பிம்பச் சிறை

எம்.ஜி.ஆர் – எதிர்க் கட்சிகளும் விமர்சிக்கத் தயங்கும் ஒரு பெயர். சிறந்த முதல்வர் என்பதால் அல்ல, அடித்தட்டு மக்களிடம் இவர் மீதான மயக்கம் இன்னமும் முடிந்து போய்விடவில்லை என்பதால். சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் உருமாறி அதிகாரம் மிக்கவர்களாக உலவரத் தொடங்கியது இவரிடமிருந்து தான். வெளிப்படையாக காவல்துறையின் அத்துமீறல்களை ஆதரித்ததற்கும் இவரே தொடக்கப்புள்ளி. ஆனாலும் மரணிக்கும் வரை அசைக்க முடியாத தலைவராய் வலம் வந்தார். அது எப்படி? என்று ஆராய்கிறது இந்த நூல்.

இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், இவர் நாற்பதாண்டு காலம் திரைத்துறையை ஆண்டார், பத்தாண்டு காலம் தமிழ்நாட்டு முதல்வராய் நடித்தார் என்பது இவரைக் குறிப்பதற்கு அவ்வளவு பொருத்தமான சொற்றொடர்.

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் ஆண்டு தோறும் சபரிமலைக்குச் செல்லும் பக்திப் பழமாக இருந்த நம்பியார் வில்லன், ஒழுக்கக் கேடுகளுடன் அனைத்து வித கெட்ட பழக்கங்களுடன் இருந்த எம்ஜிஆர் கதாநாயகன். திரைப்படங்களில் இருந்த இந்த முரண்பாடு அரசியலிலும் தொடர்ந்தது. இவரின் ஆட்சியில் யார் அதிக வஞ்சிக்கப்பட்டார்களோ அந்த அடித்தட்டு மக்களே இவரின் உறுதியான வாக்கு வங்கியாக இருந்தார்கள்.

ஆனால் இவரின் கட்சியும் ஆட்சியும் திமுக வை துண்டாட வேண்டும், இல்லாமலாக்க வேண்டும் எனும் முனைப்பில் காங்கிரசின் அனைத்து வித ஒத்துழைப்போடு தான் இயன்றது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

முன்னுரையிலிருந்து,

இவரது ஆட்சிக் காலத்தில் சாராய முதலாளிகள், ரியல் எஸ்டேட் பெரும் புள்ளிகள், எங்கும் நிறைந்திருக்கும் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் பெரிதும் கொழித்தார்கள். அதேசமயம் வீழ்ச்சியடையாவிட்டாலும் தேங்கிப் போன பொருளாதாரம் எம்ஜிஆரின் முக்கிய ஆதரவாளர்களான ஏழைகளை தாங்க முடியாத துயரத்துக்குள் தள்ளியது. நன்கு கொம்புசீவி விடப்பட்ட தமிழக காவல்துறை தன்னுடைய கருணையற்ற அராஜகமிக்க பண்புகளால் எம்ஜிஆரின் அப்பட்டமான ஆசியோடு அடித்தட்டு மக்களான தொழிலாளர்கள் ஏழை விவசாயிகள் மற்றும் வேலை பார்க்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இவர்களிடமிருந்து எழுந்த மெல்லிய எதிர்ப்பைக் கூட கடுமையாக அடக்கியது. திராவிட இயக்கத்தின் முற்போக்கான ஆரம்பக் காலத்தில் நடைபெற்ற அயராத போராட்டங்களால் அடித்தட்டு மக்கள் பெற்ற கலாச்சாரப் பயன்கள் பெருமளவில் சீரழிந்து போவதும் இவர் ஆட்சியில் நடந்தேறின. ஆரம்பகாலப் பகுத்தறிவின் இடத்தில் மதமீட்பு கோலோச்சியது.

படியுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.

நூலை மின்னூலாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s