.. .. .. காந்தியடிகள் இந்திய மண்ணில் நிலவி வந்த சதுர்வர்ணத்தை எதிர்ப்பதில் தீவிரம் காட்டவில்லை. இந்தியாவில் மேல்ஜாதியினரால் ஒடுக்கப்பட்டு பொருளாதாரம் சமூக நீதி உள்ளிட்ட தளங்களில் போராடிக் கொண்டிருந்த மக்களின் மீது அவர் இரக்கம் காட்டவில்லை. ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் என்ற நிலைகளில் மட்டும், “சகோதரனுக்கு எதிராக அறப் போராட்டமா?” என வினவி காந்தி சிக்கலிலிருந்து விலகிச் செல்கிறாரே ஏன் என்பது டாக்டர் அம்பேத்கரின் வினா. இது போன்று டாக்டர் அம்பேத்கர் காந்தியை நோக்கி முன்வைக்கும் பல வினாக்களின் தொகுப்பே இந்நூல் வடிவம். காந்தியின் அரசியல் பார்வையையும், சமூகநீதி சார்ந்த பார்வையையும் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்.
பதிப்புரையிலிருந்து
சாதி, தீண்டாமை போன்ற பிரச்சனைகள் மீது காங்கிரஸ் கட்சியும், காந்தி அவர்களும் கொண்டிருந்த கண்ணோட்டம், பின்பற்றிய நடைமுறைகள் குறித்து அண்ணல் அம்பேத்கர் பற்பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் இக்கட்டுரை. ஆழமான பார்வையோ, தீவிரமான அக்கறையோ இன்றி காந்தி இப்பிரச்சனைகளை அணுகுவது குறித்து அண்ணல் அம்பேத்கர் இக்கட்டுரையில் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.. .. ..
மொழிபெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து
Reblogged this on Social Democratic Students.
எது செய்யப்படவேண்டுமோ அதை புரியக் கூடிய முறையில் செதுள்ளீர்கள்.