இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்

கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் வலைக்காட்சியில், முன்னர் வெளியிடப்பட்டிருந்த கந்த சஷ்டி கவசத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டு குதித்துக் கொண்டிருக்கிறது சங்கிகள் கூட்டம். காவல்துறையிடம் முறையீடு அளிக்கப்பட்டு அந்த வலைக்காட்சியின் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது சங்கிகளே நமக்கு தங்கக் காம்பளத்தில் வைத்து அளித்திருக்கும் வாய்ப்பு. முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் இந்த வழக்கில் இணைந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழி பெயர்ப்பு ஆபாசம் என்றால், அதற்காக அந்த வலைக்காட்ட்சி தடை செய்யப்படலாம் என்றால், அதற்காக அதன் பொறுப்பாளர் ஒருவரை கைது செய்யலாம் என்றால் .. .. ..

அது சமஸ்கிருதத்தில் இருந்தால் ஆபாசம் இல்லையா?

அந்த ஆபாச நூல்கள் தடை செய்யப்பட வேண்டும் அல்லவா?

அந்த ஆபாசத்தை ஆதரிப்பவர்களை கைது செய்யலாம் அல்லவா?

இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வைக்கப்படும் வாதங்கள், தங்களை இந்து என அழைத்துக் கொள்ளும் மக்களை பொது விவாதத்துக்கு அழைத்துக் கொண்டுவர வேண்டும் அதன் மூலம் பெரியாருக்கு பிறகு மங்கிப் போயிருக்கும் பகுத்தறிவுப் பரப்புரைக்கு உயிரூட்ட வேண்டும். அறிவியலே பொது உண்மை புராணக் குப்பைகள் அல்ல என நிருவ வேண்டும்.

இந்து என்பதை மதம் என நம்பிக் கொண்டிருக்கும் மக்களே, நீங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை கண்டு கொள்ளுங்கள்.

முற்போக்கு அமைப்புகளே இந்த விதயத்தில் ஒன்று சேருங்கள். இந்த வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.

********************

இந்த வழக்கு குறித்து திவிக பொதுச் செயலாளர் ஐயா விடுதலை இராசேந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.

YouTube channel ஒன்றின் மீது, பாஜக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது. “இந்த channel ஹிந்து கடவுள்களின் புனிதத்தை கெடுக்கிறது; கடவுள்களுக்கு பாலியல் விளக்கங்களை அளிக்கிறது; இது மதத்தின் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குகிறது” என்று அந்த புகார் கூறுகிறது.

தமிழ்நாடு காவல்துறையின் cyber crime, இது குறித்து விசாரித்து, 5 பிரிவுகளின் கீழ், அந்த youtube channel மீது வழக்குகளை பதிவு செய்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.

ஜாதி, மதம், இனம், மொழி சம்மந்தமாக விரோத உணர்வை தூண்டுகின்ற 5 பிரிவுகள் இந்த வழக்குகளாகும். உண்மையில் இந்த youtube channel என்ன செய்திருக்கிறது?

ஹிந்து கடவுள்களுக்கான பல்வேறு புராணங்களில்,

1. ஹிந்து கடவுள்களின் பிறப்புகள்,

2. அவர்களின் அவதார மகிமைகள்,

3. சடங்கு ஆச்சாரங்களுக்கு ஹிந்து புராண நூல்களில் கூறப்படுகின்ற விளக்கங்கள்

இவற்றை அந்த நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி விளக்கங்களை அளித்திருக்கிறது இந்த youtube channel.

சிவ புராணம், விஷ்ணு புராணம், லிங்க புராணம், கந்த புராணம், மச்ச புராணம் என்று ஏராளமான புராண நூல்கள் எழுதப்பட்டு, அவை இப்போதும் அச்சிடப்பட்டு சந்தையில் விற்பனையாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்த புராணங்களில், பக்தியை பரப்புகின்றவர்கள் எழுதி வைத்த கடவுள்களின் கதைகளை எடுத்துப் பேசுவதே ஆபாசம் என்றும், ஹிந்துக்களை புண்படுத்துவது என்றும் பாஜக கூறுகிறது என்று சொன்னால், பாஜகவே ஹிந்து கடவுள்களை அவமானப்படுத்துகிறது; அவற்றின் புனிதத்தை கெடுக்கிறது என்று நாம் சொல்ல வேண்டி இருக்கிறது.

