கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் மறக்கடிக்கப்பட்டு அதிமுக அடிமைக் கூடாரத்தின் கொள்ளைக் கூட்டத் தலைவனாக கோலோச்சப் போவது யார்? எனும் பிரச்சனையே முதன்மையான மக்கள் பிரச்சனையாக மாற்றப்பட்டது. ஊடக விலங்குகள் அப்படிக் கருதிக் கொண்டதால் மக்களும் அவ்வாறே கருதும்படி ‘வைத்து’ செய்யப்பட்டனர். ஆனால் மக்கள் பிரச்சனைகள் மேலும் மேலும் தீவிரமடைந்தன. அவற்றில் குறிப்பானதும், முதன்மையானதுமான பிரச்சனை விவசாயிகளின் மரணம்.
விவசாயிகள் மரணமடைவது இந்தியாவில் புதிய விடயமல்ல. கடந்த 25 ஆண்டுகளில் சற்றேறக் குறைய 3 லட்சம் விவசாயிகள் மரணமடைந்திருக்கிறார்கள். எது அந்த விவசாயிகளை பட்டினிச் சாவுக்குள், அதிர்ச்சி மரணத்திற்குள், தற்கொலைக்குள் தள்ளியதோ அந்த தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள், அரசால் இன்னும் தீவிரமாய் உச்சத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதன் விளைவுதான் இன்று தமிழகம் வரையிலும் கொத்துக் கொத்தாய் விவாசயிகள் மடிவது நீண்டிருக்கிறது. இன்னும் எத்தனை லட்சம் விவசாயிகள் மடிந்தாலும், அதற்காக அரசு எதனையும் செய்யப்போவதில்லை. ஏனென்றால் அதைத்தான் முன்னேற்றம் என்று வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். ஆனால், நாம் அவ்வாறு இருக்க முடியுமா?
அண்மையில் வெளியிடப்பட்ட “இறந்தாய் வாழி காவேரி” எனும் ஆவணப்படமும், “கொல கொலயா முந்திரிக்கா” எனும் குறும்படமும் அதனதன் போக்கில் விவசாயிகளின் மரணத்தை கவனிக்கச் சொல்லி நம்மிடம் கதறுகின்றன. காய்ந்து போன நெற்பயிர்களை மாடுகள் மேயும், “கறட் .. .. கறட்” எனும் ஓசை நம் இதயத்தை யாரோ கடித்துத் திண்பது போல் இருக்கிறது.
மீண்டும் மெரினாக்கள் தேவைப்படுகின்றன.
இறந்தாய் வாழி காவேரி
கொல கொலயாய் முந்திரிக்காய்
நண்பரே …. ! என்ன எழுதினாலும் — எத்தனை படங்களை காட்டினாலும் — எளிய விசாயிகளின் என்னலடங்கா உயிர்கள் போனாலும் எவனுக்கும் உரைக்க போவதில்லை …
பதவி வெறி — பணத்தாசை — பன்னாட்டு முதலாளிகளுக்கு காவடி தூக்குதல் — அந்நிய முதலீடுகளுக்கு அடிமையாக காரியமாற்றால் — டிஜிட்டல் வர்த்தக பூச்சாண்டி காட்டுதல் — ரொக்கமற்ற பரிவர்த்தனை என்று பாமரனை அடக்கி அடிமையாக்குதல் என்று ” காரியமாற்றும் கயவர்கள் ” இருக்கும் நாட்டில் …..
// பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி // என்பதில் அனைத்தையும் ஆட்டுவிக்கிற ” மோடியை ” காணோமே … என்று மனது குறைப்பட்டு கொள்கிறது …. !!
சாவுக்கு மணியடிக்கும் மாமனிதரை மறந்தது எனோ ..? இருக்கிற கொஞ்ச – நஞ்ச மானியங்களையும் மறையும்படி செய்கிற ” மோடி மஸ்தான் ” எப்படி விடுபட்டு போனார் … ? சொந்த சேமிப்பை எடுக்க நிர்ணயம் செய்யும் நாணயஸ்தர் — விவசாயிகளின் வியர்வையில் – வற்றிய வயிற்றோடு உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை தர மறுப்பது ஏன் ..?
ஊருக்கே சோறுபோடுபவனின் ” உயிருக்கு உத்திரவாதம் ” கொடுக்க தவறியவர்களுக்கு தண்டனை தரப்போவது .. யார் … எப்போது …?