ஊழலுக்கு எதிரான பெருங்காயமும், மாநில உரிமைக்கான வெங்காயமும்

rammohan-rao

கடந்த வாரம் முழுவதுமே ரெய்டு நடவடிக்கைகள் தூள் பரக்கின்றன. குறிப்பாக தலைமைச் செயலர் ராம் மோகன் ராவை குறிவைத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. முதல்வர் பன்னீர் செல்வம் அலுவலகத்தில் இருக்கும் போதே தலைமைச் செயலரின் அறையில் நடத்தப்பட்ட வேட்டை விவாதங்களைக் கிளப்பி விட்டது. அண்மைக் காலமாக தன்னை தேசிய அளவில் வெளிக்காட்டிக் கொள்ள முனையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா, இதை மாநில உரிமை எனும் அடிப்படையில் கலகக் குரல் எழுப்பினார். அதனைத் தொடர்ந்து இது பாஜகவின் மாநில உரிமைகளை மீறிய செயல் என்றும், இப்படி தேடுதல் வேட்டை நடத்துவதற்கு யாரிடமும் முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இரண்டு தரப்பாக நின்று விவாதித்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்த விவாதங்களின் இரைச்சலில் யதார்த்த உண்மைகளின் அமைதி கரைந்து போய்க் கொண்டிருக்கிறது.

 

முதலில் அதிமுக அரசு எப்படி நடந்தது என்பதிலிருந்து தொடங்கலாம். ஜனநாயகம் என்பதற்கு துளியும் இடமில்லாத இடம் அதிமுக. ஜெயலலிதா ஆண்டை என்றால், அவரைத் தவிர ஏனைய அனைவரும் அடிமைகள். அவர்களில் சிலர் அமைச்சர்களாக இருப்பார்கள். யார் எந்தத் துறையில் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் மாற்றப்படுகிறார்கள்? எதனால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் எங்கிருந்தும் வராது. நிர்வாகம் என்று எதுவும் அங்கு இருந்ததில்லை. எத்தனை துறைகள். அவ்வத் துறைகளில் எவ்வளவு பணம் புறளும்? அதில் தலைமைக்கு எவ்வளவு வரவேண்டும். இது தான் அதிமுக ஆட்சி நடத்திய விதம். இதில் கொசிப்புகளுக்காக அவ்வப்போது அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா கக்கூசு என்று அவ்வப்போது திட்டங்கள் வரும். சட்டசபையில் 110 விதியின் கீழ் அவ்வப்போது சொற்பொழிவுகள் ஆற்றப்படும். அவ்வளவு தான்.

 

முன்பு அன்புநாதன் வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில், மேயர் துரைசாமியின் வீட்டில் நடத்தப்பட்டது. அதன் பிறகு என்ன ஆனது? இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. கண்டெய்னரில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது? என்பது ஹிட்ச்காக் திரைப்படத்தை விட மர்மமாக இருக்கிறது. இவைகளெல்லாம் எடுத்துக் காட்டுவது என்ன? தமிழகத்தை கொள்ளையடிப்பதற்காக மட்டுமே நடந்த ஒரு ஆட்சி. கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அதற்கு துணையாக இருந்து தானும் சுருட்டிக் கொண்ட அதிகார வர்க்கம். இவைகளோடு இணைத்துப் பார்க்க வேண்டாமா தலமைச் செயலாளர் வீட்டில் நடந்த ரெய்டை?

 

மற்றொரு பக்கம் ஊடகங்கள். தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்று எட்டுக்கட்டையில் ஒப்பாரி வைக்கின்றன. ஆனால் தமிழகத்தின் அத்தனை முறைகேடுகளிலும் அமைதியைக் கடைப்பிடித்து அங்கீகாரம் வழங்கியவை இதே ஊடகங்கள் தாம். மின்சாரம் தொடங்கி பொதுப்பணித்துறை பொறியாளர் தற்கொலை வரை எதன் மீதும் எந்தக் கேள்வியும் எழுப்பாமல்; தேர்தல் கமிசன் தொடங்கி நீதிமன்றங்கள் வரை ஓர் அமைச்சரைப்போல் தரையில் விழுந்து கிடந்ததை எந்தக் கேள்விக்கும் உட்படுத்தாமல் அமைதியாய் வழ்த்துப் பாடிய அதே ஊடகங்கள் தாம் இன்று தமக்கு தொடர்பே இல்லாதது போல் தமிழ்நாட்டின் உச்ச அதிகாரியின் வீட்டிலேயே ரெய்டா? என்று அதிர்ச்சி காட்டுகின்றன. இதை ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் பண்பு என எடுத்துக் கொள்ள முடியுமா? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தரகு முதலாளிகளின் பங்கை சுத்தமாக மறைத்துவிட்டு, தணிக்கைக் குழு இழப்பீடு என்று அறிவித்ததை ஊழல் என்று மாற்றி ஊடகங்களும், ஓட்டுக் கட்சிகளும். அறிவுத்துறையினரும் திமுக வின் குற்றமாக காட்டி செய்த பிரச்சாரங்களை எப்படி வகைப்படுத்துவது? அப்போது ஆளும்கட்சி மனோபாவத்தை மீறி செயல்பட்டது எது?

