என்ன செய்வது?

பெயரில்லாத ஒரு சிறுவன் அல்லது சிறுமி தூர்ந்து போன ஆழ்துளைக் கிணற்றில் .. .. .. தூர்ந்து போனது கிணறு மட்டும் தானா? பொக்லைன்கள் வருகின்றன, ரிக் எந்திரங்கள் வருகின்றன, அரசின் அக்கரை மட்டும் இன்னும் வரவில்லை. ஆம். அதிகாரிகள் இரவு பகலாய் விழித்திருக்கிறார்கள் அமைச்சர்கள் அழுக்கு வேட்டியுடன் அமர்ந்திருக்கிறார்கள் ஊடகத் துறையினர் தத்தமது கருவிகளுடன் எம்பிக்கள் சமூக ஆர்வலர்கள் 2 வயது சிறுவனுக்கான பதில் மட்டும் யாரிடமும் இல்லை. முயற்சிக்கிறார்கள் இல்லையெனக் கூற முடியாது கொண்டுவந்துவிட…

சிவப்புச் சந்தை

இந்நூல், உலகெங்கும் பரவியுள்ள கொடூரமிக்க, பாதாள உலகத்தின் வழியே அதிர்ச்சியூட்டும் சுற்றுலாவுக்கு வாசகர்களை அழைத்துச் செல்லும் ஒரு விரிவான விவரணை. அங்கு சிவப்புச் சந்தையில் உடலுறுப்புகள், எலும்புகள், உயிரோடிருக்கும் மனிதர்கள் முதலியவை வாங்கி விற்கப்படுகின்றன. மனித உடல்களையும் உடல் பகுதிகளையும் கொண்டு நடக்கும், அதிக லாபம் ஈட்டித்தரும் தீவிரமிக்க, இரகசியமான வணிகம். இதைத் தொடர்ந்து செல்வதில் ஐந்து ஆண்டு காலம் களப்பணி செய்திருக்கிறார் புலனாய்வு பத்திரிக்கையாளரான ஸ்காட் கார்னி அது ‘சிவப்புச் சந்தை’ என்று அறியப்படும் பரந்தகன்ற…

கேள்விக்கு பதில் சொல்லுங்க அபிஜித் பானர்ஜி

2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு, இந்திய வம்சாவளி அமெரிக்கரான அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ, அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, அந்த ஆண்டில் நல்ல மழை பெய்தால் கூட எங்கள் மோடிஜி யால் தான் மழை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று புழகமடைந்து போகும் பக்தாள்கள் இந்த முறை கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். பின் இடதுசாரி என்று தூற்றினார்கள். (இடதுசாரி என்பது வசைச் சொல்லா?)…

கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?

சமூகம் தன் ஒவ்வாமைகளை உதறும் ஒரே வழியாக அறிவினை மட்டுமே கொள்ள முடியும். அவ்வகையில் தலித் என்ற அடையாளத்துக்கு வரலாற்று விளக்கங்களையோ வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளையோ அளிப்பதை இக்கட்டுரைகள் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அவ்வடையாளம் பெருஞ்சமூகத்தில் உருவாக்கும் மிக நுண்ணிய அசௌகரியத்தை உணர்ந்து அதற்கான காரணங்களை ஆராய முயல்கிறது. அதன் வழியே தரவுகளும் சமூக அசைவுகளும் விவரிக்கப்படுகின்றன. தலித்துக்கள் குறித்து வாசிக்க ஒவ்வாமை உடைய பேரரறிவாளிகளும் அணுகுவதற்கு அஞ்சும் சிக்கலான அதே நேரம் மயக்கம் தரும் வசீகரமான மொழிநடையைக்…

ஒரு நாடு, ஒரு கட்சி, ஓர் ஆட்சி

கடந்த மாத தொடக்கத்தில் காஷ்மீருக்கான சிறப்பு உரிமையான 370, 35 A ஆகிய பிரிவுகள் அடாவடியாக நீக்கப்பட்டன. காஷ்மீருக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என்று வேறெங்கோ கொம்பு முளைத்ததைப் போல சங்கிகள் ஒரே குரலில் ஓலமிட்டார்கள். வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் இருக்கின்றன என்று அமைதியாக பதிலளிக்கப்பட்டாலும், அதில் போதிய அழுத்தம் இருந்திருக்கவில்லை. ஆனால் அதைவிட எல்லா மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் வழங்கு எனும் கோரிக்கை முழங்கப் பட்டிருக்க வேண்டும். அதை உரத்து முழங்க வேண்டிய…

அமெரிக்காவை விட்டு சீனாவுக்கு அடியாளாகிறதா இந்தியா?

