
எல்லா ஊடகங்களின் சின்னங்களிலும் தாம் நடுநிலையான செய்திகளை வழங்குவதான ஒரு குறியீடு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எல்லாக் காலங்களிலும் செய்தி ஊடகங்கள் பக்கச் சார்போடு தான் இருந்தன, இருக்கின்றன, இருக்கும். ஆனால் அந்த பக்கச் சார்பு எந்தப் பக்கம் என்பது தான் பிரச்சனை. ஒருபோதும் அவை மக்கள் பக்கம் நின்றதே இல்லை. அதேநேரம் எந்தப் பக்கமும் சாயாமல் நேர்மையோடு செய்திகளை வழங்கிக் கொண்டிருப்பதாக நம்பவைக்க முயல்கின்றன. இதன் மறுபக்கமாக ஊடகங்கள் எந்தப் பக்கச் சார்போடு இருக்கின்றனவோ, அந்தப் பக்கச் சார்போடு இருப்பதற்கு மக்களை உளவியல் ரீதியாக ஆயத்தப்படுத்தவும் செய்கின்றன.
இதை தெளிவாகவும், எளிமையாகவும் விளக்குகிறார் உளவியல் ஆற்றுப்படுத்துனர் தோழர் வில்லவன் ராமதாஸ். (தேஷ் பக்தாள் யூ டியூப் சேனல்)
பாருங்கள், பரப்புங்கள்.