
சில வாரங்களுக்கு முன் நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமத்தில் இரண்டு வயதே ஆன சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணித்து, அதிலேயே சமாதியும் ஆகிப் போனான். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தும், விழும் குழந்தைகளைக் காப்பாற்ற தனிப்பட்ட கருவிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. ஓர் ஒப்பீட்டுக்காக செவ்வாய்க்கு ராக்கெட் விடும் அரசால், ஆழ்துளையில் விழும் குழந்தைகளை காப்பாற்ற வழி காண முடியாதா? எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது, அது சமூக வலை தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
தற்போது அதேபோன்ற தொழில் நுட்பத்துடன் ஒரு கருவிக்கான வரைகலை விளக்கம் யூ டியூபில் காணக் கிடைத்தது. இப்படியான கருவியை உருவாக்குவது அரசுக்கு மிக எளிதானது தான். அந்த தொழில்நுட்பத்தில் இருக்கும் குறைகளையும் கண்டறிந்து நீக்கி, இன்னும் சிறப்பாக உருவாக்கலாம்.
அறிவியல் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கும் யாரும் இக் கண்டுபிடிப்பை வரவேற்கவே செய்வர். அரசு எந்த அளவுக்கு இதில் முனைப்புடன் இருக்கிறது என்பதை தொடரும் காலம் விளக்கி விடும். மக்களுக்கான அறிவியல், முதலாளிகளுக்கான அறிவியல் எனும் பேதமில்லாமல் தேவைகளிலிருந்து அறிவியலை நோக்கி என்பதில் மக்கள் முன்னேறுகிறார்கள். கே.சுந்தர் அதை இன்னும் ஒரு படி உயர்த்தி இருக்கிறார்.
இனி ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்தால் .. .. .. அதன் முற்று முழுதான பொறுப்பு, அரசை மட்டுமே சாரும், அரசின் மக்களை மதிக்காமல் முதலாளிகளை மதிக்கும் அதன் கொள்கையை மட்டுமே சாரும்.