புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் – நெல்லை CCCE அரங்கக் கூட்டம்

நண்பர்களே! வணக்கம்.

ந்தியாவில் இப்போது இருக்கின்ற கல்விமுறை சரியானது தானா?…. இல்லை எனில் இந்த கல்விமுறை மாற்றப்பட வேண்டுமா?…. ஆம்.

அதைத் தானே மத்திய அரசு புதிய தேசியக் கல்வி கொள்கை – 2019 வரைவு அறிக்கையாக்கியிருக்கிறது! அல்ல. அல்ல என்றால்?

புதிதாக வருவது இருப்பதை விட மோசமானது! இந்தியாவில் பெரும்பான்மை மக்களை முட்டாள்களாக்கும் மோசடித்திட்டம்! எப்படி?

  • கள நிலவரங்களை ஆராயவில்லை.
  • மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை.
  • மாநிலங்களிடையே காணப்படும் மொழி, பண்பாடு, கலாச்சாரம், அறவியல், பொருளியல் சார்ந்த விசயங்களைக் கண்டு கொள்ளவில்லை.
  • ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களைப் போதிப்பதையே கல்விக் கொள்கையாக்குகிறது.
  • பள்ளி முதல் கல்லூரி, பல்கலைக்கழகம் வரை இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணித்து அரசியலமைப்பின் 8 -வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளைப் புறக்கணிக்கிறது.
  • CII, FICCI, NASCOM போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் சங்கப் பரிந்துரைகளை அப்படியே வழிமொழிகிறது.
  • 3,5,8-ம் வகுப்புகளில் தேசிய அளவிலான பொதுத்தேர்வு என்று சாமானியர்களை வடிகட்டி வெறியேற்றுகிறது.
  • வெளியேறியவர்களைக் குலக்கல்விக்குள் வஞ்சகமாகத் தள்ளுகிறது.
  • பி.ஏ / பி.எஸ்.சி போன்ற இளநிலை பட்ட வகுப்புகளுக்கும் தேசிய அளவிலான தகுதித்தேர்வு என வடிகட்டல் தொடங்குகிறது.
  • அம்பானி, அதானி, டாட்டா, பில்கேட்ஸ் வகையறாக்கள் கல்விக்கடை தொடங்கி கொள்ளை அடிக்க முன்னுரிமையளிக்கிறது.

மொத்தத்தில் அரசு கல்வியைக் கை கழுவுகிறது. குடிமக்களுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்கிறது. ஆனால் கல்விக் கொள்கைகளுக்கான அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து பறித்து, பிரதமர் தலைமையிலான தேசிய கல்வி ஆணையத்தின் பிடியில் ஒப்படைத்து விடுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்பது போல கல்வியிலும் மொழி பண்பாட்டுப் பன்மைகளை மறுக்கிறது, ஒடுக்குகிறது. பெரும்பான்மையான சாமன்ய மக்களை கல்வியிலிருந்து வெளியேற்றுகிறது, இந்த வரைவு அறிக்கை மீது கருத்துச் சொல்லலாம் என்று சுற்றுக்கு விட்டுவிட்டு, அதன் உள் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறவர்களை தேசத் துரோகிகள் என்று ஆளும் கட்சியினர் ஆள்காட்டி வேலைசெய்கிறார்கள்.

இந்த அடக்குமுறையே ஜனநாயகப் போர்வையில் வரும் சர்வாதிகார கருத்துத் திணிப்பு என்பதை தெளிவாகக் காட்டவில்லையா? எனவே இந்த புதிய கல்வி கொள்கையை முற்றாக நிராகரித்து பெரும்பான்மை மக்கள் நலனுக்கான கல்விக் கொள்கையை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் மக்களுடன் இணைந்து போராட வேண்டும்.

நாள்: 15.09.2019 நேரம்: காலை 10.00 மணி
இடம்: அபிநயா மஹால், ஆர்யாஸ் ஹோட்டல், மதுரை ரோடு – திருநெல்வேலி.

தலைமை:

பேரா. அமலநாதன்,
ஒருங்கிணைப்பாளர், CCCE – திருநெல்வேலி

முன்னிலை:

பேரா. சோமசுந்தரம்,
ஒருங்கிணைப்பு குழு, CCCE – திருநெல்வேலி

சிறப்புரை:

“பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுக்கும் புதிய கல்விக்கொள்கை” மருத்துவர் எழிலன், சென்னை

“பார்ப்பனியப் பிடியில் கல்விக் கொள்கை”  வழக்கறிஞர் ப.செந்தில்குமார், செயலாளர், திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம்.

“கல்விக்கான சட்ட உரிமையை மறுக்கும் கல்விக் கொள்கை” வழக்கறிஞர் சி.மைக்கேல் ஜெரால்டு, நாகர்கோவில்.

“பள்ளி கல்வியை முடமாக்கும் புதிய கல்விக்கொள்கை” திரு.சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு, ஈரோடு.

சிறப்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் முழு கேட்பொலி பதிவு இணைக்கப்பட்டுள்ளது. கலந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் கேட்டுக் கொள்ளலாம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s