கொரோனாவை விட கொடூரம்

பீலா ராஜேஷ். இது இடுகுறிப்பெயரா? காரணப் பெயரா?

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஊரடங்கின் பிறகு அது மட்டுப்பட்டிருக்கிறதா? என்பது இனிமேல் தான் தெரிய வேண்டும்.

இது குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தினமும் ஊடகங்களுக்கு அளித்து வருகிறார். முன்னர் ஊடகங்களுக்கு விவரம் அளிப்பதை அந்தத் துறையின் அமைச்சர் விஜய பாஸ்கர் தான் செய்து வந்தார். இவர் மாறி அவர் வந்ததும் தில்லி தப்லீக் மாநாடு குறி வைக்கப்பட்டது. தினமும் தில்லி தப்லீக் மாநாட்டின் பாதிப்பாளர்கள் குறித்த தகவல் இடம்பெறாமல் இருந்ததே இல்லை. இதுவும், சமூக ஊடகங்களில் சங்கிகள் திட்டமிட்டு கொரோனாவையும் இஸ்லாமியர்களையும் இணைத்துச் செய்த வெறுப்பு பரப்புரை செய்ததும் இணைந்தே இஸ்லாமியர்களே கொரோனா பரவலுக்கு காரணம் என்ற கருத்தை மக்கள் மனங்களில் விதைத்தது.

முதலில், தமிழ்நாட்டிலிருந்து தில்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆயிரத்தும் மேற்பட்டோர் அவர்களில் 551 பேரை அடையாளம் கண்டுவிட்டோம், மீதியுள்ள அறுநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் செல்லிடப்பேசிகளை அணைத்து வைத்திருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றார் பீலா ராஜேஷ். அதேநேரம் தில்லி அரசு மாநாட்டில் மொத்தம் கலந்து கொண்டவர்கள் 2,500 பேர் அதில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்கள் 501 பேர் என்று அறிவித்தது. என்றாலும், பீலா ராஜேஷ் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியா டுடே ஆங்கிலப் பத்திரிக்கையும் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்கள் 500 பேர் தான் என்பதை உறுதிப்படுத்தியது.

இதன் பின்னர் நேற்று தகவல் அளித்த பீலா ராஜேஷ் தில்லி தப்லீக மாநாடு என்ற பெயரைக் குறிப்பிடாமல் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று வந்தவர்கள் என்று கூறினார். ஆனாலும் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகம் தான். அதாவது, தில்லி தப்லீக் மாநாடு என்று குறிப்பிட்டு விபரம் கூறுவது அதுவும் அரசே அவ்வாறு தகவல் அளிப்பது தவறு என்று பலரும் கருத்து தெரிவித்த பின்னர், வேறு வழியில்லாமல் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று வந்தவர்கள் என்று குறிப்பிட்டார். கேட்போருக்கு அது தில்லி தப்லீக் மாநாடு தான் என்று வெளிப்படையாகத் தெரியும். நேற்று முதல்வர் பழனிச்சாமி குறிப்பிடும் போது, அரசு கூறும் அந்த எண்ணிக்கை தோராயமானது தான் என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றார்.

ஊடகங்கள் எதுவும் பீலா ராஜேஷிடம் தில்லி அரசு அறிவித்த, இந்தியா டுடே பத்திக்கை கூறிய எண்ணிக்கைக்கும், நீங்கள் கூறிய எண்ணிக்கைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறதே ஏன்? என்ற கேள்வியை ஒருவர் கூட எழுப்பவில்லை. ஊரடங்குக்கு முன்னும் பின்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்திருக்கும் போது அந்த மாநாட்டை மட்டும் ஏன் திரும்பத் திரும்ப வெளிப்படுத்தினீர்கள்? என்ற கேள்வியை ஒருவர் கூட எழுப்பவில்லை. தில்லி அரசு மருத்துவர் ஒருவர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கோரானா பாதிப்பு இல்லை என்று கூறும் காணொளிக் காட்சி வெளியானது. தமிழ்நாட்டில் தில்லியிலிருந்து வந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தோருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் தங்கள் யாருக்கும் எந்தவித சோதனையும் செய்யவில்லை, ரத்த மாதிரி கூட எடுக்கவில்லை, தடுத்து மட்டுமே வைத்திருக்கிறார்கள். என்று காணொளிக் காட்சி வெளியிட்டார்கள். பீனிக்ஸ் மால் போய் வந்த 3,500 பேருக்கு மூன்றே நாளில் சோதனை எடுத்து முடிந்து யாருக்கும் பாதிப்பு இல்லை என வெளியிட முடிந்திருக்கும் போது தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடமும் அதை செய்திருக்கலாமே. இல்லாத அறுநூற்றுக்கும் அதிகமானோரை கற்பனையில் உருவாக்கி, அவர்களை செல்லிடப்பேசியை அணைக்க வைத்து, பிம்பத்தை உருவாக்கி, ஏன் இந்த பித்தலாட்டம்? சுகாதாரத்துறை அமைச்சரை விலக்கி விட்டு அந்த இடத்தில் பீலா ராஜேஷ் வந்து அமர்ந்ததும், கவர்னரை சந்திக்கும் போதும், பிரதமரை சந்திக்கும் போதும் துறை அமைச்சரை அழைத்துப் போகாமல் பீலா ராஜேஷ் அழைத்துப் போனதன் காரணம் இந்த திட்டமிடலில் இருந்து தானா?

