
கந்த சஷ்டி கவசம் பிரச்சனைக்கு ஸ்டாலின் ஏன் பதிலளிக்கவில்லை?
இந்துக் கடவுளா? தமிழ் கடவுளா? அது அவதூறா? இல்லையா?
இடஒதுக்கீடு பிரச்சனை? மருத்துவ கல்லூரி இடங்களில் என்ன பிர்ச்சனை?
புதிய கல்விக் கொள்கை? என நாலாபுறங்களிலும் சிக்சர்கள் பறக்கின்றன.
எந்தப் பந்தை எப்படிப் போட்டாலும் அடிப்பது சிக்சர் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அடிக்கப்படும் ஒவ்வொரு பந்தும் பார்வையாளனுக்கும் விளையாட்டுக்கும் இடையிலிருக்கும் ‘யார் இந்து?’ எனும் மாயக் கண்ணாடியை சுக்கல் சுக்கலாக உடைத்துப் போடுகிறது என்பது தான் சிறப்பு.
நியூஸ்7 தொலைக்காட்சியில் வியூகம் நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜயன், திமுகவின் ஆ.ராசாவை செவ்வி கண்ட போது நடந்தது தான் மேற்கண்ட வானவேடிக்கை. எளிமையான அந்த பதில்கள் ஒவ்வொன்றும் பார்வையாளனை ஈர்க்கும், சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.
பாருங்கள், புரிந்து கொள்ளுங்கள், பரப்புங்கள்.
ஹிந்து என்றால் ஒரு நிறுவப்பட்ட மதம் -Established Institution. -கிடையாது என்பதுதான் உண்மை. இந்தியாவின் சுதேசி மதம் இந்துமதம் என்று சொல்லலாம். திரு.இராசா அவர்கள் இந்து ஆதிதிராவிடா்என்றுதான் சாதிச்சான்று அளித்துதான் தனித் தொகுதியில் போட்டியிட்டு பாராளு. உறுப்பினா் ஆகியிருக்கின்றாா் என்பதை அவர் மறக்க முடியுமா ? மறைக்க முடியுமா ? தான் ஹிந்து அல்ல என்று தாசில்தாரிடம் அறிவித்து தன்னை ஹிந்து அல்ல என்ற வகைக்கு சான்று பெற்று வெளியிட ராசா தயாரா ? தனக்குள்ள சாதிச் சான்றையும் துறக்க ராசா தயாரா ? தான் செய்யாததை ஏன் வீம்மாகப் பேசுகின்றார் ? இந்து தலீத் என்ற பெயா் தரும் பதவி பணம் வேண்டும். ஆனால் இந்து என்று ஒரு மதம் கிடையாது என்ற பொது அரங்கில் பேசுவது முட்டாள்தனமாகத் தெரிகிறது.
மருத்துவர் அன்புராஜ்,
உங்களின் கேள்விகளுக்கும் சேர்த்துத்தான் அதில் பதில் கூறியிருக்கிறார். கவனித்துப் பாருங்கள். தனிப்பட்ட அ.ராசா என்பவர் சான்றிதழை துறக்க வேண்டுமா என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். இந்து என்பது ஒரு மதமல்ல என்று கூறுவது உண்மை. இரண்டையும் ஏன் குழப்புகிறீர்கள்?
சான்றிதழை துறப்பது தனிப்பட்ட விசயம் அல்ல. கடவுள் யில்லை என்பவன் கோவில் தக்காா் ஆக முயலக் கூடாது. ஆம் ஹிந்து மதம் இல்லை எ்னபவன் தன்னை ஹிந்துவாக பதிவு செய்யக் கூடாது. பேச்சுக்கும் செயலுக்கும் உறவு வேண்டுமே. சோறு தின்றுதானே எல்லோரும் வாழ்கின்றோம். பார்பன ஒழிப்பு என்பது தேவையில்லை. அவனும் வாழ்ட்டுமே. பிறபட்ட வகுப்பினருக்கு மிகப் பொருத்தமான உதாரணம் திரு.நாராயணகுருதான். ஆனால் தமிழக தலைவர்கள் ஸ்ரீநாராயணகுருவை அறிவார்களா ?
