
இன்றைய (15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை) தமிழ் இந்து நாளிதழின் கூட வரும் சொந்த வீடு இணைப்பிதழின் முதல் பக்கத்தில் பயோ செப்டிக் டேங்க் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் வாசகங்களைப் பாருங்கள்.
.. .. .. இந்த அசுத்தத்தின் மூலம் அசுரர்கள் நாம் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று மூலம் நம் உடலில் புகுந்து ஆதிக்கம் செய்து .. .. ..
.. .. .. நம் வேதத்தில் கண்டுள்ள முறைப்படி தேவ இனத்தைச் சார்ந்த நுண்ணுயிர்களைக் கொண்டு அசுர நுண்ணுயிர்களை அழிக்கும் முறை இது.
.. .. .. எங்களது மேக் பயோ டைஜெஸ்டர் செப்டிக் டேங்க் அசுர நுண்ணுயிர்கள் இல்லாத நீரை வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் மாசு அடைவதில்லை.
இந்த விளம்பரத்தை எப்படி அனுமதித்தார்கள்? விளம்பரம் என்றால் எதை வேண்டுமானாலும் வெளியிடுவார்களா? நாம் இது போல் எதையாவது விளம்பரம் என்ற பெயரில் எழுதிக் கொடுத்தால் ‘இந்து’ நிர்வாகம் வெளியிடுமா?
யார் அசுரர்கள்? யார் தேவர்கள்? அவர்கள் கூறும் கதைகளின் படி இது அசுர பூமி, விளம்பரம் கொடுத்திருப்பவர் தன்னை மனுநீதி என அடைமொழியிட்டு அழைக்க விரும்பும் மாணிக்கம் எனும் அசுரர். ஆனால் அவர் நம் வேதத்தில் என்று குறிப்பிடுவது எதை?
மனித இனம் நோயின்றி வாழ வாழ்த்துக்களாம். அசுரர்கள் மனிதம் இனம் இல்லை என்று சொல்கிறார்களா? தேவ நுண்ணுயிர்கள் அசுர நுண்ணுயிர்கள் என்று ஏதாவது அறிவியல் கட்டுரை இருக்கிறதா?
ஏற்கனவே, இராவண வதம் என்ற பெயரிலும், நரகாசுரனையும், மன்னன் மாவலியையும் கொன்றதை விழாவாக கொண்டாடும் கலாச்சாரத்தை உருவாக்கி அதை கடவுள் நம்பிக்கை, பக்தி என்ற பெயரில் செயல்படுத்தி வரும் பார்ப்பன பண்பாட்டுப் பதர்கள், வெளிப்படையாக தங்கள் அடுத்த படையெடுப்பை தொடங்கியிருக்கிறார்களா?
குடியுரிமை திருத்த சட்டம் எனும் ஒன்றைக் கொண்டு வந்து அது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது போல் போக்கு காட்டி அவர்கள் அழிக்க விரும்புவது யாரை? என்ன மாதிரி சமூகத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்பதை இந்த விளம்பரம் சுட்டிக் காட்டுகிறதா?
அடி செருப்பால, எங்க இடத்துல வந்து எங்களையே கிருமி மாதிரி அழிக்கனும் சொல்ல என்ன தைரியம்டா உங்களுக்கு?