அரசே திட்டமிட்டு இஸ்லாமியயர்கள் மீது பழி போட்டு அவர்களை சமூக ரீதியில் தனிமைப்படுத்த எல்லா வேலைகளியும் செய்திருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. ஏன் இந்த அரசு அவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இந்த உரையில் வே.மதிமாறன் அவர்கள் தெளிவான வரலாற்றுக் காரணத்தை முன் வைக்கிறார்.

ஓட்டு வாங்கி விட்டால் மட்டும் நாட்டுப்பற்று அதாவது அவர்கள் கூறுவது போல் ‘தேஷ்பக்த்’ வந்து விடுவதில்லை. அது நாட்டின் மக்களை நேசிப்பதில் இருக்கிறது என்பதை நாம் தான் இந்த தேச விரோதிகளுக்கு உறைப்பது போல் கூற வேண்டும். பாருங்கள், பரப்புங்கள்.

2 thoughts on “கொரோனாவை விட கொடூரம்

 1. தோழர் ஒருவர் இந்த கேட்பொலியை கேட்டுவிட்டு ஒரு கருத்தை முன்வைத்தார். அமெரிக்காவில் சீனர்களை தாக்குவது போன்ற காணொளிகள் இருக்கின்றன. ட்ரம்பே சீன வைரஸ் என்று தான் கூறிக் கொண்டிருந்தார். எனவே, இந்தியாவைத் தவிர வேறெங்கும் அவ்வாறு இல்லை எனக் கூற முடியாது என்று.

  விதி விலக்குகள் எல்லா இடத்திலும் இருக்கும். அமெரிக்க மக்களின் பொதுக் கருத்தாக அது இல்லை. ட்ரெம்பே அவ்வாறு கூறினாலும், அது பொதுக் கருத்தாக ஆகவில்லை. ஆனால் இந்தியாவின் நிலை அவ்வாறு இல்லை. மக்கள் அதை ஏற்கத் தொடங்குகிறார்கள். ஏற்றுக் கொள்வார்களோ எனும் பயம் இஸ்லாமியர்களுக்கு வருகிறது. ஏற்க வைக்கும் வேலையை சங்கிகள் திட்டமிட்டு தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்தியா போல வேறெந்த நாட்டிலும் இவ்வாறு நடக்கவில்லை. இது தான் எதார்த்தம்.

  நன்றி.

 2. ஊடகவியலாளர் கவின் மலர் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்

  தமிழக அரசு ஏன் தமிழக மக்களை இவ்வளவு குழப்புகிறது ???

  தில்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1200 பேர் கலந்து கொண்டார்கள் என்றும் அவர்களில் 1103 பேர் தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொண்டார்கள் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா இராஜேஷ் அவர்கள் ஏப்ரல் 01ஆம் தேதி ஊடகங்கள் முன் தெரிவித்தார்கள்.

  பின் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் முறையே

  ஏப்ரல் 1 – 110பேருக்கும்

  ஏப்ரல் 2 – 74 பேருக்கும்

  ஏப்ரல் 3 – 101பேருக்கும்

  ஏப்ரல் 4 – 73பேருக்கும்

  ஏப்ரல் 5 – 85பேருக்கும்

  ஏப்ரல் 6 – 48பேருக்கும்

  ஏப்ரல் 7 – 67பேருக்கும்

  ஆக மொத்தம் இதுவரை டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 558பேருக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களுக்கு பீலா இராஜேஷ் பேட்டிகொடுத்தார்.

  ஆனால் இன்று கூடுதலாக ஒரு செய்தியை சொன்னார்.

  அதாவது “தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 961 பேருக்கு கொரனோ தொற்று இல்லை” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றார்.

  மொத்தம் பரிசோதித்ததே 1103 பேருக்கு தான் என்று இவரே ஏப்ரல் 01 ஆம் தேதி சொல்லிவிட்ட்ய் இன்று 961பேருக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்.

  அப்படியென்றால் மீதம் 1103-961= 142 பேருக்கு தானே கொரானோ இருக்கவேண்டும்.

  பின் எப்படி 558 பேருக்கு கொரனோ என்று இத்தனை நாள் சொன்னீர்கள் ????

  எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வித்தியாசம் வருகிறதே ???

  மேலும் அடுத்த கேள்வியாக 558 – 142 கழித்தால் 416பேர் வருகிறார்களே… இவர்களெல்லாம் யார் ???

  தமிழக அரசு தான் விளக்க வேண்டும்.

  மே 17 இயக்கம்
  9884072010

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s