கடந்த டிசம்பர் கடைசி வாரத்தில் மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள வூஹான் எனும் நகரில் கரோனா என்ற உயிர்க் கொல்லி வைரஸின் புதிய வகை கண்டறியப்பட்டது. சற்றேறக் குறைய ஒரு மாதம் ஆகி விட்ட இன்றைய போதில் உலகம் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை செய்திருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தம் மக்களை சீனாவுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பதோடு விமானங்களை ரத்து செய்திருக்கின்றன. சீனாவில் வூஹான் மற்றும் அதனைச் சுற்றிய … கரோனா வைரஸ்: சில கேள்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாதம்: ஜனவரி 2020
முட்டை அரசாங்கம்
அண்மையில் சென்னை புத்தகக் கண்காட்சியில் இருந்து மக்கள் செய்தி மையம் அரங்கு அநீதியாக நீக்கப்பட்டது. அதற்கு இசைவாக பபாசி தலைவர்களை தாக்க முயன்றதாக காரணம் கூறி வழக்கு தொடரப்பட்டது. அன்பழகனும் கைது செய்யப்பட்டார். இந்த அத்துமீறலை பலரும் தனித்தனியே கண்டித்திருந்தாலும், புத்தகக் கண்காட்சி வழக்கம் போல இயங்கியது. பின் அது ஒரு செய்தியாக கடந்து, மறந்தும் போனது. ஆனால், மெய்யாகவே அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கும், புத்தகக் கண்காட்சியிலிருந்து மக்கள் செய்தி மையம் அரங்கு நீக்கப்பட்டதற்கும், அவர் பபாசி … முட்டை அரசாங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடியரசு தினமாம்
இன்று 71 வது குடியரசு தினம் நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். உற்சாகமாக யாரும் கொண்டாடுகிறார்களா? என்று கொண்டாடிக் கொண்டிருப்பவர்களைக் கேட்டால் தான் தெரியும். இளைஞர்கள், நடுத்தர வயதுடையவர்களில் பெரும்பான்மையோர், ‘ஞாயிற்றுக் கிழமையில் வந்து விட்டதே, ஒரு நாள் விடுப்பு போய் விட்டதே’ எனும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இதன் பொருள், ஞாயிற்றுக் கிழமை விடுப்பை விட குடியரசு தினம் ஒன்றும் அவ்வளவு இன்றியமையாதது அல்ல என்பது தான். இதை அவர்கள் நேர்மறையில் பொருள் … குடியரசு தினமாம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
புத்தகங்களே துணை
இது 24.11.2017 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகங்களே துணை எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்புரை. நூல்களை வாசிப்பது, நூல்களை நேசிப்பது, நூல்களை சுவாசிப்பது என்று படிப்படியாக நூல்களுக்குள் நுழைவதை ஒரு அழகியல் ஒழுங்கோடு புதிய வாசகனுக்கு எப்படி பரிமாறுவது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஆம் என்றால் இது நீங்கள் கேட்க வேண்டிய ஓர் உரை. இந்த உரையைக் கேட்கும் யாருக்கும் நாமும் நூல்களை வாசிக்க … புத்தகங்களே துணை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம், தனிச் சொத்து, அரசு
2. முதற் பதிப்புக்கு 1884ல் எழுதிய முன்னுரை ஓர் அர்த்தத்தில் பின் வரும் அத்தியாயங்கள்மார்க்ஸ் விட்டுச் சென்ற பனியை செய்து முடிக்கும் வகையில் அமைந்தவையே. வரலாற்றைப் பற்றித் தன்னுடைய - எங்களுடைய என்று சில வரம்புகளுக்கு உட்பட்டு நான் சொல்லக் கூடும் - பொருள் முதல் வாத ஆராய்ச்சியின் மூலம் தான் கண்ட முடிவுகளின் தொடர்பில் மார்கனது ஆராய்ச்சி விளைவுகளை மக்களுக்கு முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் … குடும்பம், தனிச் சொத்து, அரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.
