சூழலைக் காப்போம்!

நாம் முழித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் திருடர்களுக்காக கதவுகள் திறக்கப்படுகின்றன. இரண்டு சம்பவங்களை சுருக்கமாக சொல்ல வேண்டும். மத்தியபிரதேசத்தின் உமர்வாடா கிராமம், மகாராஷ்ட்ராவின் பிஜாபூர் கிராமம், உத்தரகாண்டின் உத்தம் சிங் நகர் மாவட்டம், சட்டிஸ்கரின் மகாசமுந்த் மாவட்டம், ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டம் இங்கெல்லாம் அரசு தனியாருக்காக காடுகளைக் கையகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த இடங்களில் வாழும் பழங்குடியினர் ஒடுக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். இயற்கை சமநிலை குலைகிறது. ஒரு உதாரணம் கடந்த டிசம்பரில் ஒரிசாவில் சம்பல்பூர் மலைகிராமத்தில் இலட்சக்கணக்கான மரங்கள் … சூழலைக் காப்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 6

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 11 4. ஒருதார மணக் குடும்பம். அநாகரிக நிலையின் இடைக் கட்டம் தலைக்கட்டத்துக்கு மாறிச் செல்லும் காலப் பகுதியில் இணைக் குடும்பத்திலிருந்து இது தோன்றுகிறது என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டினோம். அதன் இறுதி வெற்றி நாகரிகம் தொடங்குவதற்குரிய அடையாளக் குறிகளில் ஒன்று. அது ஆணின் மேலாதிக்கத்தை அடிப்படையாக்க் கொண்டது. அதன் தெளிவான நோக்கம் விவாதத்திற்கு இடமில்லாத தந்தைமுறையுள்ள குழந்தைகளைப் பெறுவதுதான். இக்குழந்தைகள் உரிய காலத்தில் தமது தகப்பனாரின் இயற்கையான … குடும்பம் 6-ஐ படிப்பதைத் தொடரவும்.

உயிர்க் கொல்லி நோய்கள்

மருத்துவ அறிவியல் உண்மையிலேயே வளர்ந்து வருகிறதா? அல்லது நாம் மருத்துவ அறிவியலைத் தவற விட்டு விட்டு கருவிகளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோமா? இன்றைய விஞ்ஞானத்தைத் தீர்மானிக்கும் ஒற்றைச்சக்தியாக நாம் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப்பேசும் எந்த ஒரு முறையையும் ‘அறிவியல் பூர்வமானது இல்லை’ என்ற நம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்ட கருத்தால் புறந்தள்ளுகிறோம். அறிவியல் என்பது கருவிகளைக் கடந்தும் இருக்கலாம் என்பதை ஏற்றுகொள்கிற பக்குவம் நமக்கு வரவேண்டும். இப்படியான சிந்தனைதான் அறிவியலை அதன் … உயிர்க் கொல்லி நோய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

போர் தொடங்கி விட்டது

இனி எந்த ஒளிவு மறைவும் இல்லை. பிற வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் இந்தப் போர் தொடங்குவதில் சிக்கல் இருப்பதான தோற்றம் இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதையும், எதையும், .. எதையும் செய்யத் துணிந்த அந்தக் கூட்டம், தற்போது தமிழ்நாட்டில் தன் போரை மக்கள் மீது வெளிப்படையாக தொடுத்து விட்டது. மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அச்சு, காட்சி ஊடகங்கள் எவ்வாறெல்லாம் முனைந்து வேலை செய்தன என்பது நாம் அறிந்தது தான். பொய் அது … போர் தொடங்கி விட்டது-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்

கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் வலைக்காட்சியில், முன்னர் வெளியிடப்பட்டிருந்த கந்த சஷ்டி கவசத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டு குதித்துக் கொண்டிருக்கிறது சங்கிகள் கூட்டம். காவல்துறையிடம் முறையீடு அளிக்கப்பட்டு அந்த வலைக்காட்சியின் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது சங்கிகளே நமக்கு தங்கக் காம்பளத்தில் வைத்து அளித்திருக்கும் வாய்ப்பு. முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் இந்த வழக்கில் இணைந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழி பெயர்ப்பு ஆபாசம் என்றால், அதற்காக அந்த வலைக்காட்ட்சி தடை செய்யப்படலாம் என்றால், அதற்காக … இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊடகங்களிலும் உரிமைப் போர்

தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான். பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலை பற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்.... … ஊடகங்களிலும் உரிமைப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய சீனப் போர்

இந்தியாவும் சீனாவும் எல்லைகளில் படையை குவித்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 1962ல் நடந்த இந்திய சீனப் போர் குறித்து அறிந்து கொள்வது தேவையாக இருக்கிறது. இன்று இரு நாடுகளிடையே இருக்கும் முறுகலான இந்த சூழலில் ஊடகங்களில் இரண்டு பக்க செய்திகளும் இடம்பெறுகிறதா என்றால் கேள்விக்குறிதான். அது மட்டுமல்ல, சீனா பக்க செய்தியை வெளியிட்டால் அது தேச விரோதமான செய்தியாக தேச விரோத ஊடகமாக பார்க்கப்படும் அளவுக்கு இங்கு சூழல் திட்டமிட்டு கெடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களின், … இந்திய சீனப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

டெக்னிக்கல் பிழைகளின் சோதனை எலிகளா நாம்?

குறிப்பு 1 : சினிமாவில் அடிக்கடி நாம் பார்க்கும் விஷயம் facial recognizition. அதுவும் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் விவேகம் மாதிரியான டெக்னாலஜி த்ரில்லர் படங்களில் அதிகம் பார்த்திருப்போம். சிசிடிவி ஃபுட்டேஜில் ஒருவரின் முகத்தை ஃப்ரீஸ் செய்து, அதை கணினியில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் டேட்டாபேஸில் பொருத்திப் பார்ப்பார்கள். சில விநாடிகளில், இவர்தான் அவர் என கணிணி குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடும். இந்த முறையில் கடந்த 15 ஆண்டுகளாக உலகில் பல்வேறு நபர்களைக் கைது செய்து நீதியை நிலைநாட்டி … டெக்னிக்கல் பிழைகளின் சோதனை எலிகளா நாம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீள் தொடக்கம்

மக்களியம் - பகுதி 2 வாழ வேண்டும். உயிர் வாழ வேண்டும் இது மட்டுமே அனைத்து உயிர்களையும் உந்தும் ஒரே உள்ளாற்றல். இன்னும் அதிக காலம் உயிர் வாழ்வது எப்படி எனும் கேள்வியே அனைத்து உயிர்களையும், குறிப்பாக மனிதர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அனைத்துக்கும் இது தான் உள்ளடக்கமாக இருந்திருக்கிறது. மனிதனின் தொடக்க காலங்களை எடுத்துக் கொண்டால், ‘உண்ணு, உண்ணப்படாமலிரு’ என்பது தான் ஒரே இலக்கு. அந்த ஒற்றை இலக்கிலிருந்து மனிதன் வெகு தூரம் கடந்து … மீள் தொடக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 5

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 10 இந்தப் புதிய செல்வம் யாருடைய உடைமையாக இருந்தது? சந்தேகமின்றி, ஆரம்பத்தில் அது குலத்தின் உடைமையாக இருந்த்து. ஆனால் மந்தைகளின் மீது தனியுடைமை என்பது மிகவும் ஆரம்பக் கட்ட்த்திலேயே வளர்ந்திருக்க வேண்டும். மோஸசின் முதல் நூல் என்று கூறப்படுகின்ற புத்தகத்தில் தந்தை ஆப்ரஹாம் ஒரு குடும்பச் சமூகத்தின் தலைவர் என்ற முறையில் கால்நடை மந்தைக்கு உடைமையாளராக இருந்தாரா அல்லது ஒரு குலத்தின் உண்மையான பரம்பரைத் தலைவர் என்ற அந்தஸ்தினால் … குடும்பம் 5-ஐ படிப்பதைத் தொடரவும்.