
மூத்த தேவியை
மூதேவி ஆக்கினான்.
அடங்கா பிடாரியை
துஷ்ட தேவதையாக்கி
அடங்கும் புராணம் பாடி
இஷ்ட தேவியாக்கினான்.
அரசமரத்தடி எங்குமிருந்த
புத்தர் சிலைகளை
ஆட்டயப் போட்டான்.
சத்தமில்லாமல் அங்கே
விநாயகர் சிலைகளை நட்டான்.
சமணப்பள்ளிகள் அழித்தான்
சைவத் திருமுறை ஒழித்தான்.
தமிழ்ஏடுகள் ஆற்றில் விடும்
சடங்குகள் செய்தான்.
சேயோன் மாயோன்
கவிழ்த்தான்.
சுரண்டும் வர்க்கக் கூட்டணிக்கு
மனுதர்மமாகப் புழுத்தான்!
பார்வதி பக்கமிருக்க
சிவன் தலையில்
கங்காதேவி சேர்த்துவிட்டான்.
உரிய வள்ளி இருக்க
திருமுருகனோடு
தெய்வானை கோர்த்து விட்டான்.
சிறுதெய்வங்களை எல்லாம்
ஆரிய அவதாரங்களின்
அடிப்பொடியாக்கினான்.
அறுவகைச் சமயமிருக்க
இல்லாத இந்துமதத்திற்கு
எல்லாமும் படியாக்கினான்.
சொந்த முருகனை
ஆரிய
ஸ்கந்தனாக்கினான்.
வேதக் கடவுளரை
வீசி எறிந்துவிட்டு
தமிழ்நில
பௌதீகக் கடவுளரை
பார்ப்பன முலாம் பூசி
கதையைக்
கந்தலாக்கினான்.
கோயிலென்றும்
இறையிலியென்றும்
ஆளும் வர்க்க
கூட்டுக் கொள்ளையில்
கோயில் கருவறை
தனதாக்கினான்.
தமிழ்மொழி குரல்வளை
நெறித்தான்.
சமஸ்கிருத அலறலை
ஒலித்தான்.
எதிர்த்தவரை
‘ஜோதியில்’ எரித்தான்.
முருகா..முருகா..
என உருகும்
கிருபானந்த வாரியாரை
எவன்
கருவறையில் சேர்த்தான்?
சண்முகக் கவசம் அளித்த
பாம்பன் சுவாமிகள் படத்தை
எந்தப் பார்ப்பனன்
வீட்டில் சேர்த்தான்!
இந்துக்களின்..
கல்வி ,வேலைவாய்ப்பு,
இட ஒதுக்கீடு,சிறுதொழில்,
விவசாயம்,சிறுவணிகம்,
நெசவு…
எதற்குமே போராடாதவனுக்கு
எல்லாவற்றுக்கும்
எதிரானவனுக்கு..
முருகனுடைய
வேல் எதற்கு?
உன் விரலைக் கொண்டே
உன் கண்ணைக் குத்துவதற்கு!
இப்போதைக்கு..
வேல்.
அடுத்து வரும்
ஆரிய பவனில்..
கருவாட்டுக்
கூழ்.
பலிக்கிற வரைக்கும்
‘நூல்’….!
வர்க்க சக்தியை
திரட்டாவிட்டால்..
உனது
கடவுளுக்கும்
பால் ….!
கருவறையில் சேர்த்தான்?
சண்முகக் கவசம் அளித்த
பாம்பன் சுவாமிகள் படத்தை
எந்தப் பார்ப்பனன்
வீட்டில் சேர்த்தான்!
காரணம் ?? தெரிவிக்க வேண்டுகிறேன்.
திருவாசகம் திருமந்திரம் தாயுமானவரைப்படிக்கும் பார்பனா் அல்லாத மக்கள் எத்தனை போ்.சதா பிறாமணரகளைப் பற்றியே விமா்சனம் ஏன்.அவர்களை மறக்கலாமே.
நண்பர் சுகுமார்,
உங்கள் கேள்விகளை இன்னும் சற்று தெளிவாக முன்வைக்கவும்.
பாப்பான்களை ஏன் மறக்க வேண்டும்? வரலாற்றில் அவர்கள் செய்த கொடுமைகள் கொஞ்சமல்லவே, இன்றுவரை அவர்கள் அதற்காக மன்னிப்பும் கோரியதில்லை, அந்தக் கொடூரத்தை நிருத்திக் கொள்ளவும் இல்லை. மறைமுகமாக பல்வேறு வழிகளில் தொடர்கிறார்கள். அவர்களை ஏன் மறக்கவோ, மன்னிக்கவோ வேண்டும்?