கலையும் இலக்கியமும் யாருக்கானது? எனும் கேள்வி கலை, இலக்கியத்தைப் போலவே பழமை வாய்ந்தது. அதேநேரம் மிகக் குழப்பமாகவும், நீர்த்துப் போன தன்மையிலும், தெளிவாகச் சொன்னால் அந்தக் கேள்வியின் உட்கிடையை இல்லாமல் ஆக்குவதாகவே அந்தக் கேள்விக்கான பதில் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. என்றால் அந்தக் கேள்விக்கான சரியான, பொருத்தமான பதில் என்ன? இன்றைய சூழல் மிக மோசமானதாக இருக்கிறது. மக்கள் நிலையிலிருந்து கூட அல்ல, அவர்களே சொல்லிக் கொள்ளும் நடு நிலைமையிலிருந்து கூட அல்ல, அரசுக்கு ஆதரவான, வலதுசாரி நிலையிலிருந்து … கலையும் இலக்கியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நாள்: ஓகஸ்ட் 2, 2020
இதுதான் நடவடிக்கைங்களா ஆபீசர்!
செய்தி: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுடன் இணைந்து மக்களுக்கு கொரோனா சிகிச்சை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குத் தேவையான நெறிமுறைகள், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாத வகையில் அரசாணை எண்.240 சுகாதாரத் துறை ஜூன் 5 அன்று அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயித்து ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பி வெல் (Be well) மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12,20,000 வசூலிக்கப்பட்ட விவரம் உறுதி செய்யப்பட்டது. … இதுதான் நடவடிக்கைங்களா ஆபீசர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.