
கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும்.
கம்யூனிச கல்வி இயக்கம் கோயம்புத்தூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், “கருத்துப் பரப்பலில், அணி திரட்டலில் சமூக வலைத் தளங்களின் பங்கு” தோழர் கீற்று நந்தன் ஆற்றிய உரையின் நூல் வடிவம் இது.
அச்சு காட்சி ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும், அவர்களின் அடிவருடிகளின் கைகளிலும் இருக்கின்றன. என்றாலும் அதே கார்ப்பரேட்களின் கைகளில் இருக்கின்ற சமூக ஊடகங்களை மக்கள் தங்கள் செய்திகளை கொண்டு செல்ல பரவலாக்க பயன்படுத்த முடியும். அதை எப்படி செய்ய வேண்டும்?, அதில் இருக்கும் பிரச்சனைகள் என்ன?, அவற்றை எவ்வாறு நாம் எச்சரிக்கையோடு கையாள வேண்டும்? என்பன போன்ற விவரங்களை மிக எளிமையாக தந்திருக்கிறார்.
கணிணி, ஸ்மார்ட்போன், பிராட்பாண்ட் கனெக்சன் இவற்ரையெல்லாம் ஆடம்பரம் என்று இடதுசாரிகளில் பலர் கருதுகிறார்கள். அல்லது அவற்றையெல்லாம் பழகிக் கொள்வதற்கு சோம்பல் படுகிறார்கள். சமூக அரசியல் போராளிகள் நிறைய பேர் ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கமே செல்வதில்லை. பிறகு நாம் எப்படி ஒரு கருத்தை கட்டமைப்பது? வெகு மக்களை மிக எளிதாக சென்று சேரக் கூடிய ஊடகத்தை நாம் புறக்கணித்தால் நம்முடைய கருத்துகளை எப்படி பரப்புவது? நமக்காக முதலாளித்துவ ஊடகங்களா பிரச்சாரம் செய்யும்?
என்று கேள்வி எழுப்புகிறார். தோழர் கீற்று நந்தன். மென்பொருள் பொறியாளரான தோழர் நந்தன். கீற்று இணைய தளத்தை நடத்தி வருகிறார். பொன்னுலகம் பதிப்பகம் இதை நூலாக்கி 30 ரூபாய் விலையில் வெளியிட்டிருக்கிறது.
படியுங்கள், பரப்புங்கள்.