
தங்கள் தோல்வியை மறைக்க ஊடகங்கள் துணையுடன் இஸ்லாமிய வெறுப்பை பரப்பி வருகிறது அரசு. மக்கள் முன்வைக்கும் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பது தங்கள் கடமையல்ல என்று கறாராகவும், கண்ணும் கருத்துமாகவும் செயல்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அரசு, தில்லி தப்லீக் மாநாட்டை முன் வைத்து கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்பது போன்ற, வைரஸ் ஜிகாத் என்பது போன்ற வதந்திகள் மூலை முடுக்கெங்கும் பரவுவதை வேடிக்கை பார்க்கிறது. தப்லிக் மாநாட்டுக்கு முன்னும் பின்னும் ஏராளமான மக்கள் கூடும் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவை எதனையும் கேள்விக்குள்ளாக்காத ஊடகங்கள் தப்லீக் மாநாட்டை மட்டும் உள்நோக்கத்துடன் பரப்பி வருகின்றன.
இதன் எதிர்வினைகள் மிக ஆபத்தாக எதிரொலிக்கிறது. மருத்துவம் பார்க்க மறுத்த மருத்துவர், உணவுப் பொருட்கள் கொண்டு வந்தவர்களை எல்லையில் தடுத்து நிருத்திய கிராம மக்கள் என்று செய்திகள் வருகின்றன. சமூகத்தை, மக்களை நேசிக்கும் அனைவருக்கும் இது கேடான குறியீடு, வெட்டி எரிக்க வேண்டிய களை.
மக்கள் இசை அதனை நோக்கி பயணப்படுகிறது என்பதற்கு இந்தப் பாடல் ஓர் எடுத்துக்காட்டு. இப்பாடலை உருவாக்கியவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை. யூடியூபில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. வாட்ஸ் ஆப் மூலம் ஒரு நண்பர் அனுப்பிய பாடல் இது. எனவே, நானே ஏற்றி விட்டேன்.
பாருங்கள். பரப்புங்கள்.