சீன அதிபர் ஷி ஜின் பிங் கும் இந்திய பிரதமர் மோடியும் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து பேசவிருக்கிறார்கள். இந்தச் சந்திப்புக்காக தடை விதித்ததாக கருத்தப்பட்ட விளம்பர தட்டி வைக்க நீதி மன்றம் அனுமதித்தது ஒருபக்கம் இருக்கட்டும். சிறு கடைகள் அடாவடியாக துடைத்தெறியப் பட்டிருப்பது ஒருபக்கம் இருக்கட்டும். பேரூந்துகள் தடை செய்யப்பட்டிருப்பதும், போக்குவரத்து மட்டுப்படுத்தப் பட்டிருப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். மாமல்லபுரம் தங்கும் விடுதி சீன அதிகாரிகளுக்கு உவப்பில்லாததால் கிண்டிக்கு மாற்றப்பட்டதால் சென்னை நகரில் ஏற்படவிருக்கும் போக்குவரத்து நெரிசல் ஒருபக்கம்…

காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு?

ஆறாம் கட்டுரை : காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு? காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்துக்குக் கொண்டுபோய், அதனைச் சர்வதேசப் பிரச்சினையாக மாற்றியதுதான் நேருவின் சாதனை” என்பது பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு. பிரிவு 370-ஐ செயலற்றதாக்கியதன் மூலம் நேருவின் அச்சாதனையை” முறியடித்துவிட்டார் மோடி. காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தானால் பயிற்றுவித்து அனுப்பப்படும் சில பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று இந்திய அரசு மிகவும் கஷ்டப்பட்டு ஊதி உப்பவைத்திருந்த பலூனைத் தனது தைரியமான நடவடிக்கையின் மூலம் ஒரே நொடியில்…

நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல

ஐந்தாம் கட்டுரை : நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் முக்கியக் கூறுகளை நீக்கி, அச்சட்டப்பிரிவைச் செயலற்றதாக்கிவிட்ட மோடி அரசின் நடவடிக்கையை ஆதரிக்கும் வலதுசாரிகள் அனைவரும், அச்சட்டப் பிரிவின் காரணமாகத்தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர நேரிட்டதாகவும் ஏறத்தாழ 40,000 பேர் இறந்து போனதற்கும் அச்சட்டப் பிரிவுதான் காரணமென்றும்” வாதாடி வருகிறார்கள். காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியாவுடன் இணைக்கும்…

சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன்

நான்காம் கட்டுரை : காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் அதென்ன காஷ்மீருக்கு மட்டும் தனிச் சட்டம்? அவனுக்கு மட்டும் கொம்பா முளைத்திருக்கிறது?  இதுதான் சட்டப்பிரிவு 370 பற்றி ஒரு பாமரனின் பார்வை. காஷ்மீரில் வெளியாள் யாரும் சொத்து வாங்க முடியாதாம்” என்று பா.ஜ.க.வினர் பேசினால், சொந்த ஊரில் சென்ட் நிலம் வாங்க முடியாதவன்கூடப் பெரிதும் அதிர்ச்சி அடைகிறான். தற்போது 370-ஐ செயலற்றதாக்கி, காஷ்மீரில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டார், மோடி. இதனால் உடனே மகிழ்ச்சி…

இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம்

மூன்றாம் கட்டுரை : காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் ஜம்மு காஷ்மீருக்குத் தனிச் சிறப்புரிமைகள் வழங்குவதாகக் கூறப்படும் அரசியல் சாசனப் பிரிவு 370- செயலற்றதாக்கியதன் மூலம், ஜம்மு காஷ்மீருக்கென பெயரளவில் இருந்துவந்த தனிக் கொடி, தனி அரசியல் சாசனச் சட்டம், கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் ரத்தாகிவிட்டன. இனி, இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமின்றி, மைய அரசின் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இன்றியும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய…