
பொருளாதார நெருக்கடி எனும் சொல் தற்போது அனைவரும் உச்சரிக்கும் சொல்லாக இருக்கிறது. அந்த அளவுக்கு அது மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. எந்த அளவுக்கு இது பரவலாக பேசு பொருளாக இருக்கிறதோ அந்த அளவுக்கு எளிய மக்களுக்கு புரியாத ஒன்றாக இருக்கிறது. இந்த சரியாக புரியாத தன்மையை வைத்துக் கொண்டு தான் சங்கிகள் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்றே இல்லை. இருப்பது சிறிய சிக்கல் தான் அதை மோடி ஊதித் தள்ளிவிடுவார் என்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்க:. இந்த புரட்டுகளை மறுத்து எளிமையாக பலர் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவைகளில் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா நிகழ்த்தும் இந்த உரை சிறப்பானதாக – இந்த பொருளாதார நெருக்கடியை தீர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதற்கு எதிராகவே அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது. காணுங்கள்.