Interstellar: திரைப்படத்தை முன்வைத்து

இண்டர்ஸ்டெல்லர் என்றால் விண்மீன்களுக்கு இடையேயான பயணம் என்று பொருளாம். அறிவியல் புனைகதைகள் ஈர்ப்பு மிக்கவைகள். அவைகளின் கதைக் களம் மூன்றாம் தர மசாலை நெடியுடன் இருந்தாலும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் புனைவு நம் கற்பனைகளை விரிக்கும் என்பதால், அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டும் என்பதால் அவைகளின் மீதான ஈர்ப்பு குறைவதில்லை. அந்த வகையில் இண்டர்ஸ்டெல்லர் மிகச் சிறந்த படமாக கொள்ளலாம். இது 2014ல் வெளிவந்த படம். ஆங்கிலப் படங்களை பார்த்து தோராயமாக புரிந்து கொள்ள மட்டும் தான்…

கொரோனாவே வெட்கப்படும் ஊழல் கிருமிகள்

கடந்த இரண்டு நாட்களாக, ரேபிட் கிட் எனப்படும் விரைவு பரிசோதனைக் கருவி வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் நாளிதழ்களிலோ, காட்சி ஊடகங்களிலோ இவை குறித்து பெரிதாக எந்தவிதமான செய்திகளோ விவாதங்களோ நடைபெறவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டு நாளிதழ்கள் அனைத்தும் ராகுல் காந்தி, ஸ்டாலின் ஆகியோரின் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளன. மாறாக தலையங்கமாகவோ, கட்டுரையாகவோ, பொதுச் செய்தியாகவோ இதை வெளியிடவில்லை. இதன் பொருள் என்னவென்றால், எதிர்கட்ட்சிகள் தான் இதில் முறைகேடுகள் இருப்பதாக…

ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய கலாசாரக் கட்டங்கள்

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 5 மனித குலத்தின் ஏடறியா வரலாற்றுத் துறையில் திட்ட வட்டமான ஒழுங்குமுறையை நுட்பமான அறிவுடன் புகுத்த முயன்றவர்களில் மார்கனே முதல்வராவார். முக்கியமான ஆதாரங்கள் இனிமேல் கிடைத்து, திருத்தங்களுக்கு அவசியம் ஏற்பட்டாலொழிய அவருடைய பகுப்புமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று எதிர் பார்க்கலாம். காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை என்னும் மூன்று பிரதான சகாப்தங்களில் அவர் முதல் இரண்டு நிலைகளைப் பற்றியும் மூன்றாவது நிலைக்கு மாறிச் செல்வதைப்…

நமக்கான மாற்று ஊடகம்

கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும். கம்யூனிச கல்வி இயக்கம் கோயம்புத்தூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், “கருத்துப் பரப்பலில், அணி திரட்டலில் சமூக வலைத் தளங்களின் பங்கு” தோழர் கீற்று நந்தன் ஆற்றிய உரையின் நூல் வடிவம் இது. அச்சு காட்சி ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும், அவர்களின் அடிவருடிகளின் கைகளிலும் இருக்கின்றன. என்றாலும் அதே கார்ப்பரேட்களின் கைகளில் இருக்கின்ற சமூக ஊடகங்களை மக்கள் தங்கள் செய்திகளை கொண்டு செல்ல பரவலாக்க பயன்படுத்த முடியும்….

உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி

இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1870ல் இதே நாளில் (ஏப்ரல் 22) ரஷ்யாவில் ஓடும் வால்கா ஆற்றின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யானவ் – மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விளாடிமிர் இலீச் உல்யானவ் என்று பெயரிட்டனர் பெற்றோர். பின்னர் அந்தக் குழந்தை வளர்ந்து தனக்குத் தானே ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டது. உலகத் தொழிலாளர்களின் ஒப்புயர்வற்ற தலைவனும், மார்க்சிய கோட்பாடுகளை செழுமைப்படுத்தியதோடு மட்டுமன்றி, சோவியத் புரட்சி…

ஊரடங்கின் பின் மக்களின் பாடு

கொரோனா பரவலை தடுக்கும் முகமாக இரண்டாவது ஊரடங்கு காலம் நடப்பில் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் நோய்த் தொற்றின் அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். காய்கறி உள்ளிட்ட தள்ள முடியாத தேவைகளுக்கு மக்கள் வெளியில் வந்தாக வேண்டியதிருக்கிறது. மக்களின் இந்த தேவையை மதிக்காத அரசு, அவர்களின் தேவையை வீடுகளுக்கே சென்று தீர்த்து வைக்க முடியாத அரசு, மக்கள் மீது சமூக விலக்கலை மதிக்காமல் அலைகிறார்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு ஏதாவது அறுகதை இருக்கிறதா? அன்றாட உழைக்கும் மக்களுக்கு அவர்களின்…