பதினைந்து நாட்களாக தொடர்கிறது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம். மாணவர்களோடு தொழிலாளர்களும், ஐ.டி ஊழியர்களும் கரம் கோர்த்திருக்கிறார்கள். ஊடகங்கள் வேறு நிகழ்வுகளுக்கு தாவி விட்டாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, எரிந்து கொண்டிருக்கிறது மாணவர் இளைஞர்களின் போராட்ட நெருப்பு.
பல தரப்பு மக்களும் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தின் தொடர் முயற்சிகளில் ஒன்றாக மாப்பிக்ஸ் எனும் யுடியூப் தளவரிசையில் இன்குலாப் ஜின்தாபாத் எனும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
உத்வேகத்தை தூண்டும் இசையாக, உணர்வேற்றும் குரலாக, பார்ப்பனிய, கார்ப்பரேட் பயங்கரவாதங்களை நினைவு தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட பாடலாக நீட் தேர்வுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கிறது இந்தப் பாடல். பாருங்கள், பரப்புங்கள்.