கேரள ஹிந்துக்கள் கொடுத்து வைத்தவர்கள். பார்பன் கொடுமையில் இருந்தும் காத்துக் கொண்டார்கள். ஹிந்துவாகவும் மனித வளத்துடன் வாழக் கற்றுக் கொண்டார்கள். வாழ்க .தாழ்த்தப்பட்டவன் திருவல்லா சிவன் கோவில் அர்ச்சகா் ஆகியிருக்கின்றான் -ஸ்ரீநாராயணகுருவின் சாதனை என்று படித்த ஞாபகம்.
நண்பர் சுகுமார்,
மதமில்லாதவனாக பதிவு செய்வது என்பது இங்கே இன்னும் சட்ட இயல்பாக கூட ஆகவில்லை. சமூகம் ஏதாவது மதத்தோடு இணைக்காமல் யாரையும் பார்ப்பதில்லை. எனவே, தனிப்பட்ட அவரவரின் விருப்பப்படியே மதம் ஜாதியை துறப்பது இருக்கும் இருக்க வேண்டும். ஆனால் இந்து என்பது ஒரு மதமல்ல என்று கூறுவது வரலாற்று ஆய்வுகள் அடிப்படையிலான உண்மை. வரலாற்று அடிப்படையிலான ஒரு உண்மையை பொது வெளியில் கூற ஒருவன் இந்துவாக இல்லாதிருக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.
ஆனால் இந்து என்பது ஒரு மதமல்ல என்று கூறுவது வரலாற்று ஆய்வுகள் அடிப்படையிலான உண்மை
————————————————–
சில கோமாளிகள் எதையோ உளறுகின்றார்கள். தள்ளுங்கள்.
தங்கள் கருத்து தவறானது. என்னை நான் இந்து என்று சொல்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. இந்தியாவின் தேசீய கலாச்சார சமயபிரிவுகள் அனைத்தும் இந்து மதம்தான். அதில் சிக்கல் என்ன இருக்கினறது.அனைத்தும் காலப் போக்கிற்கு தக்க தங்களை மாற்றி அமைக்க தயாராக இருக்கின்றது. அப்படியிருக்கும் போது நாம் அந்த அமைப்புகளை அழிக்க நினைப்பது அநாசியம்.
நண்பர் சுகுமார்,
தற்போது, உங்களை நீங்கள் இந்து என்று சொல்லிக் கொள்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், வரலாற்றில் மக்களை அவர்களுடைய அனுமதியைக் கேட்காமலேயே, அவர்களுடைய விருப்பத்துக்கு எதிராகவே, அவர்களை இந்து என்று சட்ட அடிப்படையில் அறிவித்து விட்டார்கள். நீங்கள் அனுமதி தேவையில்லை என்கிறீர்கள், அது சரி என்றால் சட்டத்தின் அடிப்படையில் மக்களை இந்து என அறிவித்தது குறித்து உங்கள் கருத்து என்ன? இப்போது வரையிலும் பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்து என பொருள்படும் விதத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்களே அது குறித்து உங்கள் கருத்து என்ன?
\\இந்தியாவின் தேசீய கலாச்சார சமயபிரிவுகள் அனைத்தும்// என்று கூறியிருக்கிறீர்களே, இந்தியா ஒரு தேசியமே இல்லை, ஒரே கலாச்சாரம் என்று என்றுமே இருந்தது இல்லை. ஒரே சமயத்தினராகவும் என்றுமே இருந்தது இல்லை. என்றால், இந்தியாவின் தேசீய கலாச்சார சமயபிரிவுகள் அனைத்தும் இந்து மதமே என்று நீங்கள் கூறுவது உங்களுக்கு நீங்களே முரண்படுவதாக ஆகாதா?
இவ்வாறு முரண்படும் அமைப்பை, மக்கள் மீது அவர்களின் விருப்பத்துக்கு மாறாக திணிக்கப்படும் அமைப்பை, மக்கள் மீது அழுந்தி அவர்களை முடக்கிக் கொண்டிருக்கும் அமைப்பை அழிப்பது தானே சரியானதாக இருக்க முடியும்.