மண்டைச் சுரப்பை உலகு தொழும்!

  இன்று செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த தினம்.   “தொண்டு செய்து பழுத்த பழம். தூய தாடி மார்பில் விழும். மண்டைச் சுரப்பை உலகு தொழும். மனக் குகையில் சிறுத்தை எழும்.”   பாவேந்தர் பாரதிதாசன் பெரியார் குறித்து எழுதிய வரிகள் இவை. ஆனால் பெரியார் என்றதும் கடவுள் மறுப்பாளர் என்றே பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். அது வானத்தை கிண்ணத்தை பிடித்து வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல் முழுமையற்றது. பெரியாரின் புரட்சிகரமான சிந்தனைகள் இன்னும் பரவலாக, … மண்டைச் சுரப்பை உலகு தொழும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!

  பதினைந்து நாட்களாக தொடர்கிறது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம். மாணவர்களோடு தொழிலாளர்களும், ஐ.டி ஊழியர்களும் கரம் கோர்த்திருக்கிறார்கள். ஊடகங்கள் வேறு நிகழ்வுகளுக்கு தாவி விட்டாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, எரிந்து கொண்டிருக்கிறது மாணவர் இளைஞர்களின் போராட்ட நெருப்பு. பல தரப்பு மக்களும் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தின் தொடர் முயற்சிகளில் ஒன்றாக மாப்பிக்ஸ் எனும் யுடியூப் தளவரிசையில்  இன்குலாப் ஜின்தாபாத் எனும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. உத்வேகத்தை தூண்டும் இசையாக, உணர்வேற்றும் குரலாக, பார்ப்பனிய, கார்ப்பரேட் பயங்கரவாதங்களை நினைவு … அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 3

  நண்பர் விவேக், உங்களின் பல பின்னூட்டங்களுக்குப் பிறகு தாமதமாக பதிலளிக்க நேர்வதற்கு வருந்துகிறேன். எழுதுவதை விட வேறு அலுவல்களுக்கு முதன்மை அளிக்க வேண்டிய தேவை இருப்பதால் தவிர்க்க இயலவில்லை.  உங்களின் பல பின்னூட்டங்களின் கருத்தை தொகுத்தால் அது அறிவியல் குறித்தும் தத்துவம் குறித்துமான குழப்பத்துக்கே இட்டுச் செல்கிறது. தத்துவம் என்பதை அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக புரிந்து கொள்வதில் இருந்து தான் மேடா பிசிக்சின் அடிப்படை தொடங்குகிறது. நீங்கள் கூறும் விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்பதை என்ன அடிப்படையின் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

உச்சா மன்றத்தை தடை செய்வோம்

  நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக தமிழகம் போராடி வருகிறது. ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடியதைப் போல் மெரினாவிலோ அல்லது வேறெங்கேனுமோ மாணவர்கள் இளைஞர்கள் கூடிவிடக் கூடாதே என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறையும் விழிப்புடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. குக்கிராமங்களின் ஆளே இல்லாத பேருந்து நிலையங்களில் கூட காக்கிக் காலிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றம் என்ற பெயரிலிருக்கும் உச்சுக்குடுமி மன்றமான உச்சா மன்றம் நீட்டுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க முடியாது என்று … உச்சா மன்றத்தை தடை செய்வோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?

  நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மாணவர்கள் இளைஞர்களால் ஆறாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தகுதித் தேர்வு என்பதைக் கடந்து புதிய கல்விக் கொள்கையின் பிரச்சனைகள், மோடி அரசு ஏன் இதை திணிப்பதற்கு இவ்வளவு பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறது என்பன போன்ற கேள்விகளின் வழியாக அரசு என்றால் என்ன எனும் புரிதல்களுக்குள் மாணவர்களும் இளைஞர்களும் கடந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்தத் தேடல்கள் அவர்களின் போராட்ட குணத்தை மேலும் வலுவாக்குகிறது. அந்த வகையில் நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிகும் … நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.