
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது என்பது அரசுகள் பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கை. அந்தக் கொள்ளை, மன்னிக்கவும் கொள்கை சரியா தவறா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நட்டமடைந்து விட்டது அதனால் விற்கிறோம் என்பது எளிதான பதிலாக இருக்கிறது. ஆனால் ஏன் நட்டமடைந்தது என்பதை அரசு மக்களுக்கு விளக்குவதே இல்லை.
உலகிலேயே பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சரவையை ஏற்படுத்திய முதல் அரசாங்கம் பாஜக அரசாங்கம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். (வாஜ்பேயி அமைச்சரவையில் அருண்ஷோரி என்பவர் பொதுத்துறை நிறுவங்கள் விற்பனை துறை அமைச்சராக இருந்தார்)
கனிம வளங்கள் தனியாருக்கு .. .. ..
கல்வி தனியாருக்கு .. .. ..
மருத்துவம் தனியாருக்கு .. .. ..
எல்லாம் தனியாருக்கு, இராணுவமும் போலீசும் மட்டும் அரசு வசம்.
இது தான், இந்தக் கொள்கை தான் மக்களை வறுமையிலிருந்து மீட்கும் என்பது எல்லா அரசும் ஓயாமல் செய்து வரும் பிரச்சாரம். இப்படி பிரச்சாரம் செய்து மக்களை ‘கனிய’ வைக்கும் தேவை கூட ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது பாசிசம் கோலோச்சுகிறது. மக்கள் பாசிசத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசின் கைவசம் இருக்கும் அனைத்தும் தனியாருக்கு கைமாற்றி விடப்படுகிறது.
இதை பி.எஸ்.என்.எல்.லில் நடந்ததை விளக்குவதன் மூலமாக சொல்கிறார் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்லப்பா. இது கடந்த ஆண்டு செய்த வேலை நிறுத்தத்தின் போது ஆற்றிய உரை. ஒவ்வொரு நிறுவனத்துக்குள்ளும் இது தான் நடக்கிறது எனும் போது இது கால எல்லையை கடக்கிறது.
கேளுங்கள், கேட்கச் செய்யுங்கள்.