
நூலின் என்னுரையிலிருந்து,
.. .. .. இந்தப் புத்தகம் பற்பல சூழல்களில் நடைபெற்ற இந்திய அரசியல் நிகழ்வுகளைத் தமிழ் தேசிய நோக்கில் ஆராய்கிறது. இந்த ஆய்வு இன்றைய அரசியல் சூழலுக்கும் நன்கு பொருந்துகிறது.
.. .. .. நானும் ஒரு காலத்தில் இந்தியத்தில் கரைந்து போன பாரத பக்தன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிர உறுப்பினன். சொல்லப் போனால் பாபர் மசூதி இடிக்கச் சென்ற சங் பரிவார் கூட்டத்துடன் பங்கேற்க விரும்பியவன் .. .. .. பெரியார் தான் என் நெஞ்சை விட்டு பார்ப்பனிய நஞ்சை உறிஞ்சி எடுத்தார்.
.. .. .. இந்த இந்திய பெருநிலப் பரப்பில் ஆரியர் மட்டும் வந்தேறிகள் அல்ல, திராவிடர், தமிழர் என அனைவரும் வந்தேறிகளே, இதைத்தான் அண்மைய மரபணுவியல் ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன.
.. .. .. குமரிக் கண்டம் இன்று பாட்டி கதை ஆகிப் போன கோட்பாடு என்று பலரும் உணர்வதில்லை. நிலவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் 1910களில் வெளியான கண்ட நகர்வியல் கோட்பாடு, 1950களில் வெளியான புவித்தட்டு நகர்வியல் கோட்பாடு ஆகியவை குமரிக் கண்ட கருதுகோளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டன.
நலங்கிள்ளி.
படியுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.