பெய்ரூட் வெடிப்பு: சதியே காரணம்.

செய்தி:

லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மாபெரும் வெடிப்பில் சிக்கி இதுவரை குறைந்தது 135 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், லெபனானில் இரண்டு வாரங்களுக்கு அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகத்தில் இருந்த கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் அந்த நாட்டு அதிபர் மைக்கேல் ஆன்.

செய்தியின் பின்னே:

ஜப்பானில் வீசப்பட்ட அணு குண்டின் அழிவாற்றலில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு பெய்ரூட் வெடி விபத்து இருக்கிறது என்று பிரிட்டன் ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அணு குண்டு அல்லாத பெரும் வெடி விபத்து என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. நடந்த இந்த கோரத்தில் உயிரையும் உடமைகளையும் இழந்த மக்களின் துயரத்தில் பங்கு கொள்வோம்.

ஆனால், இது விபத்தா? தாக்குதலா? எனும் ஐயம் பலரிடம் இருக்கிறது. அந்த நேரத்தில் இஸ்ரேலிய விமானங்கள் பறந்ததை பலர் கண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே நட்புறவு கிடையாது என்பதோடு மட்டுமல்லாமல் விண்வெளியை பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வெடிவிபத்து நிகழ்வதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பு இன்னொரு வெடி விபத்தும் அதே இடத்தில் நடந்திருக்கிறது. ஆனால் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இது குறித்து வரவில்லை.

ஆனால், இந்த வெடி விபத்தின் பின்னே வேறு சில கேள்விகள் உள்ளன. ஏன் இதை எல்லோரும் அவசரம் அவசரமாக அணுகுண்டு அல்லாத மிகப் பெரும் விபத்து என கூறுகிறார்கள் என்பது புரியவில்லை. 1921 ல் ஜெர்மனியில் இதேபோல அமோனியம் நைட்ரேட் சேமிப்பில் பெரிய வெடி விபத்து ஏற்பட்டு 500 பேர்கள் வரை கொல்லப்பட்டார்கள். 1947 ல் அமெரிக்காவில் இதேபோல அமோனியம் நைட்ரேட் சேமிப்பில் வெடி விபத்து ஏற்பட்டு 600 பேர்கள் கொல்லப்பட்டனர். இப்போதும் பெய்ரூட் துறைமுகத்தில் சில ஆண்டுகளாக அமோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் ஏற்கனவே இதை அப்புறப்படுத்துமாறு கோரிக்கை வைத்து விட்டோம், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுங்கத்துறை அதிகாரி பத்ரி தாஹிர் கூறியுள்ளார். ஏற்கனவே, இரண்டு மிகப்பெரிய விபத்துகள் நடந்திருந்தும் கூட உடனடியாக அகற்றாமல், பாதுகாப்பு செய்யாமல் வெடிக்கட்டும் என்று காத்திருந்தார்களா?

இந்த அமோனியம் நைட்ரேட்டின் பயன் என்ன? சுரங்கங்களில் பாறைகளைப் பிளக்க வெடி பொருளாக பயன்படுகிறது. வயல்களுக்கு உரம் தயாரிக்க பயன்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் மிச்சமாக வெடிபொருட்களை பயன்படுத்தியே, இரண்டாம் உலகப் போரின் இழுவை மோட்டார் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே பசுமைப் புரட்சி எனும் திட்டம் உலகில் நடைமுறை படுத்தப்பட்டது. அதன் விளைவாகவே விவசாயம் பெரும் அழிவை சந்தித்திருக்கிறது. கார்ப்பரேட்டுகளின் தேவையாக மட்டுமே இருக்கும் இந்த அமோனியம் நைட்ரேட் சேமிப்புகள், ஏற்கனவே இரண்டு பெரும் கோர விபத்துகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவற்றின் பாதுகாப்புக்கென என்ன நடைமுறைகள் உலகில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏன் அவை வெடிக்கும் வரை கவனிக்காமல் விடப்பட்டிருக்கின்றன? அப்படி என்றால் இது கார்ப்பரேட்டுகளின் சதி இல்லையா? ஏன் இதை யாருமே பேசாமல் கடந்து செல்கிறார்கள்?

அதாகப்பட்டது, “அரசாங்க முட்ட குடியானவன் வூட்டு இரும்பையும் உடைக்குமுங்கோ” அம்புட்டுதேன்.

செய்திகள் சுவாசிப்பது: 5/2020

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s