JNU வில் நடப்பது தெரிகிறதா?

ஜேஎன்யுவுக்காக நிற்பது
இந்தியாவுக்காக நிற்பது!
~
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது தொடங்கியே ஜெ.என்.யு மேல் அது ஒரு கண்ணாகவே இருந்தது. ஏனென்றால் ஜெஎன்யூவின் பாரம்பர்யம் வித்தியாசமானது. சனநாயகத்தன்மை மிக்கது.

இந்திரா எமர்ஜென்சி கொண்டு வந்தபோது அதை எதிர்த்து தீவிரமாக போராடியவர்கள் ஜெஎன்யூ மாணவர்கள்.

இப்போராட்டத்துக்காக மாணவர்களை திகார் சிறையில் வைத்தது இந்திரா அரசு. இருந்தபோதும் இந்திரா, மொரார்ஜி தேசாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் ஜென்யுவில் போராட்டம் ஏற்பட்டபோது மாணவர்களை நேரில் சந்தித்தனர்.

இன்று பிரதமர் மோடிக்கு அந்த மாண்பு இல்லை.

ஒருமுறை மொரார்ஜி ஜெஎன்யுவை கலைத்துவிடலாமா? என்றுகூட யோசித்ததுண்டு! அந்த அளவு அரசியல்வாதிகள் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியது ஜெஎன்யு!

ஜெஎன்யு வில் சனநாயகம் தழைத்தோங்குகிறது. அங்கு தேர்தல் நடத்தும் முறையே அலாதியானது. 15 நாட்கள் விவாதம், உரையாடல் நடக்கும். அவை தத்துவங்களுக்கான அலசலாக,தெளிவாக இருக்கும்.

பெரும்பாலும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களே,ஜெஎன்யுவின் மாணவர் தலைவரானார்கள்.

ஜெஎன்யு ஆர்டியன்ஸ் என்றே தனியான நெறிமுறைகள் இப்பல்கலைக்கென்று உள்ளது.

இங்கு இந்தியாவின் எந்த பகுதி மாணவர்களும் அவர்களது தாய்மொழியிலேயே நுழைவுத் தேர்வை எழுத முடியும். பால் ஏற்றத் தாழ்வுகள் விவரிவாக விவாதிக்கப்பட்டு அவை களையப்பட்டிருக்கின்றன. ஆண், பெண் மாணவர்களுக்கிடையே இங்கு சமத்துவம் நிலவுகிறது. முழுமையான இட ஒதுக்கீடு இங்கு பின்பற்றப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர், மலைவாழ் மாணவர்களுக்கு கட்டணச் சலுகை ஊண்டு. இவையே இப்பல்கலைமீது சங்பரிவார்களுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படக் காரணம்!

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி, சீத்தாராம்யெச்சூரி போன்றோர் இங்கு படித்தவர்களே! நிர்மலா சீத்தாராம், ஜெய்சங்கர் போன்ற தற்போதைய அமைச்சர்களும் இதன் மாணவர்களே.

இந்தியாவின் மாண்புகள் அழிகிற போதெல்லாம் ஜெஎன்யு விழித்து போராடியிருக்கிறது. தற்போது கல்விக் கட்டணம், விடுதிச் சட்டங்களில் திருத்தம் போன்றவற்றிற்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர். வலதுசாரி ஊடகங்கள் வழக்கம்போல மாணவர்களுக்கு எதிராக விஷத்தை கக்கி அவர்கள் மீது தவறான அபிப்ராயத்தை பொதுவெளியில் உருவாக்கியது. ஆனாலும் ஜெஎன்யு போராட்டம் கவித்துவமாக, கவனக் கோரலாகவே நடைபெற்றது. கருத்தைக் கவரும் வாசகங்கள் அடங்கிய தட்டிகள், கேலிச்சித்திரங்கள், நாடகங்கள், உரைகள் என பல வடிவங்களில் இந்தப் போராட்டம் இருந்தது.

கடந்த பா.ஜ.க ஆட்சியில் மாணவர் தலைவர் கண்ணியகுமார் மற்றும் அவரது தோழர்கள், இடதுசாரி மாணவர்கள் தாக்கப்படுவதற்கு சங்பரிவார் கூட்டம் காரணமாக இருந்தது.

