500, 1000 செல்லாது: மோடியை கழுவி ஊற்றிய மக்கள்

500-2000-2

நேற்று (08/11/2016) மாலையில் திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியால் அறிவிக்கப்பட்டது. இரவு 12 மணிக்குள் மாற்றாவிட்டால் வைத்திருக்கும் பணம் ஒன்றுமில்லாமல் காற்றில் கரைந்து விடுமோ எனும் பரிதவிப்பில் மக்கள் அலைந்ததை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. தமிழில் இதுவரை செவியுற்றிருக்காத சொற்களை உருவாக்கி மக்கள் மோடியை அர்ச்சித்துக் கொண்டிருந்தார்கள்.

மக்களே! பதட்டம் வேண்டாம். ஓரிரு நாட்களில் வங்கிகள் இயங்க தொடங்கியதும் உங்கள் கையிலிருக்கும் பழைய 500, 1000 ரூபாய் தாள்களை வங்கியில் கொடுத்து அதற்கு ஈடான புதிய 500, 2000 ரூபாய்களை பெற்றுக் கொள்ளலாம். டிசம்பர் 31 வரை இவ்வாறு நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். வங்கிகள் இயங்கத் தொடங்கும் வரை தொடர் வண்டி நிலையம் போன்ற மத்திய அரசு நிலையங்களில் 500, 1000 களை மாற்றிக் கொள்ளலாம்.

120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் இந்த நாட்டில், பெரும்பான்மையான மக்கள் அன்றாடங் காய்ச்சிகளாக வாழும் இந்த நாட்டில் ஒரு சில மணி நேர அவகாசத்தில் பெரு மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவித்தது முட்டாள்தனம், அயோக்கியத்தனம், அறுவெறுக்கத்தக்க திமிர்த்தனம். என்னடா பெரிய பொடலங்கா பொருளாதாரம்!

மக்கள் அடைந்த பதட்டத்தை சொற்களால் சொல்லிவிட முடியாது. 12 மணிவரை செல்லும் என்று சொன்னாலும் யாரும் வாங்கிக் கொள்ளத் தயாரில்லை. 12 மணிக்குப் பிறகு என்ன செய்வது எனும் பெருங்கவலை. இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் ஒருவருக்கு அது வெறும் பண மதிப்பு மட்டுமல்ல, அன்றைய உழைப்பின் வலி, நாளைய உழைப்புக்கான உணவு. அதில் கேள்விக்குறியை போட எந்தக் கொம்பனுக்கு அதிகாரம் இருக்கிறது இங்கு? ரொட்டி இல்லையென்றால் என்ன? மக்கள் கோக் சாப்பிடட்டும் என்றாளாம் பிரெஞ்சு தேசத்து அரசி. அதற்கு ஈடான கொழுப்பெடுத்து வடியும் திமிர்த்தனம் இது.

இந்த அவசர நடவடிக்கைக்கு என்ன காரணம்? என்ன நோக்கத்தில் இப்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்து இன்னும் பருண்மையாக அறிந்து கொள்ளவில்லை. தெரியவில்லை. என்றாலும், இவர்கள் எந்த ஆணியை பிடுங்கினாலும் அது தேவையில்லாத ஆணியாகத் தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. இப்போதைக்கு கருப்புப் பணத்தை ஒழிக்க என்று காரணம் சொல்லியிருக்கிறார் மோடி.

சுவிஸ் வங்கிகளில் கொட்டிக் கிடக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் போடுவோம் என்றார்கள், இதுவரை கிழித்தது என்ன? வங்கிகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு ஏப்பம் விட்டவர்களின் பெயர்களைக் கூட அறிவிக்கத் துப்பில்லாத அரசு, கருப்புப்பணத்தை ஒழிக்கப் போகிறோம், சிரமத்தை பொருத்துக் கொள்ளுங்கள் என்கிறது. கேப்பையில் நெய் வழிகிறது என்று இதைத்தான் சொல்வார்களோ.

கருப்பு பணம் யாரிடம் இருக்கிறது? பெரு முதலாளிகளின் வணிக நடவடிக்கைகள் அனைத்தும் கருப்புப் பணத்தாலேயே இயங்குகின்றன. ஆனால் அவை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக ஒருபோதும் இருப்பதில்லை. அவர்களிடம் குவிந்திருக்கும் கருப்புப் பணம் 500,1000 ரூபாய் நோட்டுகளாக இருக்கும் என நம்பினால், அதை விட பைத்தியக்காரத்தனம் வேறு இருக்க முடியாது. அவை அசையும் அசையாச் சொத்துகளாக, வெளிநாட்டு உள்நாட்டு முதலீடுகளாக, சுவிஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் இருப்பாக இருக்கிறது. நாட்டில் இருக்கும் 90 விழுக்காடு கருப்புப் பணம் இந்த வடிவங்களில் தான் இருக்கிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருப்பது இந்தக் கருப்புப் பணத்தை ஏதாவது செய்து விடுமா?

