1991க்கு பிறகு காவிரி நீரை முன்வைத்து தற்போது மீண்டும் கும்பல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 60 பேரூந்துகள் வரை எரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். உடமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் காவிரி ஆற்று நீர் பாங்கீட்டு பிரச்சனையை முன்வைத்து நடக்கிறது என்பதைத் தவிர இவைகளுக்கும் காவிரி ஆற்று நீர் பங்கீட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
நீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கனத்த இதயத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட காவிரி நீர் தமிழகத்தை நோக்கி துள்ளலுடன் வந்து சேர்ந்தது. தண்ணீர் கேட்டுப் புலம்பாதீர்கள் என்று ஒரு பைத்தியம் உளறியதைப் பொருட்படுத்தாமல் விவசாயிகளும் கொஞ்சம் ஆறுதல் அடைந்திருந்தார்கள். வீட்டுக் கதவைத் திறந்து விளையாடுவதற்காக தெருவுக்குச் செல்லும் ஒரு மழலையின் மகிழ்வுடன் நடந்திருக்க வேண்டிய இது, கடந்த சில பத்தாண்டுகளாக கருவி வைத்து செய்யப்படும் பிரசவம் போல் இரு பக்கத்தையும் பதைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
கன்னட ஊடகங்களைப் பொருத்தவரை இராமேஸ்வரத்தில் கன்னடர்கள் தாக்கப்பட்டதின் எதிர்வினை தான் கர்நாடகாவில் நடக்கும் வன்முறை என திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கின்றன. குஜராத்தில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கு கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு தான் காரணம் என் கூறப்பட்டதைப் போல் ஆபத்தானதாகவும், அறுவறுக்கத் தக்கதாகவும் கன்னட ஊடகங்களின் இந்தப் பிரச்சாரம் அமைந்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் ம் அதன் அரசியல் அமைப்பான பாஜக வும் அதிகாரத்தைப் பெறுவதற்கு கலவரம் நடத்தி மக்களை, உடமைகளை அழிப்பதையே வழிமுறையாக கொண்டிருக்கிறது. இப்போதும் கன்னடத்தில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. பார்ப்பன மயமாக்கப்பட்ட அரசு எந்திரம், சிறிதும், பெரிதுமாக துணை போகும் ஓட்டுக் கட்சிகள். பின்னொட்டுகளாக பிராந்திய தேசிய வெறிக் கட்சிகள் ஆகியவைகளைக் கொண்டு திட்டமிட்டு, தன்னை மறைத்துக் கொண்டு, இரத்தத்தை நிலத்தில் பாயவிட்டு தன் அதிகாரத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
சரியான நேரத்தில் தலையிட்டு, பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட பாசிச மோடி இதில் நான் தலையிட மாட்டேன் என்கிறார். பிரச்சனை ஏற்பட்டுவிடாமலும், உரிமையை விட்டுக் கொடுக்காமலும் நிலைமையைக் கையாள வேண்டிய இடத்திலிருக்கும் ஆணவ லேடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். நிலமையை கட்டுக்குள் வைக்க வேண்டிய காங்கிரஸ் சித்தராமையா தனக்கு எதிராகப் போகிறது எனத் தெரிந்தும் ஒடுக்க மறுத்து மென்மையாக இருக்கிறார். இவை எல்லாவற்றிலும் ஊறிக் கிடப்பது கணக்குகள்.
மக்களிடமும் ஒரு கணக்கு இருக்கிறது. எல்லாரும் திருடர்கள் தாம் என தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கும் மக்கள், இற்றுப் போன இந்த அரசு எனும் கட்டமைப்பு தான் காவிரிப் பிரச்சனை உட்பட அனைத்தையும் தீர்க்காமல் வைத்திருக்கிறது எனும் விடையை போடும் போது, ஏனைய கணக்குகள் துடைத்து அழிக்கப்படும்.
மின்னூலாக(PDF) தரவிறக்க
மோடியை பாசிஸ்ட் என்பது மிகையாகத் தெரிகிறது. அவர் ஒரு அடியாள். நுகர்வு விரும்பி, சங்பரிவாரம் இயக்குகின்ற பொம்மை. சங்பரிவாரத்திற்கும் கார்ப்ரேட்டுகளுக்குமான அடியாள். மோடி என்ற பிம்பத்தை முந்தள்ளி சங்பரிவாரமும் கார்பரேட்டுகளும் இந்தியாவை நாசம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் எந்த ஒரு பிரச்சினைக்கும் மோடி என்ற பிரதமர் வாய் திறப்பதில்லை. மோடி சங்பரிவாரத்திடமிருந்து தகவல் வரும்போதுதான் பேச ஆரம்பிக்கிறார். மோடி ஒரு முட்டாள்.
மோடியை பற்றிய தங்களின் கருத்து ஏற்கத்தக்கது — ஆனால் // உரிமையை விட்டுக் கொடுக்காமலும் நிலைமையைக் கையாள வேண்டிய இடத்திலிருக்கும் ஆணவ லேடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.// என்று ….
ஜெயாவைப் பற்றிய தங்களின் இந்தகுறிப்பு பற்றி யோசிக்க வேண்டியது தாங்கள் தான் — அவரது தொடர் சட்டப்போராட்டம் இல்லையென்றால் இந்த அளவு தண்ணீர் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பது அனைவரும் அறிந்ததே …
2007 – ம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீடு குறித்து அதிமுக்கிய தீர்ப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தால் கூறப்பட்ட போது — தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர் கலைஞர் அவர்கள் — அதுமட்டுமின்றி மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முக்கியமான இலாக்காக்களை பெற்று மந்திரி சபையிலும் கோலோச்சிய கருணாநிதி — அந்த தீர்ப்பை ” அரசிதழில் ” வெளியிடவும் — மேலாண்மை வாரியம் அமைக்கவும் எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு — தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பது — வேடிக்கையா … வேதனையா… ? —
சும்மா அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்றுமட்டும் கூறி மக்களை ஏமாற்ற முயலும் தி.மு.க. உள்ளிட்ட மற்ற ஓட்டுபொருக்கி காட்சிகளை பற்றி ஒரு விளக்கம் கொடுத்தும் —- காவிரி நதி நீருக்காக – உண்மையில் பாடுபட்டவர்கள் யார் – யார் என்றும் — அதன் குறுக்கே பல அணைகள் கட்டி நீரை திருட கர்னாடக அரசுக்கு ஒப்புக் கொடுத்தவர்கள் யார் என்றும் ஒரு இடுக்கை போட்டால் நீங்களும் — தோழர்தான் …. !!!
நண்பர் ஃபெரோஸ்,
உங்களுக்கான பதிலைக் காண இங்கே சொடுக்கவும்