பெனிக்ஸ், பிளாய்ட் ஆவாரா?

ஒவ்வொறு முறையும் அது மிக நிதானமாக, எல்லையில்லா வெறியுடன் பாய்ந்து குதறுவதும், பின் பதட்டமே இல்லாமல் தன் பற்களில் சொட்டும் குருதியை நாவால் தடவி ருசித்துக் கொண்டு கடந்து செல்வதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதை அடக்க முடியாது, பாய்ந்து குதறுவதற்காகவே அதை பழக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அது யார் மீது பாய்ந்து சிதைத்து துப்பி இருக்கிறது என்பதைக் கொண்டு (என்கவுண்டர்கள், கழிப்பறையில் வழுக்கி விழுவது போன்ற நிகழ்வுகளில்) பூப் போட்டு வாழ்த்துவதும் (ஜெயராஜ், … பெனிக்ஸ், பிளாய்ட் ஆவாரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

வறுமை சூழுது… ஜாக்கிரதை!

மக்கள் என்ன தேவையைக் குறைத்தாலும் குறைக்க முடியாத தேவை உணவுத் தேவை என்று சொல்லப்படுவது உண்டு. அதேசமயம், சமூகத்தில் என்ன மாற்றம் நடந்தாலும் அது உடனடியாகப் பிரதிபலிப்பதும் உணவுச் சந்தையில்தான். உணவுப் பொருட்கள் விற்பனை எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டின் செல்வந்த நகரமான கோவை வியாபாரிகளிடம் பேசினேன். சையது - ஜாகீர் உசேன் சகோதரர்கள், அரிசி வணிகர்கள். ஊரடங்கு வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் மக்கள் கூட்டம் அலைமோதியதை வெச்சு, அரிசி யாவாரிங்க காட்ல அடைமழைதான்னு சொன்னாங்க. ஆரம்பத்துல அப்படித்தான் இருந்துச்சு. … வறுமை சூழுது… ஜாக்கிரதை!-ஐ படிப்பதைத் தொடரவும்.

எல்லைச் சிக்கலின் முரண்பாடுகள்

சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று கூறிக் கொண்டு, பயன்பாடு தீர்ந்த அல்லது பயன்பாடு குறைந்த பொருட்களை   ஒளிப்பதிவு கருவிகளின் முன் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள். அதாவது, அரசு சீனாவுக்கு எதிராக இருக்கிறது என்றும், சீனாவின் பொருளாதாரத்தை குலைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். மெய்யாகவே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைச் சிக்கலில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கிறது என்றால், இந்தியாவுக்கான சீனத் தூதரை அழைத்து கண்டிக்கலாம், சீனாவுக்கான இந்தியத் தூதரை … எல்லைச் சிக்கலின் முரண்பாடுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கற்க கசடற விற்க அதற்குத் தக

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கிடையாது, அனைவருக்கும் தேர்ச்சி என அரசு அறிவித்திருப்பதை தொடர்ந்து, எல்லோரும் தங்கள் உவகையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த கொரோனா அச்சத்திலும் தேர்வை நடத்தியே தீர்வது என்று அரசு கடைசி வரை முயன்றது. இதற்கு மேலும் இழுத்துப் பிடித்தால் இருக்கும் கொஞ்ச மதிப்பையும் இழக்க நேரிடலாம் என்பதால் வேறு வழியின்றியே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்குப் பின்னால் தனியார் கல்வி நிறுவனங்களின் வேட்டை எனும் காரணம் இருக்கிறது. மறுபக்கம், புதிய கல்விக் கொள்கை என்பதன் … கற்க கசடற விற்க அதற்குத் தக-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 4

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 9 3.இணைக் குடும்பம். குழு மணத்தின் போதோ அல்லது அதற்கு முன்னரோ நீண்ட காலத்துக்கோ, குறுகிய காலத்துக்கோ ஒரு வகையான இணை வாழ்க்கை இருந்தது. ஆணுக்குப் பல மனைவியர் இருப்பினும் அவர்களில் ஒருத்தி அவனுடைய பிரதான மனைவியாக (அவனுக்கு மிகப் பிடித்தமான மனைவி என்று அவளைக் கூறுவதற்கு அநேகமாக இடமில்லை) இருந்தாள். அதே போல், அவளுடையா பல கணவர்களில் அவனும் பிரதான கணவனாக இருந்தான். இந்த நிலைமை கிறிஸ்துவ … குடும்பம் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோவில் நிலம் சாதி

