
தில்லி ஜாமியா மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய போது காவல்துறை கண்மூடித் தனமாக தாக்கியது. காவல் துறை உயர் அதிகாரிகளும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதை மறுத்தனர். காவலர்களே தீ வைக்கும், கல்லெறியும், காணொளிகள் இணையத்தில் வெளியாயின. இரண்டு மாதங்களைக் கடந்த பின்னும் காவல்துறை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மெரீனா எழுச்சியின் போது கூட காவல் துறையினர் வாகனங்களை அடித்து நொறுக்கும், வாகனங்களுக்கு தீ வைக்கும், குடிசைகளை சேதப்படுத்தும், திருடும் காணொளிகள் வெளியாகி இருந்தன. இது வரை எந்த நடவடிக்கையாவது எடுக்கப்பட்டிருக்கிறதா?
தில்லி ஷஹீன் பாக் இலும், சென்னை வண்ணார் பேட்டையிலும் காவலர்கள் பெண்களின் மறைவிடங்களை இலக்காக வைத்து தாக்கி இருக்கிறார்கள். இதை பல பெண்கள் கூறும் நேருரைகள் காணொளிகளாக வெளி வந்திருக்கின்றன. இந்தக் கொடூரங்களுக்கு எதிரான நடவடிக்கை ஏதாவது இருக்குமா? எதிர்பார்க்கத் தான் முடியுமா?
அன்றிலிருந்து இன்று வரை காவல்துறைக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பழைய பானையின் புளித்த காடிக்குள் ஊற வைக்கப்படுகின்றன.
இதே இன்னொரு ஆதாரமாக தில்லி ஜாமியாவின் பழைய நூலக கட்டிடத்தினுள் நுழைந்து காவலர்கள் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை தாக்கும் காணொளி வெளிவந்திருக்கிறது.
ஆனால் அமித்ஷா நேற்று கூறியிருக்கிறார். போலிஸ் மக்களின் உற்ற நண்பன் என்று. நீங்களே முடிவு செய்யுங்கள், அவர்கள் நண்பர்களா? ஏவல் நாய்களா? என்பதை. வெறிநாய்களை என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
வைரல் விடியோ: தில்லி காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி மாணவர் வழக்கு
https://m.dailyhunt.in/news/india/tamil/dinamani-epaper-dinamani/vairal+vidiyo+tilli+kaval+turaiyinarukku+ethiraga+roo+1+kodi+izhappeedu+kori+manavar+vazhakku-newsid-166301094