5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா? தராதரமா?

  தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி இறுதி வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறையிலிருந்து சுற்றறிக்கை வந்ததாக கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டது. அதில்,  மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50,  8ஆம் … 5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா? தராதரமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகிலன் எங்கே?

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன? யார் அந்த சமூக விரோதிகள்?

  நேற்று (18.02.2019) ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்திரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டுமல்லாது, உச்ச நீதி மன்றத்துக்குப் பிறகு உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடத்தலாம் என்றும் கூறியிருக்கிறது. இது போராடிய மக்களுக்கு தற்காலிக வெற்றி தான் இன்னும் வழக்கு நீள்கிறது. சிறப்புச் சட்டம் இயற்றுவதே தீர்வு என்பது மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத மக்களின் விருப்பம். நிற்க. தீர்ப்பு வழங்கப்பட்ட இதே நேரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. … ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன? யார் அந்த சமூக விரோதிகள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

புல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்

கடந்த 14ம் தேதி காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபூரா எனும் இடத்தில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி ஒரு செய்தி வந்த உடனேயே இந்தச் செயலை கண்டிக்க வேண்டும் என்பது ஒரு மீப்பெரும் தார்மீகக் கடமையாக பொதுத் தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் சுமத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேச பக்தி ஆறாக பெருக்கெடுத்து ஓட வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால் குடியுரிமையே சோதனைக்கு உள்ளாக்கப்படும் என்பதான … புல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

காதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்

  பிப்ரவரி 14 காதலர் தினம் என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. பெற்ற அன்னையையே கொண்டாட்டப் பொருளாக மாற்றி, நுகர்வுப் பண்பாட்டில் மூழ்கடித்து அன்னையர் தினமாக கொண்டாடும் மேற்குலகு காதலை, காதலர்களை மட்டும் விட்டு விடுமா என்ன? கொண்டாடுகிறது. அதாவது, கொண்டாடத் தூண்டுவதற்காக கொண்டாடுகிறது. இந்தியாவில் மூன்று விதங்களில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்களால் கொண்டாடப்படுவது. இன்று மட்டும் என்றல்ல, என்றும், கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளவே விரும்புவார்கள். என்றாலும் இன்று ஒரு தனிவித … காதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்

  இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் மூடத்தனத்தை புராண கட்டுக் கதைகளை மக்களிடம் மாணவர்களிடம் பரப்புவதை மோடி பிஜேபி கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது. அறிவியல் என்ற பெயரில் இந்து(பார்ப்பனிய) மத கருத்துகளை விதைத்து ஒரு சமூகத்தையே பின்னோக்கி இழுப்பதை, அறிவியல் பூர்வமான, பகுத்தறிவுப் பூர்வமான கண்ணோட்டத்தை சிதைக்கும் இந்த செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்திய அறிவியல் காங்கிரசின் 100வது மாநாடு ஜனவரி 3ல் தொடங்கி 5 நாட்கள் ஜலந்தரில் நடைபெற்றது. தில் 60 … காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்

  இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த நாடே மோடியின் ஆட்சி ஒழிய வேண்டுமென்கிறது. கஜா புயலால் வாழ்விழந்த தஞ்சை விவசாயிகள், சாகர் மாலா திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள், பண மதிப்பழிப்பாலும், ஜி.எஸ்.டி-யாலும் தொழிலே அழிந்துபோன சிறு உற்பத்தியாளர்கள் – வணிகர்கள், இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதியால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள், நீட் – தனியார் கல்விக் கொள்ளைக்கு இரையாகும் மாணவர்கள், பசுக்குண்டர்களால் வேட்டையாடப்படும் … கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்-ஐ படிப்பதைத் தொடரவும்.