பல்வேறு நாளிதழ்களுக்கு இடையில் ஒத்த செய்திகள் ஒரே மாதிரி இருக்கிறதா? ஒரு தொலைக்காட்சி சேனல் காட்டிய செய்தியை இன்னொரு சேனல் காட்டுகிறதா? கண்முன்னே நிகழும் செய்திகளிலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு எப்படி இருந்திருக்கும்? நந்தன் வரலாறுஇடங்கை வலங்கை மோதல்கள்களப்பிரர்கள் யார்?பக்தி இலக்கியம் ஏன் தோன்றியது?தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டம் எப்படி?பழைய காலத்தில் நிர்வாக இயந்திரம் எப்படி இயங்கியது?நிர்வாகவியலில் கோவில்களின் பங்கு என்ன? இப்படி இதுவரை நாம் கொண்டிருந்த அத்தனை கருத்துகளிலும் … கோவில் நிலம் சாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.

எந்தப் பொன்மகள் வரவேண்டும்?

பொன்மகள் வந்தாள். வெளிவருவதற்கு முன்பே பல விவாதங்களை கிளப்பி விட்ட திரைப்படம். இனி சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கூடங்களை ஒதுக்க மாட்டோம் என உரிமையாளர்கள் மிரட்டினார்கள். அதையும் மீறி OTT தளத்தில் வெளிவந்திருக்கிறது இத் திரைப்படம். இதற்கு முன்பே கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே பிரச்சனை ஏற்பட்டு பின், பின்வாங்கப்பட்டு திரைக்கூடங்களில் வெளியானது. இயக்குனர் சேரன் கூட இதே திசையில் D2H எனும் நிறுவனத்தை தொடங்கி ஆதரவில்லாமல் கைவிட்டார். இது ஒரு வகையில் புதிய … எந்தப் பொன்மகள் வரவேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?

நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதனால், நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிடும்போல் இருக்கிறது. சில ஆண்டுகளாகவே ஒலீயின் தேசிய அரசியல் நேபாளத்தை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டார்கள். லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி ஆகிய பகுதிகளை மீட்பதற்கான அறைகூவலாகட்டும், சீனாவிலிருந்து வந்த வைரஸைவிட … இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜார்ஜ் பிளாய்ட்: கற்பித்தது என்ன?

கடந்த வாரம் மே 25ம் தேதி, அமெரிக்காவின் மின்னாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் எனும் கருப்பினத்தவர் அமெரிக்க காவல் துறையினரால் ஐயத்தின் பேரால் கைது செய்யும் போது மிருகத் தனமாக முழங்காலால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்படுகிறார். அவர் கடைசியாக பேசிய எனக்கு மூச்சு முட்டுகிறது எனும் வாக்கியத்தை முழக்கமாகக் கொண்டு அமெரிக்காவே போராட்டத்தால் பற்றி எரிகிறது. உலகிலேயே பாதுகாப்பு மிகுந்ததாக கருதப்படுகிற வெள்ளை மாளிகைக்குள்ளேயே போராட்டக்காரர்கள் நுழைந்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் ஆற்றலும் அதிகாரமும் கொண்டவராக கருதப்படும் … ஜார்ஜ் பிளாய்ட்: கற்பித்தது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்னுடைய நூல்கள்

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, நூல்கள் வாசிக்கத் தொடங்கிய பள்ளிப் பருவத்திலிருந்தே, நாமும் இதுபோல் நூல்கள் எழுத வேண்டும் என்பது ஒரு விருப்பமாக, அறுந்து விடாத நூலாக உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. வாசிப்பை நேசிக்கும் அனைவருள்ளும் இப்படி ஓர் இழை ஊடும் பாவுமாக ஓடிக்கொண்டிருக்கும் என்றே எண்ணுகிறேன். கல்லூரி நாட்களில் இரண்டு நாவல்கள் எழுதி சுற்றுக்கு விட்டதும், அதற்கு கிடைத்த வரவேற்பும் தனி மகிழ்வை தந்தது. பின்னர் கவிதைகள் எழுதித் திரிந்ததும் ஒரு கனாக் காலமாக கடந்தது. … என்னுடைய நூல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.