தில்லியில் மூன்றாவது நாளாக வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 17 பேர் கொலை செய்யப்பட்டு விட்டனர். ஆம்புலன்ஸ்கள் கூட விடாமல் தாக்கப்படுகின்றன. காணொளிக் காட்சிகளைப் பார்க்கும் போது மனம் பதறுகிறது என்று தங்களை சாதாரண மக்களாக கருதிக் கொள்வோர் தெரிவிக்கிறார்கள். மீண்டும் மீண்டூம் பிடிவாதமாக இரண்டு தரப்புக்கும் இடையே நடக்கும் கலவரம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் உண்மை என்ன? கொலைவெறி ஆட்டம் ஆடுவதொன்றும் காவி பயங்கரவாதிகளுக்கு புதியதல்ல. அதன் விளைவை அரசு, … கொலைவெறியால் முடிக்க நினைக்கும் காவி பயங்கரவாதிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாதம்: பிப்ரவரி 2020
பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது என்பது அரசுகள் பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கை. அந்தக் கொள்ளை, மன்னிக்கவும் கொள்கை சரியா தவறா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நட்டமடைந்து விட்டது அதனால் விற்கிறோம் என்பது எளிதான பதிலாக இருக்கிறது. ஆனால் ஏன் நட்டமடைந்தது என்பதை அரசு மக்களுக்கு விளக்குவதே இல்லை. உலகிலேயே பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சரவையை ஏற்படுத்திய முதல் அரசாங்கம் பாஜக அரசாங்கம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். (வாஜ்பேயி அமைச்சரவையில் அருண்ஷோரி என்பவர் … பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆயிரம் அமுல்யாக்கள் வரட்டும்
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத எல்லை கடந்து அனைத்து மக்களும் இந்திய உணர்வோடு போராடும் இந்தப் போராட்டத்தை ஒரு மதப் போராட்டம் போல் சித்தரிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அது ஒரு பக்கம் இருந்தாலும் நின்று போகாமல் இடையறாது போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக கர்னாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 20ம் தேதி (20.02.2020) ஒவைசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒரு போராட்டத்தில் கலந்து … ஆயிரம் அமுல்யாக்கள் வரட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
சிவாஜி யார்?
கோவிந்த் பன்சாரே. கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ம் தேதி காலை நடை பயிற்சியை மேற்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட மராட்டிய கம்யூனிச தலைவர்களில் ஒருவர். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 20ம் தேதி மரணமடைந்தார். ஏன் அவர் கொல்லப்பட்டார்? பார்ப்பனியத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தவர். கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கோட்சேவை ஆராதிக்கும் மனோநிலையின் ஆபத்து குறித்து உரையாற்றினார். அப்போது ஏபிவிபி குண்டர்களால் … சிவாஜி யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
விருப்பப்பட்ட வேலை வேண்டுமா இளைஞர்களே?
முன் குறிப்பு: இந்தக் கட்டுரை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் எழுதி சில காரணங்களுக்காக வெளியிடாமல் வைத்திருந்தேன். தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், மாணவர்கள், இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் குறித்த அடிப்படை புரிதலை இக் கட்டுரை வழங்கும். வியாபம் ஊழல் எப்படி கோடிக்கணக்கான மாணவர்களின் கல்வி எனும் உழைப்பை மிகக் கொடூரமாக சுரண்டியதோ, அதே போலவே, தமிழ்நாட்டின் டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளும் கொடூரமான சுரண்டலே. ஆனால், மாணவர்கள் இளைஞர்களிடமிருந்து இதற்கு போதிய … விருப்பப்பட்ட வேலை வேண்டுமா இளைஞர்களே?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஏவல் நாய்கள்
தில்லி ஜாமியா மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய போது காவல்துறை கண்மூடித் தனமாக தாக்கியது. காவல் துறை உயர் அதிகாரிகளும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதை மறுத்தனர். காவலர்களே தீ வைக்கும், கல்லெறியும், காணொளிகள் இணையத்தில் வெளியாயின. இரண்டு மாதங்களைக் கடந்த பின்னும் காவல்துறை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மெரீனா எழுச்சியின் போது கூட காவல் துறையினர் வாகனங்களை அடித்து நொறுக்கும், வாகனங்களுக்கு தீ வைக்கும், குடிசைகளை சேதப்படுத்தும், திருடும் காணொளிகள் வெளியாகி … ஏவல் நாய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
என்ன செய்கிறீர்கள் இடதுசாரிகளே?
நேற்று (14 பிப்ரவரி 2020) இரவு சென்னை வண்ணார்பேட்டையில் நடந்து கொண்டிருந்த தொடர் போராட்டத்தில் காவல் துறையினர் உட்புகுந்து கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டிருந்தாலும், தமிழ் நாட்டில் இது முதல் கொலை. அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட போராட்டம் என்கிறார்கள். போராட்டம் நடத்துவதற்கு மக்கள் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்? அப்படி ஏதாவது ஒரு … என்ன செய்கிறீர்கள் இடதுசாரிகளே?-ஐ படிப்பதைத் தொடரவும்.
எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?
இன்றைய (15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை) தமிழ் இந்து நாளிதழின் கூட வரும் சொந்த வீடு இணைப்பிதழின் முதல் பக்கத்தில் பயோ செப்டிக் டேங்க் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் வாசகங்களைப் பாருங்கள். .. .. .. இந்த அசுத்தத்தின் மூலம் அசுரர்கள் நாம் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று மூலம் நம் உடலில் புகுந்து ஆதிக்கம் செய்து .. .. .. .. .. .. நம் வேதத்தில் கண்டுள்ள முறைப்படி தேவ … எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.
டிஎன்பிஎஸ்சி: தமிழ் நாட்டின் வியாபம்
முன்குறிப்பு1: தமிழ் நாட்டின் வியாபம் ஊழல் என்று கூறத்தக்கதாக டி.என்.பி,எஸ்,சி முறைகேடுகள் இருக்கிறது. வெளிவந்திருப்பது ஒரு நுனி தான் என்பதில் உய்த்துணரும் திறன் கொண்ட யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. முறையாக விசாரிக்கப்பட்டால் கல்வி அமைச்சர், ஐ.பி.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 1800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதையும், முதல்வர், ஆளுனர் உள்ளிட்ட மிகு அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும், 2000 கோடிக்கு மேல் முறைகேடு என கணக்கிடப்பட்டிருப்பதையும், 400 க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகி … டிஎன்பிஎஸ்சி: தமிழ் நாட்டின் வியாபம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
வெறிபிடித்து அலையும் காவல்துறை
"மர்ம உறுப்பை குறி வைத்து தாக்கினார்கள்", கேட்கும் போதே காதில் அமிலத்தை ஊற்றியதை போல் இருக்கிறது. தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவி தான் இப்படி கதறுகிறார். ஜாமியா மில்லியா மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று பிப்ரவரி 10 ஆம் தேதி காலை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளனர். பாராளுமன்றம் நடைபெற்று வருவதால் கவன ஈர்ப்பாக இருக்கும் என இந்தப் போராட்டம். … வெறிபிடித்து அலையும் காவல்துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.