தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்!

  மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போகிறதாம். நீதிமன்றமா அவமதிக்கப்பட்டிருக்கிறது? நீதிமன்றம்தான் தமிழகத்தை அவமதித்திருக்கிறது. இந்திய அரசு அவமதித்திருக்கிறது. குமுறிக் கொந்தளிக்கும் வண்ணம் தமிழகம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. காவிரிச் சிக்கலில் ஒருமுறை இருமுறையல்ல, நூறுமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறோம். இறுதித் தீர்ப்பு என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வஞ்சகத் தீர்ப்பைக்கூட அமல்படுத்த மறுக்கிறது மோடி அரசு. கர்நாடகத் தேர்தல்தான் இதற்குக் காரணம் என்று இன்னும் இதற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள் சில…