90 விழுக்காடு கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்களின் விளம்பரத் தூதுவராகத்தான் மோடி இருந்து கொண்டிருக்கிறார். குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க மாட்டோம் என்று கூறித்தான் ஆதார் அட்டை எடுக்க சட்டத்துக்கு அப்பாற்பட்டு நிர்ப்பந்தித்தார்கள். ஆனால் ஜியோ சிம் வாங்க கைரேகை வைத்ததும், நாம் சொன்ன ஆதார் அட்டை இலக்கம் சரியா தவறா என்று புகைப்படம் உள்ளிட்டு அனைத்து தகவல்களும் அவர்களின் கணிணியில் வந்து விழுகின்றதே. ஆதார் விபரங்களை ரிலையன்ஸுக்கு கொடுத்தது யார்? இப்போது இந்த 500, 1000 செல்லாது என்று அறிவித்திருப்பது முன்னமே அவர்களுக்கு தெரிந்திருக்காது என்று எந்த முட்டாளாவது நம்ப முடியுமா?

500, 1000 செல்லாது என அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பு மக்களைத் தான் கடுமையாக பாதித்திருக்கிறது. நாட்டில் முறைசார் தொழில், முறைசாரா தொழில் என தொழில் துறை இரண்டாக இருக்கிறது. முறைசார் தொழில் என்பது பெரிய நிறுவனங்கள் தொடங்கி அனைத்து கார்ப்பரேட் வணிக குழுமங்களும் அடங்கும். இவர்கள் யாரும் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளுக்காக பணத்தை ரொக்கமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. முறைசாரா தொழில் என்பதில் காய்கறிக் கடை தொடங்கி சிறு குறு வணிகர்கள் ஊடாக மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை சிக்கலின்றி செய்ய உதவும் அனைத்து வணிக நடவடிக்கைகளும் அடங்கும். இவர்கள் தங்கள் தினசரி நடவடிக்கைகளை, பணத்தை தங்கள் கையில் ரொக்கமாக வைத்திருத்தாலன்றி எதையும் நடத்த இயலாது. காய்கறி விற்கும் ஒரு வியாபாரி குறைந்தபட்சம் 25000 ரூபாய் கையில் வைத்திருந்தால் தான் காய்கறி வாங்கி அதை பிறருக்கும், மக்களுக்கும் வினியோகிக்க முடியும். அவர்கள் அதை 500, 1000 மாக இல்லாமல் 50, 100ராக வைத்திருப்பார்களா? இந்த செல்லாது அறிவிப்பால் காலையில் அவர்களின் கொள்முதலும், வினியோகமும் எப்படி நடக்கும்? கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங்குவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், சிறு குறு நிறுவனங்கள் அடுத்து வரும் இரண்டு மூன்று நாட்களுக்கு இயங்க முடியாமல் போகும். இது மக்களைத் தான் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக 50, 100ராக பணம் கையிருப்பில் வைத்திராத, அரிசி, காய்கறிகளை வீட்டில் வாங்கி சேமிக்காமல் அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் மக்களை பட்டினிக்குள் தள்ளும்.

ஓரிரு நாட்கள் கடந்து வங்கிகள் இயங்கத் தொடங்கியதும் மக்கள் அனைவரும் தங்கள் கைவசமுள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் சென்று குவிவார்கள். ஒரு நாளோ, இரண்டு நாளோ தங்கள் வேலைகளை விட்டு விட்டு வங்கிகளின் நீண்ட வரிசையில் சென்று காத்திருக்க வேண்டும். மக்கள் ஓரிரு நாட்கள் வேலையை அதன் ஊதியத்தை இழந்திருப்பது தான் மோடியின் இந்த செல்லாது அறிவிப்பினால் நேர்ந்த அவலம்.

இந்த செல்லாது நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிக்குமா? நிச்சயம் ஒழிக்காது. 90 விழுக்காடு கருப்புப் பணம் 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை இந்த அறிவிப்பு நெருங்கக் கூட முடியாது. மீதமிருக்கும் 10 விழுக்காடு கருப்புப் பணத்தை மட்டுமே இந்த அறிவிப்பு பாதிக்கும். அதுவும் முழுமையாக இருக்காது.

வங்கிகள், நிதி நிறுவனங்களின் ஊழலுக்கே இது வழிவகுக்கும். பத்து லட்சம் கருப்புப் பணம் வைத்திருக்கும் ஒருவர் வங்கி அதிகாரிகளிடம் பேரம் பேசி ஒன்பது லட்சம் வெள்ளையாக வாங்கிக் கொள்வார். அந்த ஒரு லட்சம் வங்கி அதிகாரிக்கு. பகரமாக அந்த பத்து லட்சத்தை, 1000, 2000 மாக மாற்ற வரும் மக்களின் கணக்கில் சிறிது சிறிதாக அதிகரித்துக் காட்டி கணக்கில் நேர் செய்து விடுவார்.

ஆக, இந்த முட்டாள் தனமான அறிவிப்பின் ஒட்டு மொத்த பலன் என்ன? 90 விழுக்காடு கருப்புப் பணத்தை ஒன்றும் செய்ய முடியாது. 10 விழுக்காடு கருப்புப் பணம் மக்களின் கணக்கில் வெள்ளையாக்கப்படும். அதாவது, 10 விழுக்காடு கருப்புப் பணத்தை மக்கள் இரண்டு மூன்று நாட்கள் பட்டினி கிடந்து, தங்கள் வேலை வருமானத்தை இழந்து, தங்கள் சொந்தக் கணக்கில் வெள்ளையாக மாற்றிக் கொடுக்கிறார்கள். இதற்குப் பெயர் தான் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையா?

