
இது 24.11.2017 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகங்களே துணை எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்புரை.
நூல்களை வாசிப்பது,
நூல்களை நேசிப்பது,
நூல்களை சுவாசிப்பது
என்று படிப்படியாக நூல்களுக்குள் நுழைவதை ஒரு அழகியல் ஒழுங்கோடு புதிய வாசகனுக்கு எப்படி பரிமாறுவது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஆம் என்றால் இது நீங்கள் கேட்க வேண்டிய ஓர் உரை.
இந்த உரையைக் கேட்கும் யாருக்கும் நாமும் நூல்களை வாசிக்க வேண்டும் எனும் எண்ணம் உருவாகாமல் போகாது. எனவே, கேளுங்கள்.
ஏனென்றால்,
நூல்களை விட சிறந்த நண்பன்,
நூல்களை விட சிறந்த வழிகாட்டி,
நூல்களை விட சிறந்த ஆசிரியன்,
நூல்களை விட சிறந்த உற்றோன்
வேறு இல்லை.
கேளுங்கள், கேட்கச் செய்யுங்கள்.