முட்டை அரசாங்கம்

அண்மையில் சென்னை புத்தகக் கண்காட்சியில் இருந்து மக்கள் செய்தி மையம் அரங்கு அநீதியாக நீக்கப்பட்டது. அதற்கு இசைவாக பபாசி தலைவர்களை தாக்க முயன்றதாக காரணம் கூறி வழக்கு தொடரப்பட்டது. அன்பழகனும் கைது செய்யப்பட்டார். இந்த அத்துமீறலை பலரும் தனித்தனியே கண்டித்திருந்தாலும், புத்தகக் கண்காட்சி வழக்கம் போல இயங்கியது. பின் அது ஒரு செய்தியாக கடந்து, மறந்தும் போனது.

ஆனால், மெய்யாகவே அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கும், புத்தகக் கண்காட்சியிலிருந்து மக்கள் செய்தி மையம் அரங்கு நீக்கப்பட்டதற்கும், அவர் பபாசி தலைவர்களை தாக்க முயன்றதாக கூறப்படும் காரணம் தான் உண்மையானதா? இல்லை. தமிழக அரசாங்கத்தின் ஊழலை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியதே காரணம்.

அவர் வெளிப்படுத்திய நூல்களில் ஒன்றான ‘முட்டை அரசாங்கம்’ எனும் நூல் இங்கு வெளியிடப்படுகிறது. ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பன பாதந்தாங்கிகளாகவும், அரசின் அடிவருடிகளாகவும் இயங்குவதே வெற்றிகரமானது என இலக்கணம் வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள் செய்தி மையம் அதற்கு மாறான பாதையில் பயணிப்பது வரவேற்கக் கூடியதே. அந்த வகையில் இந்நூல் முடை ஊடகங்களுக்கு எதிராகவும் இருப்பதால் .. .. ..

படியுங்கள் பரப்புங்கள்.

நூலின் முன்னுரையான உங்களுடன் பகுதியிலிருந்து,

.. .. .. இந்த நூல் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் பெற்ற தகவல்களை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் உருவானது.

ஏற்கனவே, மக்கள் ஏமாந்தார்களா ஏமாற்றப்பட்டார்களா?, கேடி சகோதரர்கள், கைப்புள்ள ஸ்டாலின், இருளில் தமிழகம், சகாயம் ஐ.ஏ.எஸ்(கிரானைட் ஊழல்), ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் சொத்துப் பட்டியல், கனிமவள மாஃபியா பிடியில் தமிழகம், குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் லீலைகள், மோசடி கட்சிகளுடன் மோடி, மும்மூர்த்திகளின் ஊழல் சாம்ராஜ்ஜியம், தமிழக அரசின் 15,000 கோடி சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், கேடி சகோதரர்கள் பாகம் 2, தமிழக அரசின் 50,000 கோடி ஊழல், சின்னையா கரிகாலன் கூட்டுக் கொள்ளை, அதிமுக அரசின் ஒரு லட்சம் கோடி மெகா ஊழல் ஆகிய பதினைந்து நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

.. .. .. தமிழக அரசின் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடக்கும் போது சுட்டிக் காட்டுவதும், நல்லது நடக்கும் போது பாராட்டுவதும், பத்திரிக்கையாளரின் ஜனநாயகக் கடமை. அதேபோல எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை சுட்டிக் கட்டுவதும் பத்திரிக்கையாளனின் கடமை தான்.

.. .. .. கிருஸ்டி ஃபூட்ஸ் குராரசாமியின் முட்டை அரசாங்கம் எனும் புத்தகம் பத்திரிக்கையாளர் என்ற கோணத்தில் மட்டுமே எழுதப்பட்டு உங்களிடம் தவழ்கிறது.

நூலை பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s