேரிப்பக்கம் கடவுளைக் கொண்டு போகக் கூடாது என்பவர்கள், இதில் மட்டும் இஸ்லாமியர்கள் வாழும் இடத்தின் வழியாகத் தான் கொண்டு செல்வோம் என அடம்பிடிப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் அதிகாரத்துக்கும் கலவரங்களுக்கும் இடையேயான தொடர்பு என்பது பீயையும் நாற்றத்தையும் போல பிரிக்க முடியாதது. அதில் பிள்ளையார் விழாக்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை பிள்ளையார் விழாவில் பொங்கி வழிவது இஸ்லாமிய எதிர்ப்பு தான். தொடக்ககால பிள்ளையார் விழாவில் பஜனையாக பாடப்பட்ட புபேந்திர யாதவின் பாடல்களே அதைக் காட்டும்.

ஏன் விலக்கி வைத்தாய்
இந்து மதத்தை?
மறந்தாயோ கண்பதியை, சிவாவை, மாருதியை?
என்ன பலன் உன் வழிபாட்டில்?
என்ன வரம் கொடுத்தார் அந்த அல்லா உனக்கு?
ஏன் மாறினாய் முஸ்லீமாய்?
அந்நியன் மதத்துடன் ஏனிந்த ஸ்நேகிதம்?
உன் மதத்தை மறக்காதே
மனிதா நீ சரிந்துவிழாதே
கோமாதா நம் தெய்வம்
அவளை என்றும் மறக்காதே

சுவாதி கொலையில் இருக்கும் பார்ப்பன சதித்தனங்களை புரிந்து கொள்ள முயலும் பலர், பிள்ளையார் விழா என்றதும் அதை பக்தியாக பார்க்கிறார்கள். பிள்ளையார் விழாவுக்கு மட்டுமல்ல அனைத்து பார்ப்பனிய விழாக்களுக்குமே வக்கிரம் பிடித்த, அசிங்கமான, துரோகமான வெறித்தன வரலாறு மறைந்து கிடக்கிறது. மிகத்துல்லியமாக இவைகளை இனம் கண்டு பண்டிகைகளின் பின்னே ஒழிந்து வரும் ஆர்.எஸ்.எஸ் வெறியர்களை அடித்து விரட்டுவது மட்டுமே உழைக்கும் மக்களின் நலனைக் கோரும் ஒரே செயல்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

5 பதில்கள்

  1. வரிகளுக்கு இடையில் இன்னும் கொஞ்சம் இடைவெளி இருந்தால் நல்லது.

  2. அப்போ நீங்கள் சுவாதி கொலையை நியாய படுத்துகிண்றீர்களா ?
    ராம்குமார் குற்றவாளி அல்ல என்று வைத்துக்கொள்வோம் . ஆனால் சுவாதியை கொலை செய்தவன் ஆண் தான்
    அவனுக்கு சுவாதியை கொலை செய்ய நோக்கம் என்ன ?
    ஒரு பக்க காதலாக இருக்கலாம்
    காதல் முறிவாக இருக்கலாம்
    எதுவாக இருந்தாலும் கொலை கொலைதான்
    அது யாராக இருந்தாலும் சரி
    .
    சுவாதியின் கொலைக்கு காரணம் ஆணாதிக்க திமிர்தான்

  3. ஐயா சுவர்ணஜீவ வி.

    இங்கு எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சனை அது அல்ல. பார்ப்பனிய சதியை மறைப்பதற்காக ஒருதலைக் காதல் என்று திசை திருப்பப்படுகிறதே அது தான் பிரச்சனை. அன்றிலிருந்து இன்று வரை இது ஒரு உத்தியாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதே அது தான் பிரச்சனை. இதில் உங்கள் கருத்து என்ன அதைக் கூறுங்கள். சுவாதி கொலையை இங்கு யாரும் நியாயப்படுத்தவும் இல்லை, கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை.

  4. உழைக்கும் மக்களின் நலனைக் கோரும் ஒரே செயல்……………..யார்ர் உழைக்கும் மக்கள்…….உண்டியல் குலுக்குபவர்கள் எல்லாம் உழைக்கும் மக்களா….????

  5. சிங்காரம்,

    உண்டி குலுக்குபவர்கள் எல்லாம் உழைக்கும் மக்கள் அல்ல. வீட்டில் உட்கார்ந்து தெண்டச்சோறு உண்பவர்களே உழைக்கும் மக்கள்.

    மேலும் வேண்டுமெனில், ஜெயா-சசி மற்றும் மோடி மஸ்தான் போன்ற மக்களின் வயிற்றிலடித்து கொழுத்துத் திரியும் வக்கிரம் பிடித்த மிருகங்களையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    பதிவுக்குச் சம்பந்தமாக உங்கள் எதிர்வினையைத் தொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஓ, அதுதான் உங்களால் முடியாதோ? மன்னித்தருளுங்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: