உயிர்க் கொல்லி நோய்கள்

மருத்துவ அறிவியல் உண்மையிலேயே வளர்ந்து வருகிறதா? அல்லது நாம் மருத்துவ அறிவியலைத் தவற விட்டு விட்டு கருவிகளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோமா? இன்றைய விஞ்ஞானத்தைத் தீர்மானிக்கும் ஒற்றைச்சக்தியாக நாம் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப்பேசும் எந்த ஒரு முறையையும் ‘அறிவியல் பூர்வமானது இல்லை’ என்ற நம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்ட கருத்தால் புறந்தள்ளுகிறோம்.

அறிவியல் என்பது கருவிகளைக் கடந்தும் இருக்கலாம் என்பதை ஏற்றுகொள்கிற பக்குவம் நமக்கு வரவேண்டும். இப்படியான சிந்தனைதான் அறிவியலை அதன் அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதாக அமையும்.

இன்னும், சராசரி மக்களுக்கு எட்டாத தூரத்தில் மருத்துவ அறிவியலின் ரகசியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. உலகத்திலேயே ஆறு நாடுகளில்தான் போலியோ சொட்டு மருந்து புழக்கத்தில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளே இல்லாத பல நாடுகளிலும் இன்று போலியோவின் தாக்கம் குறைந்துள்ளது.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினர் அதை எதிர்த்து வருகின்றனர். உலகம் முழுவதும் தடுப்பூசி மருந்துகளால் பாதிக்கப்பட்ட மக்கள் “தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம்”( Anti Vaccination Leaque) ஒன்றை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தி வருகிறார்கள்.

திடீர், திடீரென பீதியைக்கிளப்பி பின் மறைந்து போகும் இந்த நோய்கள் உருவாகக் காரணம் என்று நம்பப்படும் கிருமிகளின் தோற்றம், அழிவு பற்றிய முழுமையான தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படவே இல்லை. என்றாலும் வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் எல்லா பொருட்களுக்குமான விளம்பரங்கள் அனைத்தும் கிருமிகளின் மீதே கட்டமைக்கப்படுகின்றன.

ஆட்கொல்லி நோய் என நம்பப்படும் எய்ட்ஸுக்கு காரணமாகக் கூறப்படுவது – H.I.V. `என்னும் கிருமிதான். இந்த கிருமியக் கண்டுபிடித்த விஞ்ஞானி டாக்டர்.லுக் மோன்பிக்னியர் “H.I.V. கிருமி எய்ட்ஸுக்கு காரணமல்ல: இதைப்பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் எக்கச்சக்கமான குளறுபடிகளும், பித்தலாட்டங்களும் உள்ளன” என்று ( மியாமி ஹெரால்டு 23.12.1990) தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்…

வித விதமான குழப்பங்களும், எண்ணற்ற கேள்விகளும் கண்டுபிடிப்புகளின் பின்னால் வருகின்றன என்றாலும் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முழுமையாவதற்கு முன்பே யாருடைய கட்டாயத்தினாலோ சந்தைக்கு வந்துவிடுகின்றன. விதம் விதமான ரசாயன மருந்துகளையும், நவீன அறுவை சிகிச்சைகளையும் புறந்தள்ளி விட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். மண்ணில் போடும் ரசாயன உரங்களை தவிர்த்து விட்டு எப்படி இயற்கை விவசாயம் சாத்தியமோ அதே போல ரசாயன மருந்துகளை கைவிட்டு இயற்கையான ஆரோக்கிய வாழ்வை அமைத்துக்கொள்வதும் சாத்தியமே.

இவ்வகையான இயற்கை வழி வாழ்வியலை மையமாகக்கொண்ட இயற்கை மருத்துவத்தை ( Naturopathy) பயிற்றுவிக்க உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அறிவியல் பல்கலைக்கழகங்களும், பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இருக்கவே செய்கிறார்கள். மாற்று மருத்துவங்கள் குறித்த உலக நடப்புகள் அனைத்தும் இந்தியா போன்ற அடிவருடி அரசாங்கங்களால் மூடி மறைக்கப்படுகின்றன.

இது போன்ற உண்மைகளை மக்களுக்கு உரைப்பது யார்? அக்கு ஹீலர் உமர் ஃபாரூக் அவர்களால் எழுதப்பட்டிருக்கம், “உயிர்க் கொல்லி நோய்கள். மீண்டும் வருகிறதா ஆபத்து?” எனும் இந்த நூல் அந்த வேலையைச் செய்கிறது.

படியுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.

மின்னூலாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s