தாவீந்தர்: நாடாளுமன்ற தாக்குதல் நாடகத்தின் முடிச்சு
அப்சல் குரு கடந்த 12ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்பதற்காக காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருக்கும் தாவீந்தர் சிங் என்பவரை கைது செய்தனர். மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரண செய்தி போல கடந்து போகத் தோன்றும். ஏனென்றால், காஷ்மீரில் இராணுவமும் போலீசும் நடத்தி வரும் வெறியாட்டங்களை அறிந்திருப்பவர்களுக்கு, இது அதிர்ச்சி தரத்தக்க செய்தியாக இருக்காது. அதேநேரம், இந்திய அரசையும், காவி பயங்கரவாதிகளையும் புரிந்திருப்பவர்களுக்கு இதில் முக்கியமான செய்தி இருகிறது. தாவீந்தர் சிங்கை விசாரித்த அதிகாரிகள் கூட, … தாவீந்தர்: நாடாளுமன்ற தாக்குதல் நாடகத்தின் முடிச்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஈரான்: அமெரிக்காவின் அடாவடிகள்
கடந்த ஜனவரி 3ம் தேதி ஈரானின் இராணுவத் தளபதியான காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டார். இதை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவர் ஒரு பயங்கரவாதி, அமைதிக்கு எதிரானவர், முன்பே கொல்லப்பட்டிருக்க வேண்டியவர். எனவே, என்னுடைய உத்தரவின் பேரில் அமெரிக்க வீரர்கள் அவரை கொன்றனர் என்று தெரிவித்தார். அதாவது, அமெரிக்காவுக்கு அவரை பிடிக்கவில்லை அல்லது அமெரிக்காவுக்கு எதிராக அவர் செயல்பட்டார், அதனால் நாங்கள் அவரைக் கொன்றோம் இது தான் அமெரிக்கா சொல்வது. இதையே வேறொரு நாடு … ஈரான்: அமெரிக்காவின் அடாவடிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்
இன்று ஜனவரி 8. பத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. பொதுவாக, 1991 க்குப் பிறகு இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தங்கள் நடந்ததே இல்லை. ஆனால், பொது வேலை நிறுத்தங்களை நடத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட 1991க்குப் பிறகு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த முரண்பாடான சமூக நிலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எண்பதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கையால், வேலை செய்தால் … பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தாக்கியது ABVP தான்
ஞாயிற்றுக் கிழமை இரவில் ஜேஎன்யூ வில் நடத்தப்பட்ட தாக்குதலில், தாக்குதலில் ஈடுபட்டது RSS ன் மாணவர் அமைப்பான ABVP தான் என்று மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் கூறினார்கள். ஆனால் பிஜேபியினரோ இடதுசாரிகள் தாம் கலகம் நடத்தினார்கள் என்றார்கள். இங்குள்ள நாரவாய் நாராயணனும் அதையே வாந்தியெடுத்தான். நடுநிலை என்ற பெயரில் சிலர் கல்வி வளாகத்தினுள் இப்படி கலகம் செய்வதை கண்டிக்கிறோம் என்று, தாக்குதலை கலகம் என்றார்கள். அமித்ஷா விசாரணை நடத்தப்படும் என நாடகமாடினார். இதோ, இப்போது ABVP … தாக்கியது ABVP தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.
JNU வில் நடப்பது தெரிகிறதா?
ஜேஎன்யுவுக்காக நிற்பதுஇந்தியாவுக்காக நிற்பது!~பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது தொடங்கியே ஜெ.என்.யு மேல் அது ஒரு கண்ணாகவே இருந்தது. ஏனென்றால் ஜெஎன்யூவின் பாரம்பர்யம் வித்தியாசமானது. சனநாயகத்தன்மை மிக்கது. இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தபோது அதை எதிர்த்து தீவிரமாக போராடியவர்கள் ஜெஎன்யூ மாணவர்கள். இப்போராட்டத்துக்காக மாணவர்களை திகார் சிறையில் வைத்தது இந்திரா அரசு. இருந்தபோதும் இந்திரா, மொரார்ஜி தேசாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் ஜென்யுவில் போராட்டம் ஏற்பட்டபோது மாணவர்களை நேரில் சந்தித்தனர். இன்று பிரதமர் மோடிக்கு அந்த மாண்பு இல்லை. … JNU வில் நடப்பது தெரிகிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.