இப்போது மாணவர் தலைவர் ஒய்ஷி கோஷ் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். சங்பரிவார் கூட்டத்துக்கு ஜெஎன்யுவின் கதவுகளை திறந்துவிட்டதில் மத்திய அரசின் ஆதரவு இருக்கிறது. ஹெச்.ராஜா ஓரிரு நாட்களுக்கு முன்தான் மாணவர்கள் விடுதியில் குண்டு வீசுவோம் என்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.


பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை, பாபர் மசூதி தீர்ப்பு, குடியுரிமை திருத்தம், கல்வி காவி மயமாவது என அனைத்துக்கும் ஜென்யு போராடியுள்ளது. அதாவது, அது இந்தியாவுக்காக போராடியுள்ளது. நாங்கள் இந்துக்களுக்காக போராடுகிறோம் என்பவர்கள் ஜெஎன்யு மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். சங்பரிவார் கூட்டம் பார்ப்பன, பனியா உள்ளிட்ட ஆதிக்க சாதிகள் நலனையே இந்து நலன் என்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இந்தியாவுக்காக போராடுபவர்களோடு இருப்போம்!

Karikalan R

JNU மாணவர்கள் மீது தாக்குதல் செய்யபட்ட போதே தெரியும் அதற்க்கு காரணம் ABVP தான் என்று தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் CAA-NRC-NPR க்கு எதிராக போராடும் மாணவர்கள் சங்க தலைவர்கள் மீது ஆர்எஸ்எஸ் ரவுடிகளை கும்பல் முகமூடி அணிந்து கொலைவெறி தாக்குதல் தொடுத்திருகாகிறது. இதில் JNU மாணவர் சங்க தலைவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கினாறனர் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர் அமைதியான போராட்டத்தை கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு அதன் மூலம் காவல்துறையை பல்கலைக்கழகத்திற்குள் அனுப்பி காட்டுமிராண்டிதனத்தில் ஈடுபட திட்டம் போட்டு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள் இந்த தாக்குதலை வண்மையாக கண்டிக்கிறோம் எல்லாவற்றும் ஒரு எதிர் வினை உண்டு என்று சொல்லி இந்த பாசிச குண்டர்களை எச்சரிக்கிறோம்.

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் லண்டன்

It all started on Saturday. A bunch of ABVP students suddenly started beating other students in the campus. And it happened again Sunday, first at the Admin Block, then the hostels, and then the goons ran amok in the campus.

In the evening on Sunday, we were having a public meeting for peace when they came and started assaulting the teachers and students. They even pelted stones. The miscreants then went around doing more of it in the hostels. And it just went on. There were people from outside too, and it was certainly an organised attack. Some four or five teachers are hurt, of which two are hurt severely. The number of injured students could well be over a hundred.

It was clearly a gang mobilized by the RSS, the BJP and the ABVP. A part of the same group had gathered outside the university gate and were shouting their usual slogans: kill the leftists, kill the anti-nationals, desh ke gaddaron ko, goli maaro saalon ko. The mob outside that was doing it was joined by ABVP students from inside the campus also. So who they were is clear.

Police has only been a mute spectator throughout. The only thing they have done is that they did not allow the mob to come inside. Students are telling me police was present in the hostels while they were being beaten up by the masked mobsters. They were just standing there, watching, not intervening, not stopping. People were beaten up brutally. Somebody was thrown from the first floor.

Furthermore, all what has happened has happened with the connivance of the university administration. They have not just actively let it happen, but participated in it. Teachers who are in administrative positions have been going around with these goons, directing them. Clearly, the administration is hand in glove with these people.

The university administration had tried everything to break the strike but failed. When nothing else worked, they brought in their goons. This VC has been unable to run the university, and is now resorting to such cowardly acts.

And the violence in JNU can’t be looked at in isolation. The incidents of violence in Jamia, AMU, and now JNU, make it crystal clear that the government is trying to crush the voices of reason arising out of universities. Universities are the places where people study, discuss, debate, and are naturally going to ask questions. That’s something this regime doesn’t like and that is why the universities have become their prime target.

– Vikas Rawal (Vikas Rawal is a professor at Centre for Economic Studies and Planning, Jawaharlal Nehru University)
(As told to Salik Ahmad) – Outlook

2 thoughts on “JNU வில் நடப்பது தெரிகிறதா?

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s