இதில் முதன்மையான இன்னொரு அம்சமும் இருக்கிறது. மக்கள் தங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றும் போது ஆதார் உள்ளிட்ட தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையின் உள்ளார்ந்த கருத்து இதில் தான் புதைந்து கிடக்கிறது. கருப்புப் பணத்தில் உருவாகி, கருப்புப் பணத்தில் குளித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு குண்டி கழுவிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் மக்களைப் பார்த்துச் சொல்கிறது உங்களிடம் இருக்கும் பணம் கருப்புப் பணம் இல்லை என்பதை நிரூபித்துக் கொள்ளுங்கள் என்று. இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?

ஆர்.எஸ்.எஸ், காவி நாய்களே! மோடியின் துணிச்சலான நடவடிக்கை என்று கூறிக் கொண்டு மக்கள் முன்னே சென்று விடாதீர்கள். அவர்கள் தங்கள் பிய்ந்து போன செருப்பால் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

ஒரு பதில்

  1. முன்பு —- ஓட்டு போட்ட மக்களுக்கு – கோட்டு போட்டு காட்டினார் , இப்போது நோட்டைக் காட்டி தெருவில் அல்லாட விட்டிருக்கிறார் — இங்கே மக்கள் ஒரு கையாலாகாத அரசாங்க நோட்டுகளை வைத்துக்கொண்டே — ஆளாய் பறந்துக்கொண்டு அலைகிறார்கள் — அய்யா.. புல்லெட் ரயிலில் அமர்ந்துகொண்டு — புளங்காகிதம் அடைகிறார் … !

    இந்த கபோதிகள் செலவின புழக்கத்திற்கு — அவுங்க அடித்துக் கொடுத்த நோட்டையே – செல்லாது என்று கூறி சந்தி சிரிக்க — தலைகுனிந்து சப்பைக்கட்டு கட்டிக்க கொண்டு திரிகிறார்கள் — மக்களை – மாக்களாக நினைத்து — எதை செய்தலும் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்கிற ” எதேச்சதிகார போக்கை ” தற்போது கையில் எடுத்து — உண்ண உணவுக்கும் — மற்ற இன்றிமையாத செலவுக்கும் — கையில் உள்ள காசை பயன் படுத்த முடியாமல் செய்த — மதவாத — கார்போரேட்டுகளின் ஜாலராக்களை என்னவென்று கூறுவது …. ?

    குறைந்த இடத்தில் அதிக தொகையை பதுக்க ஒரு உன்னத வழியை காட்டியவர்களை பாராட்டுகிற கபோதிகளை எதில் சேர்ப்பது — அரசியல் கட்சிகள் — தலைவர்கள் — மொடாமுழிங்கிகள் — சுரண்டல் முதலாளிகள் — வேஷமிட்டு சொகுசு வாழ்க்கை நடத்தும் பச்சோந்தி நடிக சிகாமணிகள் — மூலைக்கு – மூலை பாராட்டி புகழாரம் சூட்டுகிறார்கள் — ஏன்… ஏன் … ஏன் … ? பாராட்டி அறிக்கைவிடவில்லை என்றால் ” கறுப்புப்பணம் வைத்து இருப்பவன் ” என்று கூறி விடுவார்களோ என்கிற பயத்தினால் தான் — ஏனென்றால் இவனுங்களுக்கு ” மடியில் கனம் இருக்கிறது — வழியில் பயப்படுகிறான்கள் ” — மனதார பாராட்டும் ஒருவனும் இல்லை — ஒப்புக்கு உதட்டளவில் பாராட்டும் கயவர்கள் இவர்கள் ….

    தனியொரு மனிதனுக்கு – உணவில்லையெனில் – இந்த ஜகத்தினை அழித்திடுவோம் — என்றொருவன் அன்று பாடி வைத்தான் — இன்று ஓட்டு மொத்த இந்நாட்டு மக்களுமே — கையில் காசிருந்தும் – உணவுக்கு வழியில்லாமல் திண்டாட விட்டவர்களை — என்ன செய்வது …

    குண்டி எரியுது — குலைகாயுது — மக்களுக்கு – ! சாதனை செய்திட்டோம் என்று கும்மாளம் இட்டு — கொக்கரிக்குது — கோமான்களின் கூட்டம் —-

    இந்த அரசு இந்த திடீர் செயலை நடைமுறை படுத்தி ” மக்களின் நாடியை ” பார்த்து இருக்கிறார்கள் — மக்களின் எதிர்ப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறார்களோ … ? அடுத்து இதைவிட வேறொன்றை பெரிய அதிர்ச்சியாக – மக்களுக்கு செய்ய போகின்ற ” முன்னோட்டமா ” இது — என்கிற கவலை பலருக்கும் ஏற்படுவது — இயல்பு தானே …. ?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: