“இந்தி”யா .. .. ..?

கொடி தலைகீழா இருக்குதுன்னு யாரும் கூவாதிங்கப்பா

செய்தி:

சென்னை விமான நிலையத்தில் நேற்று மக்களவை உறுப்பினர் கனிமொழியை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ஒருவர், ‘நீங்கள் இந்தியரா” எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொன்னதற்காக இவ்வாறு அந்த அதிகாரி கூறியதாக கனிமொழி குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியைப் பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்” என்று கடுமையாக சாடியுள்ளார்.

செய்தியின் பின்னே:

இது பல காலமாக நடந்து கொண்டிருப்பது தான். இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி என்பது இந்தி பேசும் மாநிலங்களின் இயல்பாக மாற்றப்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரிகள் மூலம் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. வான்வழிப் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் ஏதாவது ஒரு வாய்ப்பில் இப்படியான நிகழ்வை எதிர் கொண்டிருப்பார்கள். இது தெரியாமல் நிகழ்வதல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருப்பது. இந்திய நாட்டை இந்திய தேசமாக மாற்றுவதும், அந்த தேசத்தின் ஒரே மொழியாக இந்தியை ஆக்குவதும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் சின் நோக்கங்களில் உள்ளது தான்.

இந்தி இந்தியாவில் ஆட்சி மொழி அல்ல என்று எவ்வளவு கத்தினாலும் அவர்கள் காதில் ஏறப் போவதில்லை. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பது அவர்கள் மூளைக்கு எட்டப் போவதில்லை. எதிர்ப்பு கிளம்பினால் விசாரணை செய்கிறோம் என்று பம்முவதும், பின்னர் இந்தியை கொல்லைப்புற வழியில் திணிக்கும் நடவடிக்கைகளை தொடர்வதும் அவர்களுக்கு வாடிக்கை தான். புதிய கல்விக் கொள்கை தொடங்கி, தற்போது தமிழ்நாட்டில் பலநூறு சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கவிருப்பதும் இந்தித் திணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி தான்.

எனவே, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தி பேசாத அனைத்து மாநிலங்களையும் இந்த கோரிக்கையில் ஒன்றிணைக்க வேண்டும். இதைச் செய்யும் வாய்ப்பும், தேவையும் தமிழ்நாட்டுக்கும், திமுகவுக்கும் இருக்கிறது. அதை செய்வதற்கு அழுத்தம் தர வேண்டும்.

அதாகப்பட்டது, “என் தாய்நாடு இந்தியா தான்டா, ‘இந்தி’யா இல்லடா கூவைகளா” அம்புட்டுதேன்.

செய்திகள் சுவாசிப்பது: 7/2020

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s