
முனைவர் வசந்தா கந்தசாமி. 130 தலைப்புகளில் நூல்கள் வெளியீடு, 600 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கும் IIT-Mன் ஓய்வு பெற்ற பேராசிரியரான முனைவர் வசந்தா கந்தசாமி சென்னை ஐஐடி யில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை முகத்தில் அறைந்தாற்போல் வெளிப்படுத்துகிறார்.
மனுநீதி தான் அங்கே கோலோச்சுகிறது, ஜனநாயகம் என்பதே இல்லை.
கருப்பாக இருக்கும் யாரும் அங்கே படித்து தேர்ச்சி பெற முடியாது.
இதுவரை ஒரு கண்டுபிடிப்பு கூட அங்கிருந்து வெளியாகவில்லை.
பேராசிரியர்களாய் இருப்போரின் ஆய்வுக் கட்டுரைகள் யாரும் பார்க்க முடியாதவாறு வைக்கப்பட்டிருக்கும், பார்த்தால் அவைகளின் லட்சணம் புரியும். அவைகள் சொந்த ஆய்வுகள் இல்லை (Copy) என்பது புரியும்.
இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதில்லை.
எந்த தேர்வும், நியமணமும் வெளிப்படையாய் நடப்பதில்லை.
இன்னும் இது போன்ற பலப்பல உண்மைகளை அம்பலப்படுத்துகிறார். மறுப்போர் யாரேனும் உண்டா .. .. ..? இது சென்னை ஐஐடியை மட்டும் குறிப்பதில்லை. நாட்டிலுள்ள அனைத்து ஐஐடி, மிக்குயர் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும். என்றால் இந்த அரசும் நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருக்கின்றன. யாருக்காக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டாமா?
தங்களை இந்துக்கள் என்று கருதிக் கொள்வோருக்கு .. .. ..
வசந்தா கந்தசாமியும் இந்து தான், அவரைக் கூட விட்டு விடுவோம். கருப்பாக இருக்கும் யாரும், பார்ப்பானாக இல்லாத யாரும், மேல்ஜாதியாக (கூறிக் கொள்வோர்) இல்லாத யாரும் அங்கு தேர்ச்சி பெற முடியாது என்று கூறுகிறார். ஒன்று, அது உண்மை இல்லை என்று தரவுகளுடன் நீங்கள் மறுக்க வேண்டும். இரண்டு, கருப்பாக இருக்கும் யாரும், பார்ப்பானாக இல்லாத யாரும், இந்துக்கள் இல்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
என்ன செய்யப் போகிறீர்கள்?