எத்தனை கண்கள் பார்க்கின்றன?

செய்தி:

உலக அளவில் சிசிடிவி கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் முதல் 20 நகரங்களில் 16ஆவது இடத்தில் ஹைதராபாத் நகரம் இருப்பதாக இங்கிலாந்து நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கம்பாரிடெக் எனும் நிறுவனம் இதுகுறித்து ஆய்வு நடத்தி, உலக அளவில் 16ஆவது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ஹைதராபாத் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் முழுவதும் மூன்று லட்சம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புக்குப் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சீனாவின் தையுவான் நகரம் 4,65,255 சிசிடிவி கேமராக்களுடன் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தெலங்கானா மாநில காவல் துறை தலைவர் மகேந்தர் ரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

செய்தியின் பின்னே:

சிசிடிவி கேமிராக்கள் ஏன் தேவைப்படுகின்றன? என்றொரு வினாவை எழுப்பினால், அதற்கு விடையாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. 1. குற்றம் நடந்த பிறகு குற்றவாளியை அடையாளம் காணவும் விரைந்து பிடிக்கவும் பயன்படுகிறது. 2. சிசிடிவி கேமிரா இருக்கிறது என்பதே உளவியல் ரீதியாக கண்காணிப்பு அச்சத்தை ஏற்படுத்தி குற்றம் நடப்பதை தடுக்கிறது. இவை சரியான காரணங்கள் தானா?

இதுவரை பிடிபட்டுள்ள குற்றங்களில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பிடிப்பதற்கு சிசிடிவி கேமிராக்கள் உதவியுள்ள வழக்குகள் எத்தனை விழுக்காடு? என்று ஏதேனும் கணக்கு இருக்கிறதா? அப்படி எதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, ஒரு குற்றவாளியை அடையாளம் காண்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி பெரிய அளவில் பங்களிக்காது. எடுத்துக்காட்டாக சுவாதி வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சிசிடிவி காட்சியைக் கொண்டு தான் ராஜ்குமாரை பிடித்தார்கள். ஆனால் ராஜ்குமார் தான் குற்றவாளி என்பதற்கு எந்த ஆதாரமும் கொடுக்க முடியவில்லை. சிறையில் வைத்தே கொன்றும் விட்டார்கள். எத்தனையோ வழக்குகளில் சிசிடிவி காட்சிகள் கிடைத்தும் குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டுள்ளனர். எனவே, சிசிடிவி குற்றவாளிகளை அடையாளம் காணவும், பிடிக்கவும் உதவும் என்பதில் போதிய உண்மையில்லை. வணிக கடைகளிலெல்லாம் கட்டாயமாக சிசிடிவி மாட்ட வேண்டும் என்று காவல்துறை சொல்லியது. அதுவும், உள்ளிருந்து சாலையை கவனிப்பது போல் மாட்ட வேண்டும் என்று சொன்னது. இதன்மூலம் குற்றவாளிகளை பிடிக்கலாம் எனும் தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். வேறொன்றுமில்லை.

சிசிடிவிக்கு பிறகு குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்று கூறுவதற்கான எந்த புள்ளி விவரங்களும் இல்லை. சிசிடிவி உளவியல் ரீதியாக எந்த மாற்றத்தையும் குற்றவாளிகளிடம் ஏற்படுத்தவில்லை. மாறாக, மாற்று ஏற்பாடுகளை சிந்திக்க வைத்திருக்கிறது. கேமிராக்களை உடைப்பது, அந்தப் பகுதி மின்சாரத்தை துண்டிப்பதன் மூலம் கேமிராவை செயலிழக்க வைப்பது, தொப்பி அணிந்து இறக்கி விட்டுக் கொள்வது, எதிரொளிக்கும் கண்ணாடிகளை பயன்படுத்துவது என்று எத்தனையோ வழிமுறைகள் புதிது புதிதாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அப்படியென்றால் இந்த சிசிடிவிக்களால் வேறு என்ன தான் பயன். மக்களை கண்காணிப்பதற்காக அரசுக்கு பயன்படுகிறது. மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், என்னென்ன உடுத்துகிறார்கள், தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பன போன்ற கோடிக்கணக்கான தகவல்கள் (டேட்டாக்கள்) நிறுவனங்களுக்கு தேவைப்படுகின்றன. இன்னும் வெளியில் கசியாத எவ்வளவோ ரகசியச் செயல்பாடுகளுக்காக அரசுகள் பயன்படுத்துகின்றன. தெளிவாகச் சொன்னால் அரசின் துறைகளுக்குத் தான் சிசிடிவிக்கள் பயன்படுகிறதே தவிர குற்றங்களைக் குறைப்பது என்று சொல்லப்படும் காரணங்களில் துளியும் உண்மையில்லை.

அதாகப்பட்டது, “ஆயிரம் பேசினாலும் தூண்டி காரனுக்கு மெதவயில தாங்கோ கண்ணிருக்கு” அம்புட்டுதேன்.

செய்திகள் சுவாசிப்பது: 4/2020

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s