 

பார்ப்பனிய நலன் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

 

இதில் பாஜக பங்களிப்பு ஒன்றுமே இல்லையா? ஜெயலலிதா இருக்கும் வரை அவருக்கும் பாஜகவுக்கும் ஒரு இயல்பான நட்புறவு இருந்தது. உதய் திட்டம், நீட் தேர்வு போன்றவற்றுக்கான எதிர்ப்பு என்பது மாநில உரிமை சார்ந்ததல்ல. மாநிலத்தில் தன்னுடைய நலன் எனும் அடிப்படையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகள் தான். போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள் என்பதிலிருந்து ஈழத் தாயாக அவதாரம் எடுத்ததைப் போன்றது அது. மற்றப்படி ஜெயலலிதாவின் அணுகுமுறை என்பது தமிழகத்துக்கு பிஜேபி தேவையில்லை. ஏனென்றால் நானே பிஜேபியாக இருக்கிறேன் என்பது தான். ஆனால் ஜெயலலிதாவின் நிலை கேள்விக்குறியானவுடன் – அவர் செப்டம்பர் 22 ல் இறந்தாரா? டிசம்பர் 5 ல் இறந்தாதாரா? அல்லது கொல்லப்பட்டாரா? என்பது வேறு விசயம் – தானே களமிறங்க முடிவு செய்கிறது பாஜக.

 

இங்கும் ஊடகங்களின் பார்ப்பனிய பாசம் என்பது அலாதியானது. உப்புமாவுக்கும் பெறுமதியாகாதவர்களையெல்லாம் சமூக ஆர்வலர்கள், பொருளாதார அறிஞர்கள் என்ற பெயர்களில் இருக்கை போட்டு அமர்த்தி வைத்தது தொடங்கி, ரூபாய் தாள்கள் செல்லாததாக்கப்பட்டது வரை ஒளிவுமறைவு இல்லாமலும், ஓயாமலும் பார்ப்பனியத்துக்கு பல்லக்கு தூக்கின் ஊடகங்கள்.

 

ஜெயலலிதா இல்லாத வெறுமையை – கவனிக்கவும், வெற்றிடத்தை அல்ல – பயன்படுத்திக் கொண்டு இதுவரை தோற்றுப் போன இடத்தில் தன்னை முன்னிருத்திக் கொள்ள முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடியின் பாஜக. அதிமுகவின் அல்லது ராவ் மோகன் ராவின் இந்த முறைகேடுகள் இப்போது தான் மோடிக்கு தெரிந்தனவா என்றால் இல்லை. ஆனால் இப்போது அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. இதை ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளாக முட்டுக் கொடுப்பதும் இதே ஊடகங்கள் தான்.

 

அதிமுகவின் அடாவடிகளை கண்டும் காணாமலும் இருந்தது எப்படி பார்ப்பனிய ஆதரவு நடவடிக்கையோ, அதேபோல பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைப்பதும், அதற்காக ஜெயா மறைவை, ரெய்டுகளை பயன்படுத்த நினைப்பதும் பார்ப்பனிய ஆதரவு நடவடிக்கைகளே. தமிழகத்தில் உள்ள ஊடகங்கள், ஓட்டுக் கட்சிகள், அறிவுஜீவிகள் ஆகியோரின் தற்போதைய ஒரே கவலை மத்திய பார்ப்பனியத்தை ஆதரிப்பதா? மாநில பார்ப்பனியத்தின் எச்சங்களை ஆதரிப்பதா என்பது தான். இது குழப்பம் தானே தவிர முரண்பாடு அல்ல. சீக்கிரம் தெளிந்து விடுவார்கள் அல்லது தெளிய வைக்கப்படுவார்கள்.

 

இதில் ஊழலுக்கு எதிரான பெருங்காயமும் இல்லை, மாநில உரிமைக்கான வெங்காயமும் இல்லை.

 

இந்த ஊடகங்களை நம்பித்தான் நம் அறிவை ஒப்படைத்திருக்கிறோம். இந்த கேடிகளை நம்பித்தான் நம் நாட்டின் வளங்களை, நம் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறோம். கேவலமாக இல்லையா?

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

Advertisements

2 பதில்கள்

  1. yes it is true. But we are not asked them to rule like this,vote sellers job is that.

  2. நண்பரே ….! யாருக்கும் வெட்கம் இல்லை… தலைகுனியும் அசிங்கம் என்று எண்ண தோன்றவில்லை — எந்த கட்சியாக இருந்தாலும் ” காட்சிகள் ” மாறவில்லை — முறை கேடுகள் பற்றி தெரிந்தும் — தெரியாததை போல நடப்பது தானே தேசிய கட்சிகளின் நடவடிக்கை …

    முன்பு தி.மு.க.விடம் காங்கிரஸ் எப்படி பரிவு காட்டி ஊழலுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து கண்டும் – காணாமல் இருந்து ஆட்சியில் கோலோச்சினார்களோ — அதே பாணிதான் இப்போது அ . தி.மு.க .– மற்றும் பா .ஜ .க . இணைந்த கைகள் — அரசால் – புரசலாக இருந்த அனைத்து மிரட்டல் நடவடிக்கைகளும் ஜெயாவின் மறைவுக்கு பின் வெளிச்சம் காட்ட துவங்கியுள்ளது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது …

    அடாவடி நடவடிக்கைகள் ஆளும் தரப்பினர் அனைவருக்கும் கைவந்த கலை — இதில் தி.மு.க ஒன்றும் விதிவிலக்கல்ல … அன்று ஒருமுனை தாக்குதலாக இருந்தது இன்று நீங்கள் கூறியுள்ளவாறு பார்ப்பனிய கலவையோடு சேர்ந்து கூடி – கும்மியடிக்கிறது … விபசார ஊடகங்கள் தான் அவர்களின் அறிவை அடமானம் வைத்து ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றன — போராட்ட குணம் மக்கி போய் இருப்பதால் எதுவும் நடக்கும் — அப்படித்தானே ….?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: