இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் மூடத்தனத்தை புராண கட்டுக் கதைகளை மக்களிடம் மாணவர்களிடம் பரப்புவதை மோடி பிஜேபி கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது. அறிவியல் என்ற பெயரில் இந்து(பார்ப்பனிய) மத கருத்துகளை விதைத்து ஒரு சமூகத்தையே பின்னோக்கி இழுப்பதை, அறிவியல் பூர்வமான, பகுத்தறிவுப் பூர்வமான கண்ணோட்டத்தை சிதைக்கும் இந்த செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
இந்திய அறிவியல் காங்கிரசின் 100வது மாநாடு ஜனவரி 3ல் தொடங்கி 5 நாட்கள் ஜலந்தரில் நடைபெற்றது. தில் 60 நாடுகளின் 20,000 அறிவியல் அறிஞர்கள், உயர் கல்வி நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.இந்த மாநாட்டில் பேசிய ஆந்திர பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நாகேஸ்வரராவ் மாகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் சோதனை குழாய் மூலம் பிறந்தவர்கள் என்று அளந்து விடுகிறார். மட்டுமல்லாது, டார்வினின் பரிணாம கோட்பாட்டுக்கு முன்னமே விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்தவர் என்றும் ராமர் ஏவுகணைகளை பயன்படுத்தினார் என்றும் ராவணன் 24 வகையான விமானங்களை பயன்படுத்தினார் என்றும் அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகளை, பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். இன்னும் தமிழகத்தைச் சேர்ந்த ஜகதள கிருஷ்ணன் எனும் மின்னணுவியல் பொறியியல் அறிஞர்(!) ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீனுடைய இயற்பியல் கோட்பாடு தவறு என்கிறார். புவியீர்ப்பு அலைகளுக்கு நரேந்திர மோடி அலைகள் என்று பெயரிடப்படும் என்று ஆர்.எஸ்.எஸ் காரரைப் போல் பிதற்றுகிறார். பஞ்சாப் பல்கலைக் கழக புவியியலாளர் அசு கோஸ்லா, இந்த பிரபஞ்சத்தின் சிறந்த அறிவியலாளர் பிரம்மா தான் என்கிறார். கடந்த காலத்தில் இதே போன்றதொரு மாநாட்டில் தான் விநாயகன் தலை குறித்து பிளாஸ்டிக் சர்ஜரி அந்தக் காலத்திலேயே இருந்தது என்று கூறி மோடி மக்களால் கழுவி ஊற்றப்பட்டார். அன்று அவர் சொன்னதை இன்று அறிவியலாளர்களைக் கொண்டு சொல்ல வைக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பேராசிரியர்கள் அறிஞர்கள் தொடர்ந்து இது போல பேசி வருகிறார்கள்.
அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல் பார்ப்பனிய புராணங்களில் உள்ள கட்டுக்கதைகளை மூடத்தனங்களை எல்லாம் அந்தக் காலத்திலேயே இருந்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்று பேசுவதை பரப்புவதை அனுமதிக்க முடியுமா?
***********************
“காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்” எனும் இந்த நூல் ஸ்டீபன் ஹாங்கிங் எனும் சிறந்த அறிவியலாளரால் எழுதப்பட்ட, “A Brief History of Time” எனும் நூலின் தமிழாக்கம். காலம் வெளி குறித்த அறிவியலை ஓரளவு எளிமையாக விளக்கும் நூல். உலக மக்களிடையேயும், அறிவியலாளர்களிடையேயும் பரபரப்பையும் புதிய சிந்தனைகளையும் தூண்டிய நூல்.
படியுங்கள், பரப்புங்கள்.
பார்ப்பன அறிவியல் புழுகுகளுக்கு எதிராக இது பயணப்படட்டும்.