இல்லாவிட்டால், “இவை ஒரு காலத்தில், பழங்காலத்தில் எழுதப்பட்ட புராணங்கள், இவை காலத்துக்கு பொருந்தாதவை, இவற்றில் கூறப்பட்டுள்ள கதைகள், புராண மகிமைகள் அத்தனையும் இப்போது அறிவியலுக்கு எதிரானவை” என்று கூறி, இவற்றை தடை செய்ய வேண்டும் என்று பாஜக கோரியிருந்தால், அதில் ஒரு நியாயம் உண்டு.

அவை தடை செய்யப்படவில்லை. இப்போதும் அப்படியே விற்பனை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். ராமன் எப்படி பிறந்தான் என்று வால்மீகி ராமாயணம் விவரித்து கூறுகிறது. வால்மீகி ராமாயணத்தில் உள்ள ராமனுடைய பிறப்பை அப்படியே அதன் ஸ்லோகங்களோடு எடுத்துக் காட்டி கூறினால், அதுவும் ஆபாசம் என்று தான் பாஜக காரர்களுக்கு தெரியும். அப்படியானால், வால்மீகி ராமாயணத்தையும் தடை செய்தாக வேண்டும்.

அப்படி தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைக்காமல், அவற்றை சந்தைகளிலும் விற்பனை செய்து கொண்டு, அந்த நூல்கள் ஹிந்து மதத்தினுடைய நூல்கள் என்று அங்கீகரித்துக் கொண்டு, அந்த நூல்களில் உள்ள கருத்துகளை எடுத்துப் பேசினால் மட்டும், அது ஹிந்து கடவுள்களை ஆபாசப் படுத்துகிறது என்று சொன்னால், இது என்ன இரட்டை வேடம் என்று தான் நாம் கேட்க வேண்டியுள்ளது.

காலத்துக்கு ஏற்ப கடவுள்களையும் புராணங்களையும் மாற்றிக்கொண்டு தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள். வேதத்தில் சொல்லப்பட்ட பல கடவுள்கள் இப்போது காணாமல் போய் விட்டன. வேதத்தில் தியோசன், மித்திரன், சாவித்ரி, பூசன், ஆதித்யன், மாருத்யன், அதிதி, திதி, ஊர்வசி என்று கடவுள்களை பற்றி குறிப்புகள் வருகின்றன. கோயில்கள், விக்கிரக வழிபாடுகள் வந்த பிறகு, அந்த கடவுள்கள் அத்தனையையும், வேத புரோகித பார்ப்பனர்கள், அப்படியே தூக்கி வீசி விட்டார்கள். இப்போது அந்த கடவுள்கள் புழக்கத்தில் இல்லை; வணங்கப்படுவதும் இல்லை.

ஒன்று வேண்டுமானால் செய்யலாம். ஹிந்து கடவுள்களுக்கு, அவர்களின் அவதார பிறப்பு மகிமைகள் குறித்து, காலத்துக்கு ஏற்ப புதிய கதைகளை எழுதி உருவாக்கி, இனிமேல் இது தான் கிருஷ்ணன் பிறந்த கதை; இது தான் விநாயகன் பிறந்த கதை; இது தான் பார்வதி சிவனுடைய வரலாறு என்றெல்லாம் அவர்கள் புதிய கதைகளை உருவாக்கி, ஹிந்து புராணக் கட்டமைப்பை காலத்துக்கு ஏற்ப மறுஉருவாக்கம் செய்கிற முயற்சியில் ஈடுபட்டு, அதை அத்தனை ஹிந்துக்களும் ஏற்றுக்கொண்டு, இது தான் ஹிந்துக்களுடைய கடவுள் என்று அறிவித்து விட்டு, இந்த youtube channel மீது அவர்கள் வழக்கை தொடர்ந்தால், அதை நாம் வரவேற்க முடியும்.

இல்லாவிட்டால், இது இவர்களுடைய (பாஜக) இரட்டை வேட போக்கைத் தான் காட்டுகிறது